தீரன் சின்னமலை நினைவு நாள்: சாலைகளில் எல்லை மீறிய இளைஞர்கள், திணறிய காவல்துறை!
உதயநிதியின் சர்ச்சை பேச்சுக்குத் தொடரும் எதிர்ப்பு; அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் கண்டனப் பதிவுகள் | Live Updates
தேசிய மகளிர் ஆணையத்தில் புகார்

சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்
தமிழ்நாடு விவசாயிகளின்- பொதுமக்களின் வாழ்வாதார பிரச்சனையான காவிரி நீர் பிரச்சனையில்... நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சட்ட நடவடிக்கைகள் உட்பட பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வரும் நிலையில்,
— Arunraaj TVK (@arunraajkg) August 4, 2026
நாங்களும் போராடுகிறோம் என ஷோ காட்டும் விதமாக ஆகஸ்ட் 3-ஆம் தேதி தஞ்சாவூரில் திமுக…
பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்
#ஆபாசநிதி
— Rajmohan (@imrajmohan) August 3, 2026
பொது வாழ்வில் உள்ளவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. எனவே, அவர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடனும் நாகரிகத்துடனும் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.
பெண்கள் கல்வி, அறிவியல், நிர்வாகம், தொழில், விளையாட்டு உள்ளிட்ட… pic.twitter.com/i7YBQzgp9Q
தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா
அண்ணா உருவாக்கிய அறிவாலயத்தின் அரசியல் பண்பாட்டிற்கு களங்கம் விளைவிக்கும் வகையில், உதயநிதி அவர்கள் பேசிய ஆபாசப் பேச்சுக்கு வன்மையான கண்டனம்!
— Virudhai Magal Keerthana (@Keerthana4VNR) August 3, 2026
பொது மேடைகளில் பேசப்படும் வார்த்தைகள் அரசியல் நாகரிகத்தையும், சமூகப் பொறுப்பையும் பிரதிபலிக்க வேண்டும். ஆனால் அண்மையில் உதயநிதி அவர்கள்…
நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த்
எதிர்க்கட்சித் தலைவர் என்ற மாண்பும் மரபும் மிக்க மிகப்பெரிய பொறுப்பை உணராமல், வாய்க்கு வந்தபடி பேசிய ஒருவரை என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. தன் தாத்தாவும் தந்தையும் வகித்தும்கூடவா முதல்வர் பதவியின் தகுதியும் தராதரமும் தெரியாமல் ஒருவர் இருக்க முடியும்?.
— N Anand (@BussyAnand) August 3, 2026
அவை அடக்கமும்…
அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ்
பேரறிஞர் பெருந்தகை அண்ணா ஆரம்பித்த இயக்கத்தில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்றும் கடுகளவு கூட இல்லாமல் ஆபாச பேச்சுக்களை மக்கள் மத்தியில் பேசி பெண்களை கீழ்த்தரமாக பார்க்கும் ஆபாசநிதிக்கு வன்மையான கண்டனங்கள்!
— TVK Ramesh (@RameshOffcl) August 3, 2026
உங்கள் ஆபாச கற்பனைகளை இன்ஸ்டாகிராமோடு நிறுத்திக்கொள்வது நல்லது,…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர்
இன்று தஞ்சாவூரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்திய மொழி முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
— Manickam Tagore .Bமாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) August 3, 2026
அவர் தனது கருத்தை திரும்பப் பெற்று, அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.@Udhaystalin
'அலட்சியத்தோடும் - ஆணவத்தோடும் விவசாயிகளை வஞ்சிக்கும் த.வெ.க. அரசைக் கண்டித்துப் போராட்டம்' என நேற்று தஞ்சாவூரில் திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
அந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை திரிஷாவைக் குறிப்பது போல ஆபாசமாகப் பேசியிருந்தார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.
அவரது ஆபாசப் பேச்சிற்கு எதிர்ப்புகளும், கண்டனங்களும் தொடர்ந்து எழுந்து வருகின்றன. அதன் தொகுப்பு இது.














