செய்திகள் :

Rashmika Mandanna: ``கண்டிப்பா என்னோட சிறந்த பங்களிப்பைக் கொடுப்பேன்" - நடிகை ரஷ்மிகா மந்தனா

post image

பாரத ரத்னா, பிரபல கர்நாடக சங்கீத பாடகி எம். எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது.

இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். ஜெர்சி, கிங்டம், மேஜிக் படங்களை இயக்கிய கெளதம் தின்னூரி இயக்க அல்லு அரவிந்த் தயாரிக்கிறார்.

எம். எஸ். சுப்புலட்சுமியின் 110வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இந்தப் படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பேசிய நடிகை ராஷ்மிகா மந்தனா, ``உங்கள் எல்லார் முன்னாடியும் பேசுறது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. இப்போ என்னோட மனசுல இருக்குற ஒரே உணர்வு நன்றி உணர்ச்சி மட்டும்தான்.

ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா

நீங்க எல்லாரும் இங்க வந்து எங்களோட சேர்ந்து அம்மாவோட இந்த ஸ்பெஷல் நாளை செலிப்ரேட் பண்ண வந்திருக்கீங்க, அதுக்கு ரொம்ப நன்றி. இன்னைக்கு நாங்க உங்களை செலிப்ரேட் பண்ணப்போறோம் அம்மா. இதைப் பார்க்கும்போது உங்க முகத்துல வர்ற அந்தச் சின்ன சிரிப்பு எனக்கு அவ்ளோ மகிழ்ச்சியைத் தரும். உங்க குரல்ல ஒரு தனித்துவமான தெய்வீக சக்தி இருக்கு. அதைக் கேட்கும்போது இறைவனின் முன்னிலையில் உக்காந்திருக்க மாதிரியான ஒரு உணர்வு எனக்கு உண்மையிலேயே ஏற்படுது.

அம்மா, உங்க வாழ்க்கையில ஒரு சின்ன பகுதியா இருக்குறதுக்கு என்னை தேர்ந்தெடுத்ததுக்காக நான் எப்பவுமே உங்களுக்குக் கடமைப்பட்டிருப்பேன். உங்களுடைய ஆசீர்வாதம், சதாசிவம் சார் ஆசீர்வாதம், சண்முகவடிவு அம்மா ஆசீர்வாதம் மற்றும் உங்க குடும்பத்தினர், நலவிரும்பிகளின் ஆசீர்வாதம் எப்போதும் என் கூடவே இருக்கட்டும். நான் கண்டிப்பா என்னோட சிறந்த பங்களிப்பைக் கொடுப்பேன்னு வாக்குறுதி தர்றேன். ஹாப்பி பர்த்டே அம்மா!" எனக் கொஞ்சும் தமிழில் பேசினார்.

"எம்.எஸ்.சுப்புலட்சுமி பாத்திரத்தில் நடிக்க இயல்பாகவே பதற்றமிருக்கும்" - ராஷ்மிகாவுக்கு கமல் தைரியம்

பாரத ரத்னா, பிரபல கர்நாடக சங்கீத பாடகி எம். எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாக உருவாகிறது.இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். ஜெர்சி, கிங்டம், மேஜி... மேலும் பார்க்க

Sigma: 'அப்பா விஜய் இந்தப் படத்தின் நிகழ்ச்சிகளில் பங்கேற்காதது ஏன்?' - ஜேசன் சஞ்சய் பதில்

லைகா தயாரிப்பில் இயக்குநராக அறிமுகமாகும் முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யின் சிக்மா திரைப்படம் உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாகவும் ஃபரியா அப்துல்லா நாயகியாகவும் நடித்துள... மேலும் பார்க்க

Mandaadi: "'பார்க்குறதுக்கு எம்.ஆர். ராதா மாதிரியே இருக்கீங்க'னு சொல்லும்போது..." - ரவீந்திரா விஜய்

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி, மஹிமா நம்பியார், சத்யராஜ், சுஹாஸ் ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கிறது 'மண்டாடி'. படத்திற்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்... மேலும் பார்க்க

ARS கார்டன் யாருக்கு? எச்சரிக்கும் சட்ட அறிவிப்பு! - அம்பிகா, ராதா குடும்பத்தில் சொத்து பிரச்னையா?

சென்னையின் பிரபல ஷூட்டிங் ஸ்பாட்டான ஏ.ஆர்.எஸ். கார்டன் வளாகத்தில் வைக்கப்பட்டிருக்கும் சட்ட அறிவிப்பு பலகை சினிமா வட்டாரத்தில் பேசு பொருளாகியிருக்கிறது.'இந்த நிலம் விற்பனைக்கல்ல, தவிர இந்த நிலம் தொடர்... மேலும் பார்க்க

Vijay Sethupathi: 'முதல் தமிழ் திரைப்படம்!' - ஹாலிவுட்டில் ரீமேக்காகும் விஜய் சேதுபதியின் 'மகாராஜா'!

ஹாலிவுட்டிலிருந்து நிறைய திரைப்படங்கள் தமிழில் நேரடியாக ரீமேக் செய்யப்பட்டிருக்கின்றன. அதனைத் தாண்டி சில படங்கள் நேரடியாக இல்லாமல், கதையில் சில விஷயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு ரீமேக் செய்யப்பட்டிருக... மேலும் பார்க்க