செய்திகள் :

Mecca-விற்கு வரலாற்றில் முதன்முறையாக சவூதி எச்சரிக்கை! - மெக்காவைத் தாக்கியதா ஏமனின் ஹூதி?

post image

மத்திய கிழக்கில் ஈரான் போரைத் தாண்டி சவூதி அரேபியா - ஏமனின் ஹூதிப் படைகளுக்கு இடையே கடுமையான தாக்குதல்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

ஜூலை மாதம் தொடங்கிய இந்த மோதல் போக்கு தீவிரமாக இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

ஹூதிகள் சவூதி மீது ஏவுகணைகள், டிரோன்கள் போன்ற வான்வழித் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.

முஸ்லிம்களின் புனிதத் தலங்கள் மெக்கா - மதீனா. ஹூதிகளின் வான்வழித் தாக்குதலையொட்டி, மெக்கா நகரத்திற்கு வரலாற்றிலேயே முதன்முறையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சவூதி
சவூதி

சவூதியின் எச்சரிக்கை

சவூதியின் பாதுகாப்புப் படை, “அவசரகால தேசிய முன்கூட்டிய எச்சரிக்கை மையத்திடமிருந்து உங்களுக்கு எச்சரிக்கைச் செய்தி வந்தால் உடனடியாக அருகிலுள்ள பாதுகாப்பான இடத்திற்குச் செல்லவும்.

திறந்தவெளிகள், ஜன்னல்கள் மற்றும் கண்ணாடிகளை விட்டுத் தள்ளி இருக்கவும்.

வெளியில் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள கட்டடத்திற்குள் செல்லவும்” போன்ற எச்சரிக்கையைத் தனது எக்ஸ் பக்கத்தில் சவூதியில் இருக்கும் மக்களுக்குச் சொல்லியிருந்தது.

இந்தப் பதிவு நேற்று மதியம் பதிவிடப்பட்டிருந்தது.

அடுத்த 7 நிமிடங்களிலேயே, “மெக்கா நகரில் இருந்த ஆபத்து விலகியது” என்று சவூதி பாதுகாப்புப் படை தங்களது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தது.

ஏமனின் பதில்

சவூதியின் இந்தக் கூற்று குறித்து ஹூதிகள், “மெக்கா நகர் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஏற்கெனவே பலமுறை சொல்லப்பட்ட, காலாவதியான பொய்களாகும்.

இவை இனி யாரையும் ஏமாற்றப் போவதில்லை” என்று கூறியுள்ளனர்.

`விஜய்யைவிட நன்றாக நடனமாடுகிறேன்'- வி.டி.சதீசன் EB ஊழியர்களுடன் நடனமாடும் AI வீடியோ; நீக்கிய மெட்டா!

​கேரள மாநிலத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக அவதியடைந்துவருகின்றனர். இந்த நிலையில் கேரள மின்வாரிய ஊழியர்களுடன் கேரள முதல்வர் வி.டி.சதீசன் உற்சாகமாக நடனமாடுவது போன... மேலும் பார்க்க

விஜய்சேதுபதி : `வசையாலும் மிரட்டலாலும் கருத்துரிமையை முடக்க முற்படாதீர்கள்'- சீமான் ஆதரவு குரல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பகிர்ந்த கருத்தை முன்வைத்து தவெக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் விஜய் சேதுபதியை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்... மேலும் பார்க்க

`தரையில படுக்க வைக்கிறாங்க; கேவலமா ட்ரீட் பண்றாங்க’ - திருவண்ணாமலை ஜி.ஹெச் மீது கர்ப்பிணி புகார்

திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கானோர் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். இந்த நிலையில், மகேப்பேறு வார்டில் போதிய படுக்கை வசதிகள் இல்லாதத... மேலும் பார்க்க

தாம்பரம்: ரூ.45 லட்சம் டெண்டர் முறைகேடு; மாநகராட்சி ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

முதல்வர் விஜய்யின் நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ 45,00,000 கூட்டு சதி டெண்டர் முறைகேடு நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியிருந்தது. இதுதொடர்பாக அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம்... மேலும் பார்க்க

'கழுத்தை நெரிக்கும் இணைய கூலிப்படைகள்; கட்சிப் பேதம் எல்லாம் இல்லை.!' - கடிவாளம் போடுமா தலைமைகள்?

சமீபத்தில் நடந்திருக்கும் ஒரு நிகழ்வு கருத்து சுதந்திரத்தின் மீதான பாதுகாப்பைப் பற்றி பெரும் கவலையில் ஆழ்த்துகிறது. நடிகர் விஜய் சேதுபதி தனியார் தொலைக்காட்சியில் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்க... மேலும் பார்க்க

`வெளியிலிருந்துதான் ஆதரவு' - இடைத்தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்த கம்யூனிஸ்ட் கட்சிகள்!

தமிழகத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி, இவ்விரு தொகுதிகளுக்க... மேலும் பார்க்க