செய்திகள் :

I’m Game: ``மாஸ்டர் படத்தில் அர்ஜூன் தாஸ் கேரக்டர் எனக்குதான் வந்தது" - நடிகர் ஆண்டனி வர்கீஸ்

post image

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம் ‘ஐ அம் கேம்’. ‘ஆர்.டி.எக்ஸ்’ படப்புகழ் நஹாஸ் ஹிதாயத் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் துல்கர் சல்மானுடன் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த்திவ் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது.

ஆண்டனி வர்கீஸ்
ஆண்டனி வர்கீஸ்

அதில் கலந்துகொண்டு பேசிய மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், `` சென்னைக்கு பலமுறை வந்தாலும், நான் நடித்தப் படத்தின் விளம்பரத்துக்காக வருவது இதுவே முதல் முறை. எனக்கு தமிழ் மக்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த திரைப்படத்தின் இயக்குநர் எனக்கு நண்பர். படத்தின் என் கேரக்டர் பற்றி நான் சொல்லக் கூடாது என கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறேன். இந்தப் படத்தின் புரோடியூசர், பேமஸான நடிகர் துல்கர் சல்மான். மிகவும் நல்ல நண்பர் தாண்டி நல்ல மனிதர்.

படங்களில் காட்டுவதுபோல நான் முரடன் அல்ல. ரியல் லைப்ல நான் அப்பாவி. இந்தப் படம் பிளாக்பஸ்டர் ஆகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நான் மரியாதைக்குறிய முதல்வர் விஜய் சாரோட பெரிய பேன். மாஸ்டர் படத்தில் அர்ஜூன் தாஸ் நடித்த கதாப்பாத்திரம் முதலில் எனக்குதான் கிடைத்தது. ஆனால் என்னால் அதை அப்போது நடிக்க முடியவில்லை. அதற்கான இப்போதும் வருத்தப்படுகிறேன். ரஜினி, அஜித், சூர்யா போன்ற நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என ஆசை இருக்கிறது." என மலையாளம் கலந்த தமிழில் பேசினார்.

I’m Game: ``எனக்கு மிஷ்கின் சாரோட நடிக்க பயமா இருந்தது.!" - நடிகை சம்யுக்தா

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம் ‘ஐ அம் கேம்’. ‘ஆர்.டி.எக்ஸ்’ படப்புகழ் நஹாஸ் ஹிதாயத் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் துல்கர... மேலும் பார்க்க

I’m Game: `காந்தா படத்தில் நடித்தபோது எனக்கு அந்த பயம் இருந்தது' - துல்கர் சல்மான் ஓப்பன் டாக்

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம் ‘ஐ அம் கேம்’. ‘ஆர்.டி.எக்ஸ்’ படப்புகழ் நஹாஸ் ஹிதாயத் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் துல்கர... மேலும் பார்க்க

Pradeep Antony: "நான் தவறான ஒருவரைத் திருமணம் செய்துவிட்டேன்!" - பிரதீப் ஆண்டனி பதிவு

'வாழ்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் பிரதீப் ஆண்டனி. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்ததும் பலருக்கு நினைவிருக்கலாம். இவருக்கும் பூஜா என்பவருக்கும் கடந்த 2024-ஆம் ஆண்டு திருமணம... மேலும் பார்க்க

பசங்க : சின்னஞ்சிறு உலகம்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 20

`சினி'ஸ்கோப் 20பசங்கநமது சினிமாக்களில் வரும் குழந்தைகள் பெரும்பாலும் கதைக்கு அவசியமான வசனங்களை, அதிகப்பிரசங்கித்தனமாக பேசுவதைத்தான் பார்த்திருக்கிறோம். அப்படியொரு நிலையில், 6-ம் வகுப்பு படிக்கும் சில ... மேலும் பார்க்க

Shalini Pandey: ``அது நான் இல்ல... இது வேதனையளிக்கிறது" - AI Deepfake குறித்து நடிகை ஷாலினி பாண்டே

AI தொழிற்நுட்பம் எந்தளவு வசதிகளைக் கொடுக்கிறதோ அதே அளவு இடைஞ்சல்களையும், மன உளைச்சலையும் கொடுக்கிறது. சமீபகாலமாக Deepfake தொழிற்நுட்பம் மூலம் நடிகளைகள் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். சில மாத... மேலும் பார்க்க

``விக்ரம் வேதா, கைதி வரிசையில் சர்தார் 2..." - தன் 100வது படம் குறித்து இசையமைப்பாளர் சாம் சி.எஸ்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி நடிப்பில், ‘சர்தார் 2’ திரைப்படம் உருவாகியிருக்கிறது. இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படம் ரசிகர... மேலும் பார்க்க