செய்திகள் :

UPI பரிவர்த்தனைகளுக்கு ரூ.2,000 வரை 'நோ' கட்டணம் - மத்திய அரசு விளக்கம்; அதற்கு மேல்?

post image

காசு, பணத்தையெல்லாம் மறந்து, டிஜிட்டல் பேமென்ட்டுக்கு பெரும்பான்மையான இந்தியர்கள் மாறி பல காலமாகிவிட்டது.

இந்த நேரத்தில், யுபிஐ பேமென்ட்டுகளுக்குக் கட்டணம் என்கிற பேச்சு எழுந்து, இந்திய மக்களிடம் ஒரு ‘ஜெர்க்’ஐ ஏற்படுத்தியுள்ளது.

இந்த யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் என்பது குறித்து மத்திய அரசு அறிக்கை ஒன்றின் மூலம் விளக்கம் அளித்துள்ளது.

நேற்று (செப்டம்பர் 14), மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,

“2007-ஆம் ஆண்டின் செலுத்துதல் மற்றும் தீர்வு முறைகள் சட்டத்தின் பிரிவு 10A வழங்கும் அதிகாரங்களின் கீழ்,

> RuPay வழியிலான டெபிட் கார்டு பரிவர்த்தனைகள்,

நிதி அமைச்சகம் தெளிவுரை
நிதி அமைச்சகம் தெளிவுரை

> ரூ. 2,000 வரையிலான யுபிஐ (UPI) பரிவர்த்தனைகள்.

இந்த இரண்டு வகையிலும் பணம் செலுத்துபவர் அல்லது பணத்தைப் பெறுபவர் மீது எந்தவொரு வங்கியோ அல்லது சேவை வழங்கும் அமைப்போ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவொரு கட்டணத்தையும் விதிக்கக் கூடாது.”

இதனால், ரூ.2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் இல்லை என்பதில் ‘ஹேப்பி அண்ணாச்சி’யாக இருந்துகொள்ளலாம். இதற்கு மேலான பரிவர்த்தனைகளுக்குக் கட்டணங்கள் உண்டா என்பதற்கான எந்தத் தெளிவான விளக்கமும் இல்லை.

இடைத்தேர்தல்: "கனத்த இதயத்துடன் ஏற்கிறோம்" - இடதுசாரிகளின் முடிவு குறித்து மாணிக்கம் தாகூர்

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் இன்று (செப்.15) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.அப்போது அவரிடம் இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்து போட்டியிடுவது குறித்து கேள்வி எழுப்... மேலும் பார்க்க

"மதுவிலக்கு துறையில் தவறு செய்பவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை" - அமைச்சர் விக்னேஷ் உறுதி

கோவை - பொள்ளாச்சி சாலையில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் அமைச்சர்கள் மதன்ராஜா, விக்னேஷ் ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் மதன்ராஜா, ... மேலும் பார்க்க

`விஜய் சேதுபதியின் விமர்சனத்திற்கு பதில் சொல்ல தேவையில்லை; பார்வையாளர்களைக் கவர...'- அமைச்சர் சம்பத்

கோவை மாநகராட்சி வ.உ.சி. மைதானம் அருகே உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. இதனை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார்... மேலும் பார்க்க

தாராபுரம் இடைத்தேர்தல்: வரிசை கட்டும் பெண் வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் பிரசாரக் களம்!

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற இருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் தாராபுரம் தனி தொகுதியி... மேலும் பார்க்க

BRICS: ஒன்றுகூடிய இந்தியா, சீனா, ரஷ்யா; ட்ரம்பிற்கு சொல்லும் Lesson! De Dollarisation புது வடிவிலா?

இந்தியாவின் தலைமையின் கீழ், டெல்லியில் 18-வது பிரிக்ஸ் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், தென்னாப்பிரி... மேலும் பார்க்க

"சினிமாவில் நடித்தவர் இப்போது மக்கள் முன் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார்"- விஜய் குறித்து டிடிவி

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்னையில் இன்று (செப்.15) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.அதற்கு பதிலளித்த... மேலும் பார்க்க