செய்திகள் :

சொல்லியடித்த செங்கோட்டையன்; தவிடு பொடியான திமு‌க கணக்கு! - விசில் வசமான கோபிச்செட்டிபாளையம்

post image

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் தி.மு.க தரப்பில் நல்லசிவம், அ.தி.மு.க தரப்பில் பிரபு, த‌.வெ.க சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ செங்கோட்டையன் ஆகியோர் களம் கண்டனர். கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்றத் தொகுதியின் நீண்ட கால உறுப்பினராக செங்கோட்டையன் பதவி வகித்து வந்தாலும், இரட்டை இலை சின்னத்தில் இருந்து மாறி விசில் சின்னத்தில் போட்டியிடுவது அவருக்கு பெரிய பின்னடைவாகப் பார்க்கப்பட்டது. ஆனால், எந்தவித சந்தேகமும் இல்லாமல் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் தொடர்ந்து 5-வது முறையாக இந்த தேர்தலில் வெற்றிவாகை சூடுவேன் என தீர்க்கமாகச் சொல்லி வந்தார் செங்கோட்டையன்.

செங்கோட்டையன்

சொல்லி வைத்தார்போல் இந்த தேர்தலில் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த வெற்றியின் மூலம் 10- வது முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் தொடர்ந்து 5 -வது முறையாக வாகை சூடியிருக்கிறார். செங்கோட்டையனுக்கும் அ.தி.மு.க வேட்பாளர் பிரபுவுக்கும் இடையே நடக்கும் கடும் போட்டி தி.மு.க வேட்பாளர் நல்லசிவத்திற்கு பெரிய அளவில் தேர்தல் வெற்றிக்கு பலன் கொடுக்கும் என தி‌.மு.க-வினர் கணக்கு போட்டு வைத்திருந்த நிலையில், 13,046 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்று அந்தக் கணக்கையெல்லாம் தவிடு பொடியாக்கியிருக்கிறார் செங்கோட்டையன்.

Stalin: "விஜய் ஆட்சி அமைக்கட்டும்; திமுக தொந்தரவு செய்யாது" - சர்ச்சைகளுக்கு ஸ்டாலின் முற்றுப்புள்ளி

திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைக்கப் போகிறது... அதிமுக ஆளும் கட்சியாகச் செயல்பட, திமுக எதிர்க்கட்சியாகச் செயல்படும்... முதலமைச்சர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான்... தவெக தலைவர் விஜய்க்... மேலும் பார்க்க

ரெசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள்; விஜய்யின் பாதுகாப்பு விலக்கு! - அமைகிறதா திமுக - அதிமுக கூட்டணி? | Live

'திமுக எதிர்க்கட்சிதான்!'திமுக - அதிமுக கூட்டணி என பரவி வரும் நிலையில் திமுக எம்.பி கலாநிதி வீராசாமி 'திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும்' என ட்வீட் செய்திருக்கிறார்.திமுக முன்னாள் எம்.பியின் ட்வீட்!தி... மேலும் பார்க்க

'விலக்கப்பட்ட விஜய்யின் கான்வாய் பாதுகாப்பு?; கூட்டு சேரும் திமுக - அதிமுக?' - நிலவரம் என்ன?

சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்திருந்த நிலையில், ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமைக் கோரி விஜய் கடிதம் கொடுத்திருந்தார். இந்நிலையில், விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த கான்வாய் பாதுகாப்பு... மேலும் பார்க்க

விஜய்க்கு எதிராக திமுக - அதிமுக கூட்டு? திரை மறைவில் நகர்த்தப்படும் காய்கள்! - பின்னணி என்ன?

ஆளுநரை சந்தித்து தவெக தலைவர் விஜய் நாளை ஆட்சியமைக்க உரிமைக் கோரிய நிலையில், ஆளுநர் இன்னமும் எந்த முடிவையும் சொல்லவில்லை. தவெகவிடம் பெரும்பான்மைக்கான 118 எம்.எல்.ஏக்கள் யாரென ஆளுநர் பட்டியல் கேட்டதாகவு... மேலும் பார்க்க

PM SHRI திட்டம்: `புதிய கல்விக் கொள்கையில் தமிழ்நாடு அரசின் முடிவென்ன?' - கடிதம் எழுதிய மத்திய அரசு!

மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ (PM SHRI) திட்டத்தில் இணையுமாறு தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சகம் மீண்டும் கடிதம் எழுதியுள்ளது. தேசியக் கல்விக் கொள்கையின் (NEP 2020) ஒரு பகுதி... மேலும் பார்க்க