செய்திகள் :

பினராயி வெற்றி; ஆனால், 14 அமைச்சர்கள் தோல்வி: இடுக்கி முதல் கண்ணூர் வரை அமைச்சர்கள் தோல்வி லிஸ்ட்

post image

தமிழ்நாட்டைப் போல, கேரளாவிலும் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன.

2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும், 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வெற்றியையும், ஆட்சியையும் பரிசாக வழங்கிய கேரள மக்கள், இந்த முறை தோல்வியைக் கொடுத்துள்னர்.

இந்த முறை காங்கிரஸிற்கு ஆட்சியை தந்திருக்கிறார்கள் கேரள மக்கள்.

2021 - 2026 காலகட்டத்தில், முதலமைச்சர் உள்பட 21 அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்தனர்.

கேரளா
கேரளா

இதில் இப்போது பினராயி விஜயன் உள்ளிட்ட ஏழு அமைச்சர்கள் மட்டுமே 2026-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். மீதி 16 அமைச்சர்களும் தோல்வியைத் தான் பெற்றுள்ளனர்.

தோல்வியைத் தழுவிய அமைச்சர்களின் லிஸ்ட் இதோ...

வீணா ஜார்ஜ்: சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் அமைச்சரான இவர், ஆரன்முலா தொகுதியில் போட்டியிட்டார். இவர் 18,985 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸிடம் வெற்றியை நழுவவிட்டுள்ளார்.

ராஜீவ்: இவர் தொழில்கள் மற்றும் சட்டத் துறை அமைச்சர் ஆவார். களமச்சேரியில் போட்டியிட்ட இவர் 16,312 வாக்குகள் வித்தியாசத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிடம் தோல்வியைத் தழுவியுள்ளார்.

வி. சிவன்குட்டி: கல்வி மற்றும் தொழிலாளர் நலன் அமைச்சர் போட்டியிட்ட தொகுதி நேமம். இதில் பாஜகவிடம் 4,978 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.

எம். பி. ராஜேஷ்: உள்ளாட்சி மற்றும் கலால் வரி அமைச்சர் இவர். திருத்தலாவில் போட்டியிட்ட இவர் 8,385 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸிடம் தோல்வியைத் தழுவியுள்ளார்.

டாக்டர் ஆர். பிந்து: உயர்கல்வித் துறை அமைச்சரான இவர் இரிஞ்ஞாலக்குடாவில் போட்டியிட்டார். அங்கே இவர் காங்கிரஸிடம் 10,212 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை நழுவவிட்டுள்ளார்.

தேர்தல்
தேர்தல்

கே. கிருஷ்ணன்குட்டி: மின்சாரத் துறை அமைச்சர். சித்தூரில் போட்டியிட்ட இவர் 6,510 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸிடம் தோல்வியைத் தழுவியுள்ளார். இவர் கம்யூனிஸ்ட்டின் கூட்டணி கட்சியின் ஜனதா தளத்தின் வேட்பாளர் ஆவார்.

ரோஷி அகஸ்டின்: நீர்வளத்துறை அமைச்சரான இவர் இடுக்கியில் போட்டியிட்டார். 23,822 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸிடம் தோல்வி அடைந்துள்ளார்.

ஏ. கே. சசீந்திரன்: ஏலத்தூரில் போட்டியிட்ட இவர் வனம் மற்றும் வனவிலங்கு துறை அமைச்சர் ஆவார். இவர் 12,162 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸிடம் தோல்வி அடைந்துள்ளார்.

வி. என். வாசவன்: கூட்டுறவு மற்றும் துறைமுகங்கள் துறையின் அமைச்சர் இவர். ஏற்றுமானூரில் 19,752 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸிடம் தோல்வியை நழுவவிட்டுள்ளார்.

வி. அப்துரஹிமான்: விளையாட்டு மற்றும் சிறுபான்மையினர் நலன் அமைச்சரான இவர் திரூர் தொகுதியில் போட்டியிட்டார். அங்கே 24,137 வாக்குகள் வித்தியாசத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிடம் தோல்வியைத் தழுவியுள்ளார்.

ஜெ. சிஞ்சு ராணி: கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் இவர். சடையமங்கலத்தில் போட்டியிட்ட இவர் 7,486 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸிடம் தோல்வியை நழுவவிட்டுள்ளார்.

கேரளா - தேர்தல்
கேரளா - தேர்தல்

கே. பி. கணேஷ் குமார்: இவர் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆவார். பத்தினாபுரத்தில் 8,310 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றியை தட்டி சென்றுள்ளது.

ஆர். கடன்னப்பள்ளி: பதிவுத்துறை அமைச்சர். கண்ணூரில் 18,551 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸிடம் தோல்வி அடைந்துள்ளார்.

ஓ. ஆர். கேலு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் துறை அமைச்சரான இவர் மானந்தவாடியில் போட்டியிட்டார். 10,543 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸிடம் தோல்வியைத் தழுவியுள்ளார்.

Stalin: "விஜய் ஆட்சி அமைக்கட்டும்; திமுக தொந்தரவு செய்யாது" - சர்ச்சைகளுக்கு ஸ்டாலின் முற்றுப்புள்ளி

திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைக்கப் போகிறது... அதிமுக ஆளும் கட்சியாகச் செயல்பட, திமுக எதிர்க்கட்சியாகச் செயல்படும்... முதலமைச்சர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான்... தவெக தலைவர் விஜய்க்... மேலும் பார்க்க

ரெசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள்; விஜய்யின் பாதுகாப்பு விலக்கு! - அமைகிறதா திமுக - அதிமுக கூட்டணி? | Live

'திமுக எதிர்க்கட்சிதான்!'திமுக - அதிமுக கூட்டணி என பரவி வரும் நிலையில் திமுக எம்.பி கலாநிதி வீராசாமி 'திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும்' என ட்வீட் செய்திருக்கிறார்.திமுக முன்னாள் எம்.பியின் ட்வீட்!தி... மேலும் பார்க்க

'விலக்கப்பட்ட விஜய்யின் கான்வாய் பாதுகாப்பு?; கூட்டு சேரும் திமுக - அதிமுக?' - நிலவரம் என்ன?

சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்திருந்த நிலையில், ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமைக் கோரி விஜய் கடிதம் கொடுத்திருந்தார். இந்நிலையில், விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த கான்வாய் பாதுகாப்பு... மேலும் பார்க்க

விஜய்க்கு எதிராக திமுக - அதிமுக கூட்டு? திரை மறைவில் நகர்த்தப்படும் காய்கள்! - பின்னணி என்ன?

ஆளுநரை சந்தித்து தவெக தலைவர் விஜய் நாளை ஆட்சியமைக்க உரிமைக் கோரிய நிலையில், ஆளுநர் இன்னமும் எந்த முடிவையும் சொல்லவில்லை. தவெகவிடம் பெரும்பான்மைக்கான 118 எம்.எல்.ஏக்கள் யாரென ஆளுநர் பட்டியல் கேட்டதாகவு... மேலும் பார்க்க

PM SHRI திட்டம்: `புதிய கல்விக் கொள்கையில் தமிழ்நாடு அரசின் முடிவென்ன?' - கடிதம் எழுதிய மத்திய அரசு!

மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ (PM SHRI) திட்டத்தில் இணையுமாறு தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சகம் மீண்டும் கடிதம் எழுதியுள்ளது. தேசியக் கல்விக் கொள்கையின் (NEP 2020) ஒரு பகுதி... மேலும் பார்க்க