செய்திகள் :

Iran: "நீங்கள் தோண்டிய குழியில் இருந்து உங்களால் தப்ப முடியாது" - அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

post image

அமெரிக்காவும், ஈரானும் மீண்டும் ‘தாக்குதல்’ மோடுக்குள் சென்றிருக்கின்றன.

ஈரான் போரின் போக்கு

ஈரான் போர் பிப்ரவரி மாதக் கடைசித் தேதியில் தொடங்கியது. ஏப்ரல் மாதத்தில் தற்காலிகப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

அதன் பிறகு, ஜூன் மாதம், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

ஜூலை மாதம், ஹார்முஸ் நீர்ச்சந்தியைக் கடந்த கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது ஈரான். இதையடுத்து ஈரான், அமெரிக்கா போர் மீண்டும் தொடங்கியது.

அமெரிக்கா தாக்குதல் வழியாக எவ்வளவு நெருக்கடி கொடுத்தும், ஈரான் தொடர்ந்து பதில் தாக்குதல்கள் நடத்திக்கொண்டே இருந்தது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

பொருளாதார நெருக்கடி

இதனால், பொருளாதார ரீதியாக நெருக்கடி கொடுக்க, கடந்த மாதம், ஈரானுக்கு எதிராக ‘ஆபரேஷன் எக்கனாமிக் அவுட்காஸ்ட்டை’ அறிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

அதாவது, இந்த ஆபரேஷனின்படி, ஈரானுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகள் மீது அமெரிக்காவின் இரண்டாம் கட்ட வரி விதிக்கப்படும். இதற்கும் ஈரான் அசரவில்லை.

“அமெரிக்காவின் இந்த நகர்வு ஏற்கெனவே நாங்கள் எதிர்பார்த்தது. இதைச் சமாளிப்பதற்கான இரண்டு ஆண்டுகள் பிளான் எங்களிடம் உள்ளது” என்று தெரிவித்திருக்கிறது ஈரான் அரசு.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 30), ஈரான் ஹார்முஸ் நீர்ச்சந்தியில் கண்ணிவெடிகளை விதைக்க முயலுகிறது என்று ஈரானின் லராக் தீவுகள் மீது தாக்குதல் நடத்தியது அமெரிக்கா.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானும் அமெரிக்காவைத் தாக்கி வருகிறது.

ஈரானின் எச்சரிக்கை

அமெரிக்கா - ஈரான் தாக்குதல் குறித்து ஈரானின் உயர்மட்ட தேசிய பாதுகாப்புக் கவுன்சிலின் செயலாளர் மொஹ்சென் ரெசாய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...

மொஹ்சென் ரெசாய் பதிவு
மொஹ்சென் ரெசாய் பதிவு

“உங்களுக்கு நீங்களே தோண்டிக்கொண்ட இந்தக் குழியிலிருந்து உங்களால் தப்பவே முடியாது. இந்தத் தடுமாற்றங்களால் நீங்கள் வீழ்வது மட்டுமே நடக்கும்.

அதுமட்டுமல்லாமல், போர்க்களத்திலும், ராஜதந்திரத்திலும், பொருளாதார முற்றுகையை எதிர்கொள்வதிலும் ஈரான் கையாளப் போகும் புதிய உத்தி - உங்கள் அதிகாரத்தின் அடித்தளத்தையே தகர்த்தெறியப் போவதை நீங்கள் விரைவில் பார்ப்பீர்கள்” என்று பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் ஈரான் போர் விரைவில் முடிந்துவிடும் என்று ட்ரம்ப் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மணல் கடத்தலில் ரூ.1000 கோடி ஊழல்? - மராத்தா இட ஒதுக்கீடு போராட்டக்காரர் மனோஜ் ஜராங்கே மீது புகார்

மகாராஷ்டிராவில் மராத்தா இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வருபவர் மனோஜ் ஜராங்கே பாட்டீல். ஏற்கனவே பல முறை இதற்காக உண்ணாவிரதம் இருந்துள்ளார். தற்போது மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தற்போது மனோ... மேலும் பார்க்க

"தியாகி இமானுவேல் சேகரன், சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக தன் உயிரைத் தந்தவர்" - குடியரசு துணைத்தலைவர்

"தியாகி இமானுவேல் சேகரனைப் போன்ற தேசிய உள்ளம் கொண்ட மகத்தான மனிதர்களைப் போற்றுவது இந்தத் தேசத்திற்கே பெருமை" என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.இமானுவேல் சேகரன் நினைவிடம்வி... மேலும் பார்க்க

“சுயநலத்தை மறுத்து நாட்டின் நலனைப் பார்த்தால் தடை?” - BRICS-ல் ட்ரம்ப் மீது புதின் மறைமுகத் தாக்கு!

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டிற்காக இந்தியாவிற்கு வந்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின். இந்தியப் பிரதமர் மோடி உடனான தனிப்பட்ட சந்திப்பிற்குப் பிறகு, பிரிக்ஸ் வணிக மன்றத்தின் தலைவர்கள் அமர்வில் ப... மேலும் பார்க்க

மேற்கு வங்கம் அசைவ உணவு சர்ச்சை: கோயிலில் மீன் வறுவல் சாப்பிட்ட முதல்வர்; என்ன சொல்கிறது பாஜக?

நாட்டின் பிற பகுதிகளில், கோவிலில் அசைவ உணவு உண்பது அனுமதிக்கப்படாத ஒன்றாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் சில கோயில்களில் அசைவ உணவு போடப்படுகிறது. கோயில்களில் அசைவ உணவுக்கு இருக்கும் நடைமுறையை மாற்றும் ... மேலும் பார்க்க

BRICS: "ஒரு நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பும், பிராந்தியப் பாதுகாப்பும் தனித்தனியல்ல" - ஈரான் அதிபர்

டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளப் பல்வேறு உலகத் தலைவர்கள் இந்தியாவிற்கு வந்திருக்கிறார்கள். அதில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானும் ஒருவர். இன்று மாநாட்... மேலும் பார்க்க

"பிரிக்ஸ் தொழில்முறைக் கவுன்சிலிடம் எனக்கு 'மூன்று' வேண்டுகோள்கள்!" - BRICS மாநாட்டில் மோடி பேச்சு

தற்போது டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு உலகத் தலைவர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த ஆண்டு பிரிக்ஸ் தலைமை சுழற்சி முறையில் இந்தியாவிற்கு வந்துள்ளதால், இந... மேலும் பார்க்க