செய்திகள் :

Paris Cafe: ``நம் யாராலும் தவிர்க்க முடியாத முக்கியமான விஷயம்" - நடிகை அனுமோல் பேச்சு

post image

கண்மணி ரங்கநாதன் தயாரிப்பில் சரஜ் சீலன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், அனுமோல், அர்ச்சனா குமார், விஜய் விஷ்வா, சாய் விக்கி, நயனா உள்ளிட்டோர் நடித்துள்ள 'பாரிஸ் கபே' திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. இந்தப் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய நடிகை அனுமோல்,``நாங்கள் இந்தத் திரைப்படத்தின் மூலம் மிகவும் முக்கியமான ஒரு கருத்தை பேசியிருக்கிறோம். நான் எப்போதுமே ஒரு புதிய படத்தைக் கையிலெடுக்கும் போது, அதை 'முக்கியமான கருத்தைக் கொண்ட கதை' என்றே சொல்வேன்.

Paris Cafe
Paris Cafe

ஏனெனில், ஒரு கதையைக் கேட்டு நான் முழுமையாகத் திருப்தி அடைந்துவிட்டால், அந்த சப்ஜெக்ட் மக்களைப் போய்ச் சேர, ஆணித்தரமாகச் சொல்ல வேண்டும் என்று விரும்புவேன். இந்தப் படத்திலும் நம் யாராலும் தவிர்க்க முடியாத, அவ்வளவு முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசியிருக்கிறோம். இயக்குநரின் தெளிவும் நம்பிக்கையும் எனக்குக் கூடுதல் பலத்தைக் கொடுத்தது. மேலும், செட்டில் இயக்குநருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் இடையே இருந்த கெமிஸ்ட்ரி எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அவர்கள் ஒரு சிறு தலையசைப்பிலேயே புரிந்து கொள்வார்கள்.

அதேபோல இந்தப் படத்தில் பாடல்கள் அனைத்தும் மிக மிக நன்றாக அமைந்துள்ளன. குரு சோமசுந்தரம் சாருடன் ஏற்கெனவே ஒரு மலையாளப் படத்தில் பணியாற்றியிருக்கிறேன். அவர் தன்னை ஒரு ஸ்டாராக நினைக்காமல், எல்லாரையும் சமமாக நடத்தும் ஒரு நல்ல மனிதராக இருக்கிறார். அது எனக்கு அவரிடம் மிகவும் பிடித்த விஷயம்." என்றார்.

Paris Cafe: `பாரிஸ் நகரில் சிரமத்தைப் பொருட்படுத்தாமல் படப்பிடிப்பு நடத்தினோம்' - குரு சோமசுந்தரம்

கண்மணி ரங்கநாதன் தயாரிப்பில் சரஜ் சீலன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், அனுமோல், அர்ச்சனா குமார், விஜய் விஷ்வா, சாய் விக்கி, நயனா உள்ளிட்டோர் நடித்துள்ள 'பாரிஸ் கபே' திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறத... மேலும் பார்க்க

Arun Vijay: "பலத்தோடு மீண்டும் வருவேன்" - 'இருளன்' படப்பிடிப்பில் அருண் விஜய்க்கு ஏற்பட்ட காயம்

நடிகர் அருண் விஜய், இப்போது இயக்குநர் முத்தையா இயக்கத்தில் 'இருளன்' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தென் மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. எப்போதுமே அருண் விஜய் ஆக்ஷன் காட்சிகளுக்குச் சி... மேலும் பார்க்க

பருத்திவீரன் : தெற்கின் வெக்கை! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 16

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினி'ஸ்கோப் தொடர்!`சினி'ஸ்கோப் 16பருத்திவீரன்வெட்டுக்குத்துக்குப் பயப்படாத, சிறைக்குச் செல்ல அஞ... மேலும் பார்க்க

Sai Abhyankar: "கிறிஸ்டோபர் நோலன் படத்திற்கு இசையமைப்பது என் கனவு" - சாய் அபயங்கர்

சுயாதீன இசைக்கலைஞராகத் தனது கரியரைத் தொடங்கிய சாய் அபயங்கர், இன்று சென்சேஷனல் இசையமைப்பாளராக உருவெடுத்திருக்கிறார். Sai Abhyankar'இந்தியா டுடே' ஊடகத்தின் தமிழ்ப் பதிப்புத் தொடக்க விழாவில் கலந்துகொண்டவ... மேலும் பார்க்க

Ramadoss Biopic: ``அப்பா மகன் சண்டையால் கைவிடப்பட்டு, எங்கள் உழைப்பு வீண்" - இயக்குநர் சேரன் ஆதங்கம்

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு (பயோபிக்) திரைப்படம் கைவிடப்பட்டதாகவும், இதனால் தங்களின் ஒன்றரை ஆண்டு கால உழைப்பு வீணாகிவிட்டது என்றும் இயக்குநர் சேரன் ஆதங்கத்த... மேலும் பார்க்க

Dhruv Vikram: "நாம் உண்மையோடு இருந்தால்..." - சமூக வலைத்தள விமர்சனங்கள் குறித்து துருவ் விக்ரம்

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் விமர்சனங்கள் தொடர்பாக நடிகர் துருவ் விக்ரம் பேசியிருக்கிறார். 'இந்தியா டுடே' ஊடகத்தின் தமிழ்ப் பதிப்பை இன்று தொடங்கியிருக்கிறார்கள். இந்தத் தொடக்க விழாவில் கலந்துகொண்ட... மேலும் பார்க்க