செய்திகள் :

இதுவரை வாங்கிய ரஷ்ய எண்ணெய்க்கு 'நோ' 100% வரி! ட்ரம்ப்-ன் 'ட்விஸ்ட்'; இந்தியாவுக்குச் சாதகமானதா?

post image

ரஷ்யா - உக்ரைன் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக நின்று வருகிறது அமெரிக்கா. இந்தப் போர் விரைவில் முடிய வேண்டும் என்றுதான் அதிபரானதிலிருந்து உறுதியாக இருந்து வருகிறார் ட்ரம்ப்.

வரிகள், தடைகள், பேச்சுவார்த்தை என எதுவும் போர் நிறுத்தத்திற்கு ரஷ்யாவை அழைத்துவரவில்லை.

ரஷ்யா
ரஷ்யா

100 சதவிகித வரி

இதனால், ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் வணிகம் செய்யும் டாப் 5 நாடுகள் மீது 100 சதவிகித இரண்டாம் கட்ட வரி விதித்து ரஷ்யாவிற்கு நெருக்கடி கொடுக்கத் திட்டமிட்டது அமெரிக்கா.

இதற்காக 2026-ஆம் ஆண்டின் ரஷ்யா மற்றும் ஈரான் மீதான தடைகள் குறித்த லிண்ட்சே ஓ. கிரஹாம் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தச் சட்டம் அமெரிக்காவின் கீழ்சபை, மேல்சபை ஒப்புதல் பெற்று, கடந்த மாதம், ட்ரம்ப் கையெழுத்திட்டு இந்தச் சட்டம் அமலுக்கு வரத் தயாரானது.

ஆனால், சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அமெரிக்கப் பயணம் இருந்ததால், உடனடி அமல் தள்ளிப்போடப்பட்டது.

ட்ரம்பே ரஷ்யாவுடன் ஒப்பந்தம்!

ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் வணிகம் செய்யும் டாப் 5 நாடுகளில் முதல் இரண்டு இடங்களில் முறையே சீனாவும், இந்தியாவும் இருந்து வருகிறது.

இந்த இரு நாடுகளும் பாதிக்கப்படும் என்று அமெரிக்கா நேரடியாகச் சொல்லவில்லை என்றாலும், தரவுகளே இதைச் சொன்னது.

அந்த நேரத்தில்தான், கடந்த அக்டோபர் 9-ம் தேதி, ரஷ்யாவுடன் டீசல் ஒப்பந்தம் போட்டுள்ளதாக ட்ரம்ப் அறிவித்தார். இது உக்ரைனுக்கும், ஐரோப்பாவிற்கும் கடும் அதிர்ச்சியாக இருந்தது.

ட்ரம்ப் உத்தரவின் ஒரு பகுதி
ட்ரம்ப் உத்தரவின் ஒரு பகுதி

புது ட்விஸ்ட்

நேற்று (அக்டோபர் 16) புது ட்விஸ்டாக, ட்ரம்ப் லிண்ட்சே ஓ. கிரஹாம் சட்டத்தில் புதிய மாற்றம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளார்.

அதன்படி, இதுவரை ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கிய டாப் 5 நாடுகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. 100 சதவிகித வரி விதிக்கப்படாது.

இனிமேல் அதாவது அக்டோபர் 18-ம் தேதி முதல் எல்லாம் தெரிந்தும் ரஷ்யாவிடமிருந்து புதிதாக கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வாங்கினால் மட்டுமே,

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்த டாப் 5 நாடுகளின் பொருள்கள் 100 சதவிகித வரியை சந்திக்கும்.

இதனால், இதுவரை வாங்கிய எண்ணெய்களுக்குப் பிரச்னை இல்லை... இனிமேல் ஆகப்போகும் வர்த்தகங்களுக்குத்தான் பிரச்னை.

ஆக, வரியில் இருந்து தப்பிக்க அமெரிக்கா சொல்லும் டாப் 5 நாடுகள் ரஷ்யாவுடனான வர்த்தகத்தை ‘கட்’ செய்யுமா? பொறுத்திருந்து பார்ப்போம்!

காவிரி விவகாரம்: "தமிழக அரசு திட்டமிடல் இல்லாமல் தண்ணீரைத் திறந்துவிட்டது" - இபிஎஸ் குற்றச்சாட்டு

தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான எடப்பாடி பழனிசாமி, திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர்,"சம்பா சாகுபடிக்கு... மேலும் பார்க்க

“ஸ்டாலின் ஆட்சியின் உயரங்களை 'ஸ்டிக்கர் மாடல்' அரசு வேடிக்கைதான் பார்க்க முடியும்” - TRB ராஜா

திமுக ஆட்சியில் திட்டம் தொடங்கப்பட்டு, இன்று (அக்டோபர் 16) தவெக ஆட்சியில் கோவையில் உள்ள பெரியார் அறிவுலகம் திறக்கப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தை திமுகதான் தொடங்கி வைத்தது என்று திமுக சொந்தம் கொண்டாடுகிற... மேலும் பார்க்க

"திட்டங்களை அறிவித்து, அதில் ஊழல்கள் செய்ததால்தான் தோற்றீர்கள்" - ஸ்டாலினைச் சாடும் ஆதவ் அர்ஜுனா

இன்று கோவையில் பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்.இந்த நூலகம் திமுக ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது. ஆனால், இப்போது தவெக இதற்குத் தங்களுடைய ஸ்டிக்கரை ஒட்டிக்கொள்கிறது எ... மேலும் பார்க்க

“போதைப்பொருளுக்கு எதிராகப் பேசுவோரின் பாதுகாப்புக்கு கேள்விக்குறி” - பஞ்சாப் அரசைச் சாடும் அமித் ஷா

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அந்த மாநிலத்தின் முதலமைச்சர் பகவந்த் மான் ஆவார்.பஞ்சாப்பில் போதைப்பொருள் அதிகரித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில... மேலும் பார்க்க

CJP-யின் தேசியக் கொடி போராட்டம்; மீண்டும் கைது செய்யப்பட்ட அபிஜித் தீப்கே; என்ன நடந்தது?

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என இந்தியாக் கூட்டணி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பினர் தொடர்ந்து டெல்லியில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.இதன் ... மேலும் பார்க்க

தேசியக் கொடி அசைப்பு பேரணி: "என்னை வேண்டுமானால் தூக்கிலிடுங்கள்; ஆனால்..." - அபிஜித் திப்கே

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக, காக்ரோஜ் ஜனதா கட்சி இன்று போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளத... மேலும் பார்க்க