செய்திகள் :

Rain Alert: இடி, மின்னலுடன் மழை; 15 மாவட்டங்களுக்கு காலை வரை அலர்ட்; சென்னைக்கு என்ன?

post image

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாள்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது.

நேற்று இரவும் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழை பெய்தது. சில இடங்களில் இன்னும் மழை தொடர்ந்துகொண்டிருக்கிறது.

இந்த நிலையில், இன்று காலை 10 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழை தொடரலாம் என்பதைச் சென்னை வானிலை ஆய்வு மையம் தரவுகளை வெளியிட்டுள்ளது.

சென்னை வானிலை மையத்தின் தரவுகள்
சென்னை வானிலை மையத்தின் தரவுகள்

சென்னை வானிலை மையத்தின் தரவுகள்

அதன்படி, 10 மணி வரை, கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, தென்காசி, தேனி, நீலகிரி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை வரை பெய்யலாம்.

செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், பெரம்பலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் லேசான மழை இருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் மழை பெய்யுமா?

நேற்று இரவு சென்னையின் பெரும்பாலான இடங்களில் நல்ல மழை பெய்தது. ஆனால், காலையில் இல்லை.

சென்னை வானிலை ஆய்வு மையமும் மழை பெய்யும் இடங்களின் தரவுகளில் சென்னை பெயரைக் குறிப்பிடவில்லை.

இதனால், வானிலை மையத்தின் தரவுகளின்படி, காலையில் சென்னையில் மழை இருக்காது என்று தெரிகிறது.

Rain Alert: ``சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழை" - வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இன்று (செப். 4)... மேலும் பார்க்க

நேபாள வெள்ளம்: ஒரே ஒரு போன் கால்; 1,643 மாணவர்களின் உயிரைக் காப்பாற்றிய தலைமையாசிரியர்!

‘விதியை மதியால் வெல்லலாம்’ என்ற பழமொழியைக் கேட்டிருப்போம். இந்தப் பழமொழிக்கான உதாரணமாகி இருக்கிறார் ராஜேந்திர ததாபி. கடந்த 26-ம் தேதி, நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பல நூறு பேர் உயிரிழந்துள்ளனர். இந... மேலும் பார்க்க

நேபாளம்: 3 நாள்களுக்கு பிறகு இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 6 வயது சிறுமி - துளிர்ந்த நம்பிக்கை!

பல நூறு பேரைக் கொன்ற நேபாள வெள்ளப் பேரிடரில் சின்ன ஆச்சர்யமும் நடந்துள்ளது. கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 26) காலை 9 மணியளவில் பனிப்பாறை சரிந்து நேபாளத்தில் கடும் வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளம் தொடங்கியதே... மேலும் பார்க்க

Nepal: "எங்கள் குழுவைச் சேர்ந்த 80 பேரின் நிலை குறித்து தெரியவில்லை!"- கண்ணீர் மல்கிய ஜக்கி வாசுதேவ்

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் நேற்று (ஆக. 26) காலை திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கால் இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக நேபாள அரசு அதிகாரபூர்வமாக தெரிவி... மேலும் பார்க்க

Nepal Flood: நிலநடுக்கம் அல்ல, பனிப்பாறை சரிவு! - காரணத்தை சொல்லும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்

நேபாளத்தில் புதன்கிழமை காலை ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த பேரழிவிற்கு நிலநடுக்கம் காரணம் என முதலில் கூறப்பட்ட நிலையில், அது ஒரு மிகப்பெரிய பனிப்பாற... மேலும் பார்க்க

Nepal Flood: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு - கலங்க வைக்கும் கோரக் காட்சிகள்! | Video

This is seriously scary. CCTV footage from Gyirong Port in Tibet, China, directly opposite Nepal’s Rasuwa district. This flash flood hit here first and later caused massive havoc in Nepal. Can’t even ... மேலும் பார்க்க