செய்திகள் :

NIA: `டெல்லி செங்கோட்டை டார்கெட் இல்ல...' - கார் குண்டுவெடிப்பு குறித்த குற்றப்பத்திரிக்கை தாக்கல்

post image

கடந்த ஆண்டு நவம்பர் 10-ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. அதில் 11 பேர் பலியான நிலையில், 29 பேர் காயமடைந்தனர். இந்தக் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், NIA தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரிக்கையில், ``கடந்த ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி, வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஹூண்டாய் i20 காரில் உமர் என்பவர் சென்றிருக்கிறார். மாலை 6.37 மணியளவில் அவர் லால் மந்திர் அருகே காரை நிறுத்த முயன்றிருக்கிறார். அப்போது அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருந்திருக்கிறது.

என்.ஐ.ஏ - NIA
என்.ஐ.ஏ - NIA

இது பகுதியில் பதிவான சிசிடிவி கேமராவின் மூலம் தெரியவந்தது. மேலும், அங்கு காவல்துறைப் பாதுகாப்பும் அதிகமாக இருந்ததால், காரைத் திட்டமிட்டபடி அங்கு நிறுத்த முடியாமல் திரும்பியவர், பின்னர் காரை செங்கோட்டை நோக்கி ஓட்டிச் சென்றுள்ளார்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, செங்கோட்டையின் 4-வது நுழைவுவாயில் அருகே காரை நிறுத்தியிருக்கிறார். மாலை 6.50 மணியளவில் குண்டு வெடித்தது. கார் குண்டுவெடிப்பை நடத்துவதற்காக சிறப்பு முறையில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

மேலும், உமருடன் தொடர்புடையவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் இதர பொருட்களிலும் ஒரே வகையான ரசாயனங்கள் இருப்பது தடயவியல் பரிசோதனையில் தெரியவந்திருக்கிறது. இதன்மூலம் இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் ஒரு திட்டமிட்ட குழு செயல்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

TVK: "மதுராந்தகத்தில் திமுக வென்றால் தவெக ஆட்சி ஜனவரி மாதத்தில் கவிழும்" - ஆர்.எஸ்.பாரதி

செங்கல்பட்டு மாவட்டத்தின் மதுராந்தகம் (தனி), திருப்பூர் மாவட்டத்தின் தாராபுரம் (தனி) ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிற... மேலும் பார்க்க

9/11 Anniversary: `குப்பைத் தொட்டி டு புல்லட்' பின் லேடனை அமெரிக்கா கண்டுபிடித்துக் கொன்றது எப்படி?

இதே நாளில் 25 ஆண்டுகளுக்கு முன்பாக அந்தக் கொடூரத் தாக்குதல் நிகழ்ந்தது. அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் மீது தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதல், உலகத்தின் போக்கையே மாற்றியது. அந... மேலும் பார்க்க

BRICS 2026 மாநாடு: ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உட்பட 20 உலகத் தலைவர்கள் பங்கேற்பு

பொருளாதார வலிமை கொண்ட உலகின் முக்கிய வளர்ந்து வரும் நாடுகள் ஒன்றிணைந்து, வர்த்தகம், நிதி மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் நடத்தும் சர்வதேச உச்சிமாநாடு BRICS. 2026-ம் ஆண்டுக்... மேலும் பார்க்க

கோவை: ‘வீடும் இல்ல... மின்சாரமும் இல்ல’ - அடர்வனத்தில் அவதிப்படும் கூமாட்டி பழங்குடி கிராமம்

கோவை மாவட்டத்தில் மின்சார வசதி இல்லாத கிராமங்கள் இருக்கிறது என்றால், உங்களால் நம்ப முடியுமா?... ஆம், இருக்கிறது என்பதே கசப்பான உண்மை. ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சில பழங்குடி கிராமங்கள் இத்த... மேலும் பார்க்க

லண்டனில் அஜித் கலந்துகொள்ளும் Car Race; தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்!

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இன்று பிரிட்டன் செல்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய். இன்று முதல் வருகிற 17-ம் தேதி வரை நீளும் விஜய்யின் பயணப் பட்டியலில், இங்கிலாந்தில் இருக்கும் புகழ்பெற்ற 'சில்வர்ஸ... மேலும் பார்க்க