செய்திகள் :

RTI விவகாரம்: "எல்லா GO-வையும் ஒளித்து வைப்பது ஏன்?" - தவெக அரசுக்கு உதயநிதி கேள்வி

post image

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தகவல் சரிபார்ப்பகம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அப்பதிவில், "தகவல் சரிபார்ப்பகம் குறித்த தகவல்கள், தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வழங்கப்படாது என்று இந்த டம்மி அரசு பம்மி நிற்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

பொய்ச்செய்திகளுக்கு எதிராகப் போரிட, கழக ஆட்சியின்போது தகவல் சரிபார்ப்பு தொடர்பான சர்வதேச அளவிலான நிறுவனங்களில் பங்களிப்புச் செய்த அனுபவம் கொண்டவர்களைக் கொண்டு TN Fact Check Unit தொடங்கப்பட்டது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

அதனை இன்றைய சர்க்கஸ் சர்க்கார், Virtual Abusers - கும்பலைக் கொண்டு Information Integrity Desk என்று மாற்றி இருக்கிறது.

இதற்காக வெளியிடப்பட்ட அரசாணை எங்கே? இதில் யார் யாரெல்லாம் பொறுப்பில் உள்ளார்கள்? என்னென்ன பணிகளைச் செய்கிறார்கள் ? இதற்கான நிதி ஒதுக்கீடு என்ன? என்ற கேள்விகளை எல்லாம் RTI மூலம் ஜீவிதா என்பவர் கேட்டுள்ளார்.

ஆனால், அவர் RTI மூலம் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் கூற முடியாது என்று இந்த அரசு கடிதம் கொடுத்துள்ளது.

Transparent Governance-ஐ தருவேன் என்று வாயால் வடை சுட்ட முதலமைச்சர், தன்னுடைய Advisors நியமனம் முதல், தகவல் சரிபார்ப்பக பொறுப்பாளர்கள் தேர்வு வரை எல்லா GO-வையும் ஒளித்து வைப்பது ஏன்?

ரசிகர்கள் என்ற போர்வையில் பொய்களைப் பரப்பி - ஆபாசத் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த தகுதியற்ற இணையக் கூலிப்படைக்கு அந்தப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது அம்பலமாகிவிடும் என்பதாலா?

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

உண்மை எது - பொய் எது என்று சொல்லும் தகவல் சரிபார்ப்பகம் பற்றிய தகவல்களே மக்களுக்குத் தெரியாமல் இருப்பது நல்லதல்ல.

உண்மையை நீண்ட நாள் பொத்தி வைக்க முடியாது என்பதை உணர்ந்து இந்த Dummy அரசு தகவல் சரிபார்ப்பகம் பற்றிய தகவல்களை உடனடியாக வெளியிட வேண்டும்" என்று விமர்சித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

மதம் மாறிய முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு மறுப்பு: “ஒடுக்குமுறை மத அடிப்படையிலானதல்ல” - மு.வீரபாண்டியன்

சமீபத்தில் உச்ச நீதிமன்றம், “முன்பு பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருந்து, இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்களுக்குப் பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைக்கும் இடஒதுக்கீடு கிடையாது” என்று தீர்ப்பளித்திருந்தது.இந்... மேலும் பார்க்க

Vijay: முதலமைச்சர் விஜய்யின் கேரளப் பயணம் திடீர் ரத்து; காரணம் என்ன?

கோவை காந்திபுரம் பகுதியில் ரூ.301 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பெரியார் அறிவுலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று திறந்து வைத்தார். இதற்கு முன்னதாக கோவை விமான நிலையத்தில் இருந்து காந்திபுரம... மேலும் பார்க்க

"அண்ணன் திருமாவளவனுக்கு இருப்பது வன்மம், பொறாமை" - இடும்பாவனம் கார்த்திக் காட்டம்

இடைத்தேர்தல் தோல்வியால் நாம் தமிழர் கட்சி சோர்ந்துவிடவில்லை, நம்பிக்கையோடுதான் பயணிக்கிறோம் என்கிறார் அக்கட்சியின் முக்கியப் பொறுப்பாளர் இடும்பாவனம் கார்த்திக். தொடர்ந்து அவரிடம் பேசுகையில்...தாராபுரம... மேலும் பார்க்க

பெரியார் நூலகம்: 'Cheap CM-இன் Sticker ஆட்சியில்.!'- முதல்வரை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்

கோவையின் புதிய அடையாளமாக ரூ. 300 கோடியில் கட்டப்பட்டிருக்கும் பெரியார் அறிவு நூலகத்தை கோவையில் இன்று (அக்.16) முதல்வர் விஜய் திறந்து வைத்திருக்கிறார். இந்நிலையில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மு... மேலும் பார்க்க

``ஆம், ஆட்சி மாற்றம்தான் எங்கள் விருப்பம்" - பிரசாந்த் பூஷண் அதிரடி

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டத்தின் உண்மையான நோக்கம் நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் என பா.ஜ.க குற்றம்சாட்டி வருகிறது.தேர்தல் முறைகேடுகள், எஸ்.ஐ.ஆர் விவகாரம் உள்ளி... மேலும் பார்க்க

'மக்கள் சமூக அந்தஸ்துக்காக பொன்னி அரிசி சாப்பிடுகிறார்கள்!' - அமைச்சர் வெங்கட்ரமணன் சர்ச்சை

தமிழகத்தில் விலைவாசி உச்சத்தை தொட்டிருக்கிறது. குறிப்பாக, அரிசியின் விலை எக்கச்சக்கமாக உயர்ந்திருப்பதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அரிசி விலை உயர்வு பற்றி பேசிய அமைச்சர் வெங்கட்ரமணன... மேலும் பார்க்க