செய்திகள் :

`பொற்கோயில் ஆசியும், போர் யானை முழக்கமும்!’ - வேலூரில் சொல்லி அடித்த தவெக வினோத் கண்ணன்!

post image

வேலூர் தொகுதியில், தி.மு.க சார்பாக சிட்டிங் எம்.எல்.ஏ ப.கார்த்திகேயன், அ.தி.மு.க-வில் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு ஆகியோரை எதிர்த்து த.வெ.க-வில் செயற்குழு உறுப்பினர் எம்.எம்.வினோத் கண்ணன் போட்டியிட்டார். வினோத் கண்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே பேசுபொருளாக இருந்து வந்தார்.

வீடு வீடாகச் சென்று தொகுதியில் நிலவும் பிரச்னைகளை எடுத்துக்கூறியும், த.வெ.க-வுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்வதால் வரப்போகும் நன்மைகளையும் விளக்கிப் பேசி மக்களைக் கவர்ந்துகொண்டிருந்தார் வினோத் கண்ணன். பிரசாரக் களத்தில் தனக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து தனது வெற்றியையும் முன்கூட்டியே கணித்திருந்தார். அதற்கேற்ப, தேர்தல் முடிவும் அமைந்திருக்கிறது.

வினோத் கண்ணன்

வேலூர் தொகுதியில் மொத்தமுள்ள வாக்குகள் 2,14,946. அதில் பதிவான வாக்குகள் 1,89,770. அவற்றில், த.வெ.க வேட்பாளர் வினோத் கண்ணன் பெற்றது 73,032 வாக்குகள். தி.மு.க வேட்பாளர் கார்த்திகேயன் 66,255 வாக்குகளுடன் இரண்டாம் இடம், அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.ஆர்.கே.அப்பு 45,458 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தனர். முடிவாக 6,777 வாக்குகள் வித்தியாசத்தில் கார்த்திகேயனை வீழ்த்தி வெற்றி பெற்றார் வினோத் கண்ணன்.

வேலூர் எம்.எல்.ஏ-வாக வலம் வரப்போகும் வினோத் கண்ணன் சாதாரண குடும்பப் பின்னணிகொண்டவர்தான். வேலூரில், `ஸ்ரீ மெமன்டோஸ்’ என்கிற பெயரில், விருது கோப்பைகள் மற்றும் பதக்கங்கள் விற்பனையகம் நடத்தி வருகிறார்.

அதுமட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு மனக்கணக்குப் பயிற்சி அளிக்கும் `அலமா அபாகஸ்’ கல்வி நிறுவனத்தையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். வணிக நிர்வாகம் சார்ந்த பி.பி.ஏ இளங்கலை பட்டப்படிப்புப் படித்திருக்கும் வினோத் கண்ணனுக்கு எழிலரசி என்ற மனைவியும், இரு குழந்தைகளும் இருக்கிறார்கள்.

வேலூர் ஸ்ரீபுரத்தில் பொற்கோயிலுடன்கூடிய நாராயணி பீடத்தை நிறுவிய மடாதிபதி சக்தி அம்மாவின் ஆசி, அரவணைப்பும் வினோத் கண்ணனுக்கு இருக்கிறது. நேற்றைய தினம் வெற்றி வாகை சூடிய கையோடு நேராக பொற்கோயிலுக்குச் சென்று சக்தி அம்மாவிடம்தான் ஆசி பெற்றார் வினோத் கண்ணன்.

விஜய்யுடன் வினோத் கண்ணன்

அதுமட்டுமல்லாமல், பிப்ரவரி 23-ம் தேதி வேலூர் அகரம்சேரி பகுதிக்கு விஜய்யை அழைத்து வந்து த.வெ.க நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தையும் பிரமாண்டமாக நடத்தியதும் வினோத் கண்ணன் தான். அந்தக் கூட்டத்தில் விஜய்க்கு வெள்ளியால் செய்யப்பட்ட இரட்டை போர் யானைகள் மற்றும் பிரசித்திபெற்ற பொற்கோயில் காட்சி மாதிரியையும் பரிசாக வழங்கினார்.

போர் யானை பரிசுப் பொருளில் `வினோத் கண்ணன் - வேலூர் சட்டமன்றத் தொகுதி’ என பொறிக்கப்பட்டிருந்தது. பரிசுப்பொருள்களை விஜய் கையில் வாங்கியபோது, `இது வெள்ளி போர் யானை மட்டுமல்ல, வேலூரின் வெற்றி யானை’ எனவும் முழங்கினர் த.வெ.க-வினர். அதன்படி, சொல்லி அடித்திருக்கிறார் வினோத் கண்ணன்.

Stalin: "விஜய் ஆட்சி அமைக்கட்டும்; திமுக தொந்தரவு செய்யாது" - சர்ச்சைகளுக்கு ஸ்டாலின் முற்றுப்புள்ளி

திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைக்கப் போகிறது... அதிமுக ஆளும் கட்சியாகச் செயல்பட, திமுக எதிர்க்கட்சியாகச் செயல்படும்... முதலமைச்சர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான்... தவெக தலைவர் விஜய்க்... மேலும் பார்க்க

ரெசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள்; விஜய்யின் பாதுகாப்பு விலக்கு! - அமைகிறதா திமுக - அதிமுக கூட்டணி? | Live

'திமுக எதிர்க்கட்சிதான்!'திமுக - அதிமுக கூட்டணி என பரவி வரும் நிலையில் திமுக எம்.பி கலாநிதி வீராசாமி 'திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும்' என ட்வீட் செய்திருக்கிறார்.திமுக முன்னாள் எம்.பியின் ட்வீட்!தி... மேலும் பார்க்க

'விலக்கப்பட்ட விஜய்யின் கான்வாய் பாதுகாப்பு?; கூட்டு சேரும் திமுக - அதிமுக?' - நிலவரம் என்ன?

சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்திருந்த நிலையில், ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமைக் கோரி விஜய் கடிதம் கொடுத்திருந்தார். இந்நிலையில், விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த கான்வாய் பாதுகாப்பு... மேலும் பார்க்க

விஜய்க்கு எதிராக திமுக - அதிமுக கூட்டு? திரை மறைவில் நகர்த்தப்படும் காய்கள்! - பின்னணி என்ன?

ஆளுநரை சந்தித்து தவெக தலைவர் விஜய் நாளை ஆட்சியமைக்க உரிமைக் கோரிய நிலையில், ஆளுநர் இன்னமும் எந்த முடிவையும் சொல்லவில்லை. தவெகவிடம் பெரும்பான்மைக்கான 118 எம்.எல்.ஏக்கள் யாரென ஆளுநர் பட்டியல் கேட்டதாகவு... மேலும் பார்க்க

PM SHRI திட்டம்: `புதிய கல்விக் கொள்கையில் தமிழ்நாடு அரசின் முடிவென்ன?' - கடிதம் எழுதிய மத்திய அரசு!

மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ (PM SHRI) திட்டத்தில் இணையுமாறு தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சகம் மீண்டும் கடிதம் எழுதியுள்ளது. தேசியக் கல்விக் கொள்கையின் (NEP 2020) ஒரு பகுதி... மேலும் பார்க்க