செய்திகள் :

`Repo வட்டி விகிதத்தை 25bps ஏற்றிய இந்திய ரிசர்வ் வங்கி' - 2023ம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறை.!

post image

இன்று நடந்த இந்திய ரிசர்வ் வங்கி கூட்டத்தில் ரெப்போ வட்டி விகித உயர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா.

சஞ்சய் மல்ஹோத்ராவின் அறிவிப்பின்படி, ரெப்போ வட்டி விகிதம் 25 பேசிஸ் புள்ளிகள் ஏற்றப்படுகிறது. இதனால், வட்டி விகிதம் 5.25 சதவிகிதத்தில் இருந்து 5.50 சதவிகிதமாக ஏறுகிறது.

2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு, இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்துவது இதுவே முதல்முறை.

சஞ்சய் மல்ஹோத்ரா
சஞ்சய் மல்ஹோத்ரா

2023 டு இப்போது வரை...

2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 6.50 சதவிகிதமாக உயர்த்தியது.

இதே வட்டி விகிதம் தான் 2023-24 நிதியாண்டில் தொடர்ந்தது.

அதன் பிறகு, இதுவரை ரெப்போ வட்டி விகிதத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து வந்தது இந்திய ரிசர்வ் வங்கி.

ரெப்போ வட்டி விகித உயர்வுக்குக் காரணம் என்ன?

“செப்டம்பர் மாதத்தில் மேற்கு ஆசிய மோதல் திடீரென மீண்டும் தீவிரமடைந்ததும், அதன் காரணமாக உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களும் கடுமையும்,

உலகப் பொருளாதார உணர்வுகளைப் பெரிதும் பாதித்து, நிதிச் சந்தைகளில் கடுமையான பதற்றத்தையும் நிலையற்ற தன்மையையும் அதிகரித்துள்ளன” என்று சஞ்சய் மல்ஹோத்ராவின் தொடக்கப் பேச்சே காரணத்தைக் கூறிவிடுகிறது.

'குட் நியூஸ்' வேலைநிறுத்தம் இல்லை: வங்கிகள் தொடர்ந்து செயல்படும்! 'திடீர்' முடிவுக்கு காரணம் என்ன?

இன்று (செப்டம்பர் 28) முதல் வருகிற செப்டம்பர் 30-ம் தேதி வரை மூன்று நாள்களுக்கு வங்கிப் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான சங்கங்கள் வேலைநிறுத்தத்தை அறிவித்திருந்தனர். ஆனால், இப்போது இந்த வேலைநிறுத்த... மேலும் பார்க்க

”தனியார் வங்கியில் 300 எனில், பொதுத்துறை வங்கிகளில் 3000 வாடிக்கையாளர்கள்” - வங்கி ஊழியர்கள் சங்கம்

வங்கி ஊழியர்கள், வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை என்ற ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். வேலைப்பளு காரணமாக மாதத்தின் அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை அளிக்க வேண்ட... மேலும் பார்க்க