செய்திகள் :

இனி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த முடியாது: டெல்லியில் போராட்டம் நடத்த புதிதாக 3 இடங்கள் அறிவிப்பு

post image

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பெண் மல்லியுத்த வீராங்கனைகள், காக்ரோச் ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டங்கள் பெரிய அளவில் பேசப்பட்டது. இப்போதும் தொடர்ந்து அங்கு போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் ஜந்தர் மந்தர் பகுதியில் பாதுகாப்பு கொடுப்பது போலீஸாருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. இதையடுத்து ஜந்தர் மந்தர் மைதானத்தில் இனி போராட்டம் நடத்த முடியாது என்று போலீஸார் அறிவித்துள்ளனர்.

டெல்லி காவல்துறை ஆணையர் அனுராக் குமார் இது தொடர்பாக பிறப்பித்த உத்தரவில், ``பொதுமக்கள் போராட்டம் நடத்துவதற்கான உரிமையைப் பயன்படுத்தக்கூடிய பொருத்தமான இடங்களை அடையாளம் காண அமைக்கப்பட்ட உள்துறை அமைச்சகக் குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கமிட்டியின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஜந்தர் மந்தர் போராட்டம் நடத்துவதற்கான இடம் இல்லை என்று அறிவிக்கப்பட்டது" என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

அதோடு போராட்டம் நடத்துவதற்கு புதிதாக மூன்று இடங்களை தேர்வு செய்து அறிவித்து இருக்கிறது. அதன் படி மத்திய டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானம், வடக்கில் உள்ள புராரி மைதானம் மற்றும் ஷாஹ்தராவில் உள்ள CBD மைதானம் ஆகியவை ஜந்தர் மந்தருக்கு மாற்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடத்த 66,080 ரூபாயும், புராரி மற்றும் சிபிடி மைதானங்களுக்கு தலா ரூ. 90,000 (பாதுகாப்பு வைப்பு இல்லாமல்) கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜந்தர் மந்தர் சாலை பங்களாக்கள் மற்றும் கடைகளால் சூழப்பட்ட இடமாகும். இங்கு போராட்டம் நடத்துவபவர்கள் அருகில் உள்ள சாலைகளையும் பயன்படுத்துகின்றனர். அதோடு ஜந்தர் மந்தர் பாராளுமன்றத்திலிருந்து 3 கிமீ தொலைவிலும், முக்கிய அரசாங்க கட்டடங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இது போராட்டக்காரர்களுக்கு தேவையான தண்ணீர், மலிவான உணவு, கழிப்பறைகள் மற்றும் மர நிழல் போன்ற வசதிகளை வழங்குகிற்து. அதோடு இங்கு போராட்டம் நடத்த கட்டணம் கிடையாது.

கடந்த 9ம் தேதி உச்ச நீதிமன்றம், போராட்டங்களுக்கு தகுந்த மாற்று இடத்தை அறிவிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டதை அடுத்து, ஜந்தர் மந்தரை போராட்டம் நடத்துவதற்கான இடம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

``இனி பெற்றோருடன் நேரத்தை செலவிட விரும்புகிறேன்..!" - மைக்ரோசாஃப்ட் துணைத் தலைவர் ஓய்வு அறிவிப்பு

ஐ.டி கம்பெனிகள் தொடர்ந்து ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விசாவிற்காக புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்த பிறகு இந்தியர்களிடம் படிப்படியாக அமெரிக்க மோகம் கு... மேலும் பார்க்க

டெல்லி: "என் நண்பனைக் கைது செய்துள்ளனர்"- மும்பையில் போலீஸ் வேனை மறித்த காக்ரோச் கட்சி பெண் ஆதரவாளர்

டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சியினர் தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை பதவியில் இருந்து விலக கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தில் பங்கேற்க வந்த காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்களை டெல்லி போ... மேலும் பார்க்க

இங்கிலாந்து வனவிலங்கு பூங்கா: புலி அடைப்பிடத்தில் நுழைந்தவர் உயிரிழப்பு; பதற வைக்கும் வீடியோ

இங்கிலாந்தில் உள்ள வனவிலங்கு பூங்காவில், புலி அடைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் நுழைந்த நபர், அதன் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இங்கிலாந்தின் டான்காஸ்டர் அருகே அமைந்துள்ள Y... மேலும் பார்க்க

"அரசு வேலை வேணாம்"- மும்பையில் மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கும் உத்தரப்பிரதேச முடிதிருத்தும் தொழிலாளி

இந்தியாவில் அரசு வேலை என்பது அனைவரின் கனவாக இருக்கிறது. இதற்காக சிலர் பல ஆண்டுகள் பயிற்சி எடுத்துக்கொள்வது வழக்கம். ஆனால் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் மும்பையில் முடிதிருத்துபவராக வேலை செய்து செ... மேலும் பார்க்க

தாராபுரம் தொகுதியில் வெற்றி: பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடிய த.வெ.க- வினர்

தாராபுரம் இடைத்தேர்தல் தொகுதி வெற்றியை கொண்டாட்டம்தாராபுரம் இடைத்தேர்தல் தொகுதி வெற்றியை கொண்டாட்டம்தாராபுரம் இடைத்தேர்தல் தொகுதி வெற்றியை கொண்டாட்டம்தாராபுரம் இடைத்தேர்தல் தொகுதி வெற்றியை கொண்டாட்டம்... மேலும் பார்க்க

21 மனைவிகள்… பெயர்களே நினைவில் இல்லை! - பங்களாதேஷ் யாசகரின் வித்தியாசமான வாழ்க்கை

ஒரு திருமணத்தையே சமாளிப்பது பெரிய விஷயம் என பலரும் நினைக்கும் நிலையில், பங்களாதேஷைச் சேர்ந்த 35 வயது நபர் ஒருவர் தனக்கு 21 மனைவிகள் இருப்பதாக கூறியிருப்பது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.“அவங்களே வந்து ... மேலும் பார்க்க