இந்தியில் பேச சொன்ன சூர்யா; 'எனக்கு இந்தி தெரியாது மச்சி!' என பதில் அளித்த வருண்...
பத்மஸ்ரீ வென்ற பழங்குடி ஓவியர்; மனைவிக்கு குடியிருப்புடன் அரசு பணி வழங்கிய நீலகிரி மாவட்ட நிர்வாகம்!
தொல்குடிகளின் தொட்டில் என அழைக்கப்படும் நீலகிரி மலையில் வாழ்ந்து வரும் பண்டைய பழங்குடி இன மக்கள் தங்களுக்கே உரிய தனித்துவமான பாரம்பர்யங்களைப் பின்பற்றி வருகின்றனர். குறிப்பிட்ட சில பழங்குடி இன மக்கள் தங்களின் சொந்த மண்ணில் கிட்டத்தட்ட அகதிகளாக அவதியுற்று வந்தாலும், மரபுவழிகளைப் பாதுகாத்து வருகின்றனர். பூ, இலை, மரப்பட்டை என இயற்கையில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு வண்ணங்களாக குழைத்து காலத்திற்கும் அழியாத ஓவியங்களை உருவாக்குவதில் நிபுணத்துவம் கொண்டவர்கள் குறும்பர் பழங்குடிகள்.

அந்த மரபில் வந்த பழங்குடி ஓவியர் கிருஷ்ணன், 3 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த பாறை ஓவியங்களை புழக்கத்திற்குக் கொண்டு வந்தார். தொல்குடிகளின் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்வியலை ஓவியங்கள் மூலம் உயிரூட்டி வந்த இவர் அண்மையில் உயிரிழந்தார். இவரின் உயிரிழப்பு குறும்பர் ஓவியக்கலை உலகின் பேரிழப்பாகக் கருதப்படுகிறது. கிருஷ்ணனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதினை அறிவித்தது மத்திய அரசு. கிருஷ்ணனின் மறைவால் வறிய நிலையில் வாடும் அவரின் மனைவி மற்றும் குழந்தைகள் குறித்து வெளியில் தெரியவந்தது.
கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மேம்படுத்தி அவர்களின் துயர் துடைக்க மாநில அரசு பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஊட்டியில் உள்ள ஏகலைவா பள்ளியில் கிருஷ்ணனின் மனைவிக்கு அரசுப் பணி மற்றும் அரசு குடியிருப்பை வழங்கியிருக்கிறது, மாவட்ட நிர்வாகம். மாவட்ட நிர்வாகத்தின் இந்தச் செயலைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இது குறித்து தெரிவித்த நீலகிரி மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், "அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் நிரந்தர தோட்டப் பணியாளர் வேலை வழங்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் 32 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படும். அரசுப் பணியாளர்களுக்கான விடுப்பு, ஊதிய உயர்வு உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்படும். அதே வளாகத்தில் அரசு குடியிருப்பும் வழங்கப்பட்டுள்ளது" என்றனர்.


















