செய்திகள் :

Infosys, TCS, HCL... நிறுவனங்களை சஸ்பெண்ட் செய்த US; Green Card-க்கு காத்திருப்போருக்கு அதிர்ச்சி!

post image

அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய IT ஊழியர்களுக்கு முக்கியமான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க தொழிலாளர் துறை (US Department of Labor), Infosys, Tata Consultancy Services (TCS), Wipro, HCL, Cognizant,Microsoft,Adobe  மற்றும் Capgemini உள்ளிட்ட முக்கிய IT நிறுவனங்களை Permanent Labor Certification Program (PERM) திட்டத்திலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளது.

இந்த நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களுக்கான அமெரிக்க குடியேற்ற நடைமுறைகளை தவறாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

PERM என்றால் என்ன?

PERM என்பது அமெரிக்காவில் H-1B போன்ற விசாக்களில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு நிரந்தர வசிப்பிட உரிமை (Green Card / Green Card Sponsorship) வழங்குவதற்காக நிறுவன தரப்பு (Employers) விண்ணப்பிக்கும் முக்கிய செயல்முறை.

ஒரு குறிப்பிட்ட நிரந்தர பணிக்கு தகுதியான அமெரிக்க ஊழியர்கள் கிடைக்கவில்லை என்பதையும், வெளிநாட்டு ஊழியரை நியமிப்பதால் அமெரிக்க ஊழியர்களின் சம்பளம், வேலைவாய்ப்பு மற்றும் பணிச்சூழல் பாதிக்கப்படாது என்பதையும் நிறுவனங்கள் நிரூபிக்க வேண்டும்.

அதன் பிறகே Green Card-க்கான அடுத்தடுத்த நடைமுறைகளை நிறுவனம் முன்னெடுக்க முடியும்.

infosys
Infosys - இன்ஃபோசிஸ்

என்ன suspension?

அமெரிக்க தொழிலாளர் துறை எடுத்துள்ள முடிவின்படி, பாதிக்கப்பட்ட நிறுவனங்களுடன் தொடர்புடைய புதிய PERM applications ஏற்கப்படாது; ஏற்கெனவே நிலுவையில் இருக்கும் applications-ம் process செய்யப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த suspension எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து தெளிவான காலக்கெடு அறிவிக்கப்படவில்லை.

H-1B visa ரத்து ஆகுமா?

இங்குதான் முக்கியமான விஷயம்.

H-1B visa உடனடியாக ரத்து செய்யப்படுவதில்லை. இந்த நடவடிக்கை அந்த நிறுவனங்களில் வேலை செய்யும் H-1B ஊழியர்களை உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேறச் செய்வதற்கான உத்தரவும் அல்ல.

ஆனால் H-1B போன்ற temporary work status-ல் இருந்து permanent residency அல்லது Green Card நோக்கி செல்லும் பாதையில் இருப்பவர்களுக்கு இது பெரிய தடையாக அமையலாம்.

இந்திய IT ஊழியர்களுக்கு ஏன் முக்கியம்?

Infosys, TCS, Wipro, HCL போன்ற நிறுவனங்கள் அமெரிக்காவில் ஏராளமான இந்திய IT ஊழியர்களை பணியமர்த்துகின்றன.

பல ஆண்டுகளாக அமெரிக்காவில் வேலை செய்து, Green Card மூலம் நிரந்தரமாக அங்கேயே தங்குவதற்காக காத்திருக்கும் ஊழியர்களுக்கு PERM suspension காரணமாக நிச்சயமற்ற தன்மை அதிகரிக்கலாம்.

குறிப்பாக ஏற்கெனவே PERM process-ல் இருப்பவர்களின் applications hold செய்யப்படுவதால், அவர்களின் Green Card timeline மேலும் நீளும் வாய்ப்பு உள்ளது.

டிசிஎஸ்/ஹெச்சிஎல்

அமெரிக்கா சொல்வது என்ன?

அமெரிக்க தொழிலாளர் செயலாளர் Keith Sonderling, இந்த நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை பயன்படுத்தும் முறையில் system abuse நடந்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

அவரது அறிவிப்பில் Cognizant, Infosys, Tata, Wipro, HCL, Capgemini ஆகிய IT நிறுவனங்களும், தனித்தனியாக Microsoft மற்றும் Adobe-வும் குறிப்பிடப்பட்டன.

அமெரிக்க துணை அதிபர் JD Vance, குறிப்பாக Microsoft மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 2025-ல் Microsoft சுமார் 6,000 அமெரிக்க ஊழியர்களை பணிநீக்கம் செய்ததாகவும், அதே காலகட்டத்தில் ஆயிரக்கணக்கான H-1B approvals மற்றும் PERM applications பெற்றதாகவும் அவர் கூறினார். இந்தக் குற்றச்சாட்டுகளே PERM system abuse குறித்த அரசின் நடவடிக்கைக்கு முக்கிய காரணமாக முன்வைக்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகங்களுக்கும் விசாரணை!

இந்த நடவடிக்கை IT நிறுவனங்களோடு மட்டும் நிற்கவில்லை. Harvard, Yale, Stanford உள்ளிட்ட ஒன்பது பல்கலைக்கழகங்களும் வெளிநாட்டு மாணவர்களைப் பயன்படுத்தி அமெரிக்க ஊதியத்தை குறைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. விசாரணைகளுக்கான subpoenas வழங்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளை மாளிகை
வெள்ளை மாளிகை

ஒருபுறம் அமெரிக்க வேலைவாய்ப்பை பாதுகாக்கும் நோக்கில் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மறுபுறம், அமெரிக்காவில் பல ஆண்டுகளாக வேலை செய்து Green Card-ஐ எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான இந்திய IT ஊழியர்கள் இந்த மாற்றத்தால் புதிய நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

ஒருபுறம் அமெரிக்காவில் Green Card கனவுடன் காத்திருக்கும் இந்திய IT ஊழியர்கள்… மறுபுறம் அமெரிக்க சந்தையை பெரிதும் நம்பியிருக்கும் இந்திய IT நிறுவனங்கள். இந்த PERM suspension அடுத்தகட்டத்தில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இப்போது கவனிக்க வேண்டிய விஷயமாகியுள்ளது.

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் பெரிய கோயில் மாதிரியில் இந்தி எழுத்துகள் - திமுக எதிர்ப்பால் அகற்றம்!

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் அம்ரீத் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.21 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்டு விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதில் ரயில் நிலையத்துக்குள் உள்ளே செல்ல ஒரு வழியும், வெளியே செல்ல ஒரு... மேலும் பார்க்க

முதல்வர் வருகைக்காக புதுப்பிக்கப்பட்ட மருத்துவமனை… மழைநீர் தேங்கியதால் நோயாளிகள் அவதி!

மழைநீர் தேங்கியதால் நோயாளிகள் அவதிமழைநீர் தேங்கியதால் நோயாளிகள் அவதிமழைநீர் தேங்கியதால் நோயாளிகள் அவதிமழைநீர் தேங்கியதால் நோயாளிகள் அவதிமழைநீர் தேங்கியதால் நோயாளிகள் அவதிமழைநீர் தேங்கியதால் நோயாளிகள் ... மேலும் பார்க்க

குப்பை குவியல்… துர்நாற்றம்… தூய்மை பணியாளர்கள் போராட்டத்தால் மதுரை மக்கள் அவதி!

தூய்மை பணியாளர்கள் போராட்டத்தால் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தால் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தால் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தால் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தால் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தால் தூ... மேலும் பார்க்க

பழனி அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு; ஆசிரியரை சஸ்பெண்ட் செய்யக் கோரி பெற்றோர்கள் புகார்!

திண்டுக்கல் மாவட்டம், பழனி கீரனூர் காவல் எல்லைக்குட்பட்ட மானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 120-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வு விடுமுறை ... மேலும் பார்க்க

பள்ளி குடிநீர் தொட்டிக்குள் மனிதக் கழிவு: ``மூடி மறைத்த பள்ளி நிர்வாகம்" - டிடிவி தினகரன்

திண்டுக்கல் மாவட்டம் மானூர் அரசுப்பள்ளி குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக புகார் எழுந்திருக்கிறது. இது தொடர்பாக அமமுக தலைவர் டிடிவி தினகரன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``திண்டுக்கல... மேலும் பார்க்க

பூந்தமல்லி வடபழனி மெட்ரோ: 'சரித்திரத்தில் மறைக்க முடியாத கழக அரசின் இடம்!'- ஸ்டாலின் அறிக்கை

பூந்தமல்லி - போரூர் – வடபழனி இடையேயான சென்னை மெட்ரோ வழித்தடம் அக்டோபர் 11-ஆம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ள நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், " சென்னை மெட... மேலும் பார்க்க