செய்திகள் :

TN Assembly : ``எங்க தலைமுறையில் முதல் முறையாக ஒரு Mondayக்காக ஆவலோடு காத்திருக்கிறோம்!" - அமைச்சர் ராஜ் மோகன் | Live

post image

சட்டமன்றம்: முதலவர் விஜய் பதிலுரை!

சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், கடந்த செப்டம்பர் 4, 5 மற்றும் 6-ஆம் தேதி ஆகிய மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வந்தது. விடுமுறைக்கு பிறகு சட்டசபை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடுகிறது. கேள்வி நேரம் இன்று கிடையாது என ஏற்கனவே சபாநாயகர் அறிவித்துவிட்டார். இந்த நிலையில், அரசினர் சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்து வைக்கப்பட உள்ளது.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்கள் ஆளும் அரசை நோக்கி பல்வேறு கேள்விகளை முன்வைத்திருந்தனர். அதற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய், ``உறுப்பினர்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் அதற்கான தெளிவான விளக்கத்தை திங்கட்கிழமை அளிக்கிறேன். தற்போது நான் இங்கே இல்லை என்றாலும் யார்-யார் என்ன கேள்விகள் கேட்கிறார்கள் என்ற தகவல் எனக்கு வந்துவிடும். எல்லாவற்றிற்கும் தெளிவான பதில் சொல்வேன். தற்போது உங்கள் சார்பாக அவர்களிடம் உத்தரவாதம் ஒன்றை கேட்கிறேன். அப்போது அவர்கள் (தி.மு.க.) யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது" என்று கூறிவிட்டு சட்டசபையை விட்டு வெளியேறிவிட்டார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இந்த நிலையில், 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடுகிறது. இன்றைய தினம், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் பேச இருக்கிறார். குறிப்பாக, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதில் அளிக்க இருப்பதால், சட்டசபையில் இன்றும் அனல் பறக்கும் என்று தெரிகிறது.

இதற்கிடையில், தவெக அமைச்சர் ராஜ் மோகன் தன் எக்ஸ் பக்கத்தில், ``எல்லோரும் பொதுவாய் Sundayக்காக காத்திருப்பாங்க.. எங்க தலைமுறையில் முதல் முறையாக ஒரு Mondayக்காக ஆவலோடு காத்திருக்கிறோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

50 ஆண்டுகால அவதி... சுமார் 1 கிலோ மீட்டர் சாலைக்காக அலையும் எம்.செட்டிப்பட்டி மக்கள் !

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டத்துக்குட்பட்ட எம்.செட்டிப்பட்டி கிராமத்தில் சுமார் 25-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகிலேயே அமைந்திருந்தாலும், இந்த வீடுகளுக்குச் செல்... மேலும் பார்க்க

எஸ்.எஸ்.சிவசங்கர் : `மோசடி புகாரால் சட்டமன்றத்துக்கு ஆப்சென்டா?' - பின்னணி என்ன?

திமுக-வின் முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர். இவர் தற்போது குன்னம் தொகுதி எம்.எல்.ஏ-வாகவும், அரியலூர் மாவட்ட செயலாளராகவும் இருக்கிறார். நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் சில தினங்கள் மட்டுமே கலந்து க... மேலும் பார்க்க

IUML: ``கோடி கோடியாய் கொண்டு வந்து கொடுத்தார்கள்" - எம்.எல்.ஏ பேச்சும் - பொதுச் செயலாளர் விளக்கமும்!

திருவண்ணாமலையில் நடந்த கட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஐ.யூ.எம்.எல் எம்.எல்.ஏ சையத் பாரூக் பாஷா, ``என்னையும், அமைச்சர் ஷாஜகானையும் தேடி கோடி, கோடியாக பணம் கொண்டு வந்து, ஆதரவு கொடுங்கள்... கையெழுத்து... மேலும் பார்க்க

தவெக நிர்வாகி கொலை: `ஆளுங்கட்சியினருக்கே பாதுகாப்பில்லாத அவல ஆட்சி!' - நயினார் நாகேந்திரன் விமர்சனம்

சென்னை அடையாறு சாஸ்திரி நகர் வண்ணாந்துறைப் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். அ.தி.மு.க-வில் 174வது தெற்கு வட்டக் செயலாளராக இருந்த கண்ணன், சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி த.வெ.க-வில் சேர்ந்து பணியாற்றி ... மேலும் பார்க்க