செய்திகள் :

விஜய் ப்ளான்; அதிமுக யோசனை?! - தவெக முன்னிருக்கும் ஆப்ஷன்கள் என்னென்ன?

post image

மே 2026-ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், யாரும் எதிர்பார்க்காத ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்தைத் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ளன. நடிகர் விஜய்-யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை தனியாக எட்ட முடியவில்லை. இந்தச் சிக்கலான அரசியல் சூழலில் அடுத்து என்ன நடக்கும் என்றக் கேள்வி தமிழ்நாட்டு மக்களின் முகங்களில் கேள்விக்குறியாக இருக்கிறது.

தமிழக சட்டமன்றத்தின் மொத்த இடங்கள் 234.

இதில் த.வெ.க 108 இடங்களையும், தி.மு.க கூட்டணி 60 + 14, அ.தி.மு.க 46 + 7 என வென்றிருக்கின்றன.

த.வெ.க தலைவர் விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் என இரு தொகுதிகளில் வெற்றிப் பெற்றிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இதில் ஒரு தொகுதியின் எம்.எல்.ஏ-வாக மட்டுமே அவர் பதவியை தொடர முடியும், என்பதால், ஒரு தொகுதியின் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதனால், ஒரு தொகுதி எண்ணிக்கை குறையும்.

மேலும், சட்டமன்றத்துக்கான சபாநாயகர் என ஒரு தொகுதி கணக்கில் வராது. எனவே, தற்போது இரண்டு தொகுதிகள் குறைந்து, த.வெ.க கையில் சட்டசபையில் வாக்களிக்க 106 உறுப்பினர்கள் மட்டுமே இருக்கின்றனர்.

எனவே, இடதுசாரிகளான கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விசிக போன்ற திமுக கூட்டணிக் கட்சிகள் ஆதரவளித்தால், தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க முடியும். இது தொடர்பாக இன்று திருமாவளவன், சி.பி.ஐ பாண்டியன், சி.பி.ஐ-எம் சண்முகம் ஆகியோர் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், ``த.வெ.க-வை ஆதரிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்" எனத் தெரிவித்திருந்தனர்.

தவெக விஜய்
தவெக விஜய்

இதற்கிடையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் தவெக தலைவர் விஜய் தன் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அவரின் ஆலோசனையில் இடதுசாரி கட்சிகளை உள்ளிழுப்பதற்கான முடிவுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், தவெக-வுக்கு ஆதரவளிக்கும் கட்சிகள் அமைச்சரவையில் இடம் எதிர்பார்க்க கூடுதல் வாய்ப்பிருக்கிறது.

அதேநேரம், அதிமுக-வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்போ, விஜய்க்கு 'எங்களின் பொது எதிரி திமுக-வை வீழ்த்தியதற்காக தவெக ஆட்சி அமைக்க அமைச்சரவைக்கு வெளியிலிருந்து ஆதரவளிக்கத் தயாராக இருக்கிறோம்' எனக் கூறும் யோசனையிலும் இருக்கிறதாம்.

ஆனால் பா.ஜ.க கூட்டணியில் இருக்கும் அதிமுக-வை விஜய் தேர்வு செய்வாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக வலம் வருகிறது.

விஜய் விசிக, கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ-க்கள் ஆதரவை பெற்று ஆட்சியமைப்பாரா.... அல்லது அதிமுக முகாமை நோக்கி ஆதரவு கரத்தை நீட்டுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Stalin: "விஜய் ஆட்சி அமைக்கட்டும்; திமுக தொந்தரவு செய்யாது" - சர்ச்சைகளுக்கு ஸ்டாலின் முற்றுப்புள்ளி

திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைக்கப் போகிறது... அதிமுக ஆளும் கட்சியாகச் செயல்பட, திமுக எதிர்க்கட்சியாகச் செயல்படும்... முதலமைச்சர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான்... தவெக தலைவர் விஜய்க்... மேலும் பார்க்க

ரெசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள்; விஜய்யின் பாதுகாப்பு விலக்கு! - அமைகிறதா திமுக - அதிமுக கூட்டணி? | Live

'திமுக எதிர்க்கட்சிதான்!'திமுக - அதிமுக கூட்டணி என பரவி வரும் நிலையில் திமுக எம்.பி கலாநிதி வீராசாமி 'திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும்' என ட்வீட் செய்திருக்கிறார்.திமுக முன்னாள் எம்.பியின் ட்வீட்!தி... மேலும் பார்க்க

'விலக்கப்பட்ட விஜய்யின் கான்வாய் பாதுகாப்பு?; கூட்டு சேரும் திமுக - அதிமுக?' - நிலவரம் என்ன?

சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்திருந்த நிலையில், ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமைக் கோரி விஜய் கடிதம் கொடுத்திருந்தார். இந்நிலையில், விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த கான்வாய் பாதுகாப்பு... மேலும் பார்க்க

விஜய்க்கு எதிராக திமுக - அதிமுக கூட்டு? திரை மறைவில் நகர்த்தப்படும் காய்கள்! - பின்னணி என்ன?

ஆளுநரை சந்தித்து தவெக தலைவர் விஜய் நாளை ஆட்சியமைக்க உரிமைக் கோரிய நிலையில், ஆளுநர் இன்னமும் எந்த முடிவையும் சொல்லவில்லை. தவெகவிடம் பெரும்பான்மைக்கான 118 எம்.எல்.ஏக்கள் யாரென ஆளுநர் பட்டியல் கேட்டதாகவு... மேலும் பார்க்க

PM SHRI திட்டம்: `புதிய கல்விக் கொள்கையில் தமிழ்நாடு அரசின் முடிவென்ன?' - கடிதம் எழுதிய மத்திய அரசு!

மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ (PM SHRI) திட்டத்தில் இணையுமாறு தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சகம் மீண்டும் கடிதம் எழுதியுள்ளது. தேசியக் கல்விக் கொள்கையின் (NEP 2020) ஒரு பகுதி... மேலும் பார்க்க