செய்திகள் :

Wushu-வில் வெள்ளி; Shooting-ல் வெண்கலம் - Asian Games-ல் தொடரும் இந்தியாவின் பதக்க வேட்டை! | Roundup

post image

ஆசிய விளையாட்டுப் போட்டியின் 6-வது நாளில் இந்தியாவுக்கு உஷு (Wushu) மற்றும் ஷூட்டிங் (Shooting) போட்டிகளில் பதக்கங்கள் கிடைத்துள்ளன. மகளிர் 60 கிலோ பிரிவில் நௌரீம் ரோஷிபினா தேவி வெள்ளிப் பதக்கம் வென்ற நிலையில், மிக்ஸ்டு ஸ்கீட் டீம் பிரிவில் அனந்த்ஜீத் சிங் நருகா மற்றும் பரிநாஜ் தலிவால் இணை வெண்கலம் வென்று அசத்தியுள்ளது. இதனுடன் ஹாக்கி, கபடி, ஸ்குவாஷ் உள்ளிட்ட முக்கியப் போட்டிகளிலும் இந்திய வீரர்கள் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி பதக்க வாய்ப்பை உறுதி செய்துள்ளனர்.

ரோஷிபினா தேவி

தொடர் சாதனை படைத்த ரோஷிபினா!

மகளிர் சண்டா (Sanda) 60 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் சீனாவின் ஜாங் சியாவோயுவிடம் 0-2 என்ற கணக்கில் போராடித் தோல்வியடைந்த ரோஷிபினா தேவி, வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இதன் மூலம் 2018 ஜகார்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம், 2023 ஹாங்சோவில் வெள்ளி, தற்போது மீண்டும் வெள்ளி எனத் தொடர்ந்து மூன்று ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ஷூட்டிங்கில் மீண்டும் ஒரு பதக்கம்!

மிக்ஸ்டு ஸ்கீட் அணிப் பிரிவில் இந்தியாவின் அனந்த்ஜீத் சிங் நருகா மற்றும் பரிநாஜ் தலிவால் இணை 44 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது. தகுதிச்சுற்றில் (Qualification) நான்காவது இடத்தைப் பிடித்த இந்த இணை, இறுதிப்போட்டியில் அபாரமாகச் செயல்பட்டு பதக்கத்தை உறுதி செய்தது.

ஹாக்கி, கபடி: மிரட்டலான வெற்றிகள்!

ஆடவர் ஹாக்கி பூல் ஏ பிரிவில் இந்தியா தென் கொரியாவை 8-2 என்ற கோல் கணக்கில் பந்தாடியது. மேலும், ஆடவர் கபடி பிரிவில் தைபே அணியை 37-21 என வீழ்த்தி குரூப் ஏ பிரிவில் முதலிடம் பிடித்த இந்தியா, எளிதாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. மகளிர் கபடி அணியும் ஜப்பானை 50-25 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

ஸ்க்குவாஷில் உறுதியான பதக்கம்!

ஸ்க்குவாஷ் களத்தில் வீர் சோத்ராணி, அபய் சிங், தன்வி கன்னா, அனஹத் சிங் ஆகியோர் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக, மகளிர் ஒற்றையர் காலிறுதியில் அனஹத் சிங்கும் தன்வி கன்னாவும் நேருக்கு நேர் மோதுவதால், இந்தப் பிரிவில் இந்தியாவுக்கு குறைந்தபட்சம் ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது.

டேபிள் டென்னிஸ் & தடகளம்: அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றம்!

டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் மனுஷ் ஷா வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குச் சென்றார். மகளிர் இரட்டையர் பிரிவில் ஸ்ரீஜா அகுலா - சிண்ட்ரெலா தாஸ் மற்றும் தியா சிடாடே - யசுஸ்வினி கோர்படே இணைகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. தடகளத்தில் அனிமேஷ் குஜுர், குரிந்தர்வீர் சிங் ஆகியோர் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் அரையிறுதிக்குத் தகுதி பெற்றனர். மிக்ஸ்டு 4x400 மீட்டர் ரிலே அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி பதக்க எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னடைவைச் சந்தித்தவர்கள்!

குத்துச்சண்டையில் சாக்ஷி சௌத்ரி, சுமித் குண்டு ஆகியோர் தோல்வியடைந்து வெளியேறினர். ஃபென்சிங்கில் பவானி தேவி மற்றும் ஸ்ரேயா குப்தா ஆகியோரும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தனர். ஜிம்னாஸ்டிக்சில் பிரணதி நாயக் வால்ட் இறுதிப்போட்டியில் 6-வது இடத்தைப் பிடித்தார்.

15 பதக்கங்களுடன் இந்தியா!

இதுவரை நடந்து முடிந்த போட்டிகளின் அடிப்படையில் இந்தியா 1 தங்கம், 6 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களை வென்றுள்ளது.

நாளை என்ன ஸ்பெஷல்?

7-வது நாளான நாளையும் இந்தியாவுக்கு முக்கியமான நாளாக இருக்கப் போகிறது. ஷூட்டிங்கில் ஆடவர் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் அணி இறுதிப்போட்டி, கானோ ஸ்பிரிண்ட், பளுதூக்குதலில் மகளிர் 61 கிலோ பிரிவு மற்றும் தடகளத்தில் மகளிர் ஷாட் புட், போல் வால்ட், ஆடவர் 10,000 மீட்டர், ஹேமர் த்ரோ உள்ளிட்ட பல பதக்கப் போட்டிகள் நடைபெற உள்ளன. நாளைய தினமும் இந்தியா தனது பதக்கக் கணக்கை மேலும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Asian Games: 10,000 மீட்டர் ரேஸ்; 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்.. சீமா குமாரி சாதனை!

“முயற்சி திருவினையாக்கும்” என்பார்கள். அதை நிரூபிக்கும் வகையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீராங்கனை சீமா குமாரி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் வியாழக்கிழம... மேலும் பார்க்க

Asian Games Badmintonல் வெண்கலம் வென்ற மன்னார்குடி வீரர்; "அடுத்த இலக்கு ஒலிம்பிக்"- தந்தை நம்பிக்கை

ஜப்பானில் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு இந்தியா சார்பில் விளையாடி த... மேலும் பார்க்க

Asian Games: வெயிட்லிஃப்டிங், சாஃப்ட் டென்னிஸில் பதக்கங்களை குவித்த இந்தியா - ரவுண்ட்அப்!

ஆசிய விளையாட்டுப் போட்டியின் 5-வது நாள் முடிவில், இந்தியாவின் பதக்கப் பட்டியலில் இரண்டு குறிப்பிடத்தக்க சாதனைகள் பதிவாகியுள்ளன. வெயிட்லிஃப்டிங் பிரிவில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்குப் பதக்கம்... மேலும் பார்க்க

Asian games: 28 ஆண்டுகளுக்குப் பிறகு பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம்; வரலாற்று சாதனை படைத்த மீராபாய்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பளுதூக்குதலில் இந்தியாவின் 28 ஆண்டுக்கால காத்திருப்புக்கு இன்று முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார், நட்சத்திர வீராங்கனை மீராபாய் சானு!ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்று வரும... மேலும் பார்க்க

Asian Games: இலங்கைக்கு எதிராக இமாலய வெற்றி... முதல் தங்கம்; பதக்க வேட்டையில் இந்தியா!

2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் பதக்க வேட்டை 3-வது நாளில் புதிய வேகம் எடுத்துள்ளது. இலங்கையை 147 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கான முதல் தங்கப் பதக்க... மேலும் பார்க்க

11 ஆண்டுகள் பயணம்... 2 உலகக் கோப்பை வெற்றி - சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த மார்க் வுட்!

இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளரான மார்க் வுட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இங்கிலாந்து அணிக்காக மொத்தமாக 11 ஆண்டுகள் மார்க் வுட் விளையாடியிருக்கிறார். 201... மேலும் பார்க்க