செய்திகள் :

TVK: "விஜய்யுடன் ராகுல் காந்தி இணைந்து பிரசாரம் செய்திருந்தால்..." - கிரிஷ் சோடங்கர் சொல்வது என்ன?

post image

நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில், த.வெ.க அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது.

ஆனாலும் தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை த.வெ.கவிற்குக் கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 118 தொகுதிகளை தனிக் கட்சியாக வென்றால் மட்டுமே தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைக்க முடியும்.

தவெக விஜய்
தவெக விஜய்

ஆனால் தனிக்கட்சியாக 108 இடங்களை மட்டுமே த.வெ.க வென்றுள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை கட்சி பெறாததால், ஆதரவு அளிக்க காங்கிரஸை த.வெ.க நாடியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்நிலையில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் PTI-க்குப் பேட்டி அளித்திருக்கிறார். அதில், "தமிழகத்தில் ராகுல் காந்திக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.

அவர் விஜய்யுடன் இணைந்து தேர்தல் பிரசாரம் செய்திருந்தால், அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தமிழகத் தேர்தலில் 180-190 இடங்கள் வரை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றிருக்க முடியும் என்று காங்கிரஸ் உள்ளூர் மற்றும் அடிமட்டத் தலைவர்கள் பரிந்துரைத்தனர்.

இருப்பினும், 'இந்தியா' கூட்டணி மற்றும் தி.மு.க எங்களின் நீண்ட கால மற்றும் நம்பிக்கைக்குரிய கூட்டணி என்பதால், த.வெ.க சிறப்பாகச் செயல்படும் என்று தெரிந்தே தி.மு.க கூட்டணியில் தொடர தலைமை முடிவெடுத்தது.

கிரிஷ் சோடங்கர்
கிரிஷ் சோடங்கர்

எங்கள் கட்சித் தொண்டர்களும் வாக்காளர்களும் இதனால் அதிருப்தி அடைந்தனர், அதன் காரணமாகவே அவர்கள் த.வெ.க-வை நோக்கி நகர்ந்திருக்கின்றனர்.

மக்களின் இந்தத் தீர்ப்பு ஒரு மாற்றத்திற்கான தீர்ப்பு. எனவே, தமிழக மக்கள் வழங்கிய தீர்ப்பிற்கு நாம் தலைவணங்க வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.

Stalin: "விஜய் ஆட்சி அமைக்கட்டும்; திமுக தொந்தரவு செய்யாது" - சர்ச்சைகளுக்கு ஸ்டாலின் முற்றுப்புள்ளி

திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைக்கப் போகிறது... அதிமுக ஆளும் கட்சியாகச் செயல்பட, திமுக எதிர்க்கட்சியாகச் செயல்படும்... முதலமைச்சர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான்... தவெக தலைவர் விஜய்க்... மேலும் பார்க்க

ரெசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள்; விஜய்யின் பாதுகாப்பு விலக்கு! - அமைகிறதா திமுக - அதிமுக கூட்டணி? | Live

'திமுக எதிர்க்கட்சிதான்!'திமுக - அதிமுக கூட்டணி என பரவி வரும் நிலையில் திமுக எம்.பி கலாநிதி வீராசாமி 'திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும்' என ட்வீட் செய்திருக்கிறார்.திமுக முன்னாள் எம்.பியின் ட்வீட்!தி... மேலும் பார்க்க

'விலக்கப்பட்ட விஜய்யின் கான்வாய் பாதுகாப்பு?; கூட்டு சேரும் திமுக - அதிமுக?' - நிலவரம் என்ன?

சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்திருந்த நிலையில், ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமைக் கோரி விஜய் கடிதம் கொடுத்திருந்தார். இந்நிலையில், விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த கான்வாய் பாதுகாப்பு... மேலும் பார்க்க

விஜய்க்கு எதிராக திமுக - அதிமுக கூட்டு? திரை மறைவில் நகர்த்தப்படும் காய்கள்! - பின்னணி என்ன?

ஆளுநரை சந்தித்து தவெக தலைவர் விஜய் நாளை ஆட்சியமைக்க உரிமைக் கோரிய நிலையில், ஆளுநர் இன்னமும் எந்த முடிவையும் சொல்லவில்லை. தவெகவிடம் பெரும்பான்மைக்கான 118 எம்.எல்.ஏக்கள் யாரென ஆளுநர் பட்டியல் கேட்டதாகவு... மேலும் பார்க்க

PM SHRI திட்டம்: `புதிய கல்விக் கொள்கையில் தமிழ்நாடு அரசின் முடிவென்ன?' - கடிதம் எழுதிய மத்திய அரசு!

மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ (PM SHRI) திட்டத்தில் இணையுமாறு தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சகம் மீண்டும் கடிதம் எழுதியுள்ளது. தேசியக் கல்விக் கொள்கையின் (NEP 2020) ஒரு பகுதி... மேலும் பார்க்க