செய்திகள் :

Suriya - Jyothika: "நாங்கள் வீட்டில் திரைப்படங்களைப் பற்றிப் பேசுவதில்லை!" - சூர்யா - ஜோதிகா

post image

சூர்யா - ஜோதிகா தம்பதி, தங்களின் திருமண வாழ்வில் 20 ஆண்டுகளை நிறைவு செய்யவிருக்கிறார்கள். அதையொட்டி அவர்கள் இருவரும் இணைந்து 'ஹாலிவுட் ரிப்போர்ட்டர்' ஊடகத்திற்குப் பேட்டியளித்திருக்கிறார்கள்.

அந்தப் பேட்டியில் அவர்களுடைய குழந்தைகள் பற்றியும், அவர்களின் ஆர்வம் பற்றியும் பகிர்ந்திருக்கிறார்கள்.

Suriya - Jyothika
Suriya - Jyothika

அதில் சூர்யா பேசுகையில், "நாங்கள் வீட்டில் திரைப்படங்களைப் பற்றிப் பேசுவதில்லை" என்றாதும் ஜோதிகா, "குழந்தைகளுக்கு அதில் ஆர்வமே இல்லை. யாராவது புகைப்படம் எடுத்தால் கூடச் சங்கடப்படுவார்கள்.

நேர்மையாகச் சொல்ல வேண்டுமென்றால், அவர்கள் ரொம்பத் தெளிவான குழந்தைகள் என ஒரு தாயாக நான் பெருமையுடன் சொல்வேன். சூர்யாவின் குடும்பம் மிகவும் பாரம்பரியமானது. ஒரு அருமையான குடும்பம்.

அவர்கள் எப்போதும் உதவிகள் செய்து வருபவர்கள். குழந்தைகள் அதைப்பார்த்தே வளர்ந்திருக்கிறார்கள். சென்னைக்கே உரிய அந்த எளிமையையும் பார்த்து வளர்ந்தார்கள். நாங்கள் மும்பைக்கு வந்தபோதும், அவர்களுக்கு மும்பை ரொம்பப் பிடித்துவிட்டது.

அங்குள்ள சூழல், புதிய மனிதர்களைச் சந்திப்பது எல்லாம் அவர்களுக்குப் பிடித்திருந்தது. அவர்கள் தங்களுக்கான நல்ல நண்பர்களையும் சரியாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டார்கள்.

Suriya - Jyothika
Suriya - Jyothika

எங்களுடைய மகள் தியா ஒரு ஆவணப்படத்தை எடுத்திருந்தார். ஆனால், அவருக்குத் திரைத்துறையில் ஆர்வமில்லை. அவர் அமெரிக்காவில் கல்லூரியில் சேர்வதற்காக புரொஃபைல் தயாரித்துக் கொண்டிருந்தார்.

அந்த ஆவணப்படத்திற்கான முழுப் படப்பிடிப்பையும் அவரே தனியாகச் செய்து முடித்தார். கேமரா கருவிகளைக் கொண்டு செல்ல எங்களுடைய கார் மட்டும்தான் எங்களிடம் அவர் கேட்டார். பிறகு, அனைத்தையும் அவரே திட்டமிட்டுச் செய்தார். இது எங்களுக்கு ரொம்பவே பெருமையாக இருந்தது" எனப் பகிர்ந்துகொண்டார்.

Akshara Haasan: "அதை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது!" - அக்ஷரா ஹாசன்

நடிகர் கமல்ஹாசனின் இளைய மகளான அக்ஷரா ஹாசன் நடித்திருக்கும் 'சிமுலேக்ரா' (Simulacra) திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் நேரடியாக வெளியானது. இந்தப் படத்திற்காக அளித்த நேர்காணல் ஒன்றில் தனது பெற்றோரின் கலைப... மேலும் பார்க்க

மும்பை எக்ஸ்ப்ரஸ் : க்ரே(ட்) காமெடி! | `சினி'ஸ்கோப் 12

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினி'ஸ்கோப் தொடர்!`சினி'ஸ்கோப் 12மும்பை எக்ஸ்ப்ரஸ்மூன்று உத்தமமான ஏழைகள், ஒரு சிறுவனைக் கடத்திவ... மேலும் பார்க்க

Kaadhal Saranya: ``பசிக்கு அன்னதானம் சாப்பிட்டிருக்கேன்; அன்று ஒரு யாசகர் செய்த உதவியால்..."- சரண்யா

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான சரண்யா, 2004-ம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான 'காதல்' படத்தில் ஹீரோயின் சந்தியாவுக்கு தோழியாக நடித்து ரசிகர்களிடத்தில் பிரபலமானார். தொடர்ந்து எஸ்... மேலும் பார்க்க

Madhavan: 'நூலகம் முதல் ஹைட்ரோபோனிக் தோட்டம் வரை!' - மாதவன் வசிக்கும் ரூ. 17.5 கோடி மும்பை வீடு

பிரபலங்களின் வீடுகள் எப்படி இருக்கும் என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ள எல்லோருக்கும் ஆர்வமிருக்கும். அதனால்தான் செலிபிரிட்டிகளின் ஹோம்டூர் வீடியோக்கள் எப்போதும் ட்ரெண்ட் ஆகும். அப்படிதான் மாதவனின் வீடு ... மேலும் பார்க்க

Dare Devil: தயாரிப்பாளராகும் ஷாலினி அஜித்குமார்; நீண்ட காத்திருப்புக்குப் பிறகு AK64 அப்டேட்!

நடிகர் அஜித்குமாருக்குக் கடந்தாண்டு 'குட் பேட் அக்லி' படம் வெளியாகியிருந்தது. ஆனால், அந்தப் படத்திற்குப் பிறகு அஜித் நடிக்கும் படங்கள் எதுவும் தொடங்கப்படவில்லை. ரேஸிங் பக்கமே முழு கவனம் செலுத்தி வந்தா... மேலும் பார்க்க

Kaadhal Saranya: ``என்னை Abuse பண்ணவனை நேரில் பார்த்தபோ அவன்ட இததான் நான் கேட்டேன்" - நடிகை சரண்யா

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான சரண்யா, 2004-ம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான 'காதல்' படத்தில் ஹீரோயின் சந்தியாவுக்கு தோழியாக நடித்து ரசிகர்களிடத்தில் பிரபலமானார். தொடர்ந்து எஸ்... மேலும் பார்க்க