செய்திகள் :

Vijay: முதலமைச்சர் விஜய்யின் கேரளப் பயணம் திடீர் ரத்து; காரணம் என்ன?

post image

கோவை காந்திபுரம் பகுதியில் ரூ.301 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பெரியார் அறிவுலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று திறந்து வைத்தார்.

இதற்கு முன்னதாக கோவை விமான நிலையத்தில் இருந்து காந்திபுரம் வரை விஜய் ரோடு ஷோ வந்த நிலையில், பொதுமக்கள் மற்றும் த.வெ.க-வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் அவிநாசி சாலையில் உள்ள பி.ஆர்.எஸ். மைதானத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் விஜய், கேரளம் மாநிலத்தில் உள்ள திருச்சூர் பகுதியில் நடைபெறும் நவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டு இருந்தார்.

இதனிடையே மதிய நேரத்தில் கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக மோசமான வானிலை நிலவியதால், முதலமைச்சர் விஜய்யின் கேரளப் பயணம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து பெரியார் அறிவுலகத்தில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு முதலமைச்சர் விஜய் சென்றபோது, மீண்டும் ரோடு ஷோ சென்றார்.

விஜய்
விஜய்

அப்போது மழை பெய்த நிலையிலும் பொதுமக்கள் மற்றும் த.வெ.க-வினர் கலைந்து செல்லாமல் இருந்தனர். வாகனத்தில் குடை பிடித்தபடி சென்ற விஜய், சாலையில் இரண்டு புறமும் காத்திருந்தவர்களை நோக்கி கையசைத்தபடி சென்றார். பின்னர் கோவை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றார்.

10 விநாடிகளில் டிரோன்களை வீழ்த்தும் துப்பாக்கிகள்... டெண்டர் கோரிய தமிழ்நாடு காவல்துறை

குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர் போன்றோரின் பாதுகாப்புகளை உறுதி செய்யும் பொருட்டு ட்ரோன்களை வீழ்த்தும் வகையில் ஆன்டி ட்ரோன் துப்பாக்கிகளை வாங்க தமிழக காவல்துறை திட்டமிட்டிருக்கிறது. ட்ரோன் கேமராதா... மேலும் பார்க்க

அமெரிக்கா: கோயிலில் திரண்டிருந்த இந்தியர்கள்; துப்பாக்கி வேலை செய்யாததால் தடுக்கப்பட்ட விபரீதம்

அமெரிக்காவில் சிகாகோவிற்கு அருகில் உள்ள இல்லினாய்ஸ் மாகாணத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயில்.வழக்கம் போல, கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11), அந்தக் கோயிலின் நடை திறக்கப்பட்டு, பூஜைகள் ஆகிக... மேலும் பார்க்க

மதம் மாறிய முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு மறுப்பு: “ஒடுக்குமுறை மத அடிப்படையிலானதல்ல” - மு.வீரபாண்டியன்

சமீபத்தில் உச்ச நீதிமன்றம், “முன்பு பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருந்து, இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்களுக்குப் பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைக்கும் இடஒதுக்கீடு கிடையாது” என்று தீர்ப்பளித்திருந்தது.இந்... மேலும் பார்க்க

RTI விவகாரம்: "எல்லா GO-வையும் ஒளித்து வைப்பது ஏன்?" - தவெக அரசுக்கு உதயநிதி கேள்வி

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தகவல் சரிபார்ப்பகம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில், "தகவல் சரிபார்ப்பகம் குறித்த தகவல்கள், தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வழங்கப்படாது... மேலும் பார்க்க

"அண்ணன் திருமாவளவனுக்கு இருப்பது வன்மம், பொறாமை" - இடும்பாவனம் கார்த்திக் காட்டம்

இடைத்தேர்தல் தோல்வியால் நாம் தமிழர் கட்சி சோர்ந்துவிடவில்லை, நம்பிக்கையோடுதான் பயணிக்கிறோம் என்கிறார் அக்கட்சியின் முக்கியப் பொறுப்பாளர் இடும்பாவனம் கார்த்திக். தொடர்ந்து அவரிடம் பேசுகையில்...தாராபுரம... மேலும் பார்க்க

பெரியார் நூலகம்: 'Cheap CM-இன் Sticker ஆட்சியில்.!'- முதல்வரை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்

கோவையின் புதிய அடையாளமாக ரூ. 300 கோடியில் கட்டப்பட்டிருக்கும் பெரியார் அறிவு நூலகத்தை கோவையில் இன்று (அக்.16) முதல்வர் விஜய் திறந்து வைத்திருக்கிறார். இந்நிலையில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மு... மேலும் பார்க்க