`திருப்பரங்குன்றம் மலை உச்சி தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம்!' - உச்ச நீதிமன்றம...
Samantha: ''எங்கள் இதயங்கள் இதுவரை இல்லாத அளவுக்கு மகிழ்ச்சியில்...'' - ஆண் குழந்தைக்கு தாயான சமந்தா
நடிகை சமந்தாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. சமந்தாவுக்கும், இயக்குநர் ராஜ் நிடிமோருவுக்கும் கடந்த 2025-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்குப் பிறகு, இந்தாண்டு ஜூன் மாதம், தன்னுடைய 'மா இன்டி பங்காரம்' பட விழாவில், தான் கர்ப்பமாக இருப்பதைச் சமந்தா அறிவித்தார். தனது கர்ப்பகாலத்தின் ஒவ்வொரு தருணத்தையும் தொடர்ந்து மூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தார் சமந்தா.
இந்நிலையில், நேற்றைய தினம் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்தத் தகவலைச் சமூக வலைதளப் பக்கம் மூலமாக அறிவித்திருக்கிறார் சமந்தா. இவர்களின் குழந்தைக்குத் தேவ் நிடிமோரு எனவும் பெயர் சூட்டியிருக்கிறார்.
இது குறித்துப் பதிவிட்டிருக்கும் சமந்தா, "எங்களின் அழகான ஆண் குழந்தை பெயர் - தேவ் நிடிமோரு. எங்கள் இதயங்கள் இதுவரை இல்லாத அளவுக்கு மகிழ்ச்சியில் திளைக்கின்றன" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார். சமந்தாவுக்கும் இயக்குநர் ராஜ் நிடிமோருவுக்கும் ரசிகர்களும், திரைத்துறையினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.















