செய்திகள் :

விஜய் மன்ற உறுப்பினர், ஆனந்தின் தீவிர விசுவாசி... இனி கடலூர் MLA - யார் இந்த ராஜ்குமார்?

post image

தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் மாறி மாறி வெற்றி பெற்ற தொகுதிகளில் ஒன்று கடலூர். இந்த தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் ராஜேந்திரனும், அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்தும், நா.த.க சார்பில் சரசுவும், த.வெ.க சார்பில் ராஜ்குமாரும் போட்டியிட்டனர்.

வாக்கு எண்ணிக்கையின்போது முதல் பத்து சுற்றுகள் வரை இரண்டாமிடம் மூன்றாமிடம் என மாறி மாறி வந்து கொண்டிருந்தார் த.வெ.க வேட்பாளர் ராஜ்குமார். அதன்பிறகு நகர்ப்புற வாக்குகள் எண்ணப்பட்ட போது, அ.தி.முக, காங்கிரஸ் வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளி, முதலிடத்துக்குச் சென்றார்.

அதன்பிறகு இருபதாவது சுற்றில் 15,519 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திரனை வீழ்த்தினார் ராஜ்குமார்.

அதேபோல 15,598 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டார். நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரான ராஜ்குமார், 1996-ம் ஆண்டு விஜய் மக்கள் மன்றத்தில் இணைந்தார்.

2002-ல் சிதம்பரம் முத்தையா பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் பொறியியல் படிப்பை முடித்தவர், அதன்பிறகு ரியல் எஸ்டேட் தொழில் செய்ய ஆரம்பித்தார்.

Vijay TVK - விஜய் - த.வெ.க

த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் தீவிர விசுவாசியாக செயல்பட்டதால், கடலூர் வடக்கு மாவட்டச் செயலாளர் பதவியைப் பெற்றார். அதனடிப்படையில்தான் கடலூர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பையும் பெற்று எம்.எல்.ஏ-வாகியிருக்கிறார்.

விஜய் மக்கள் மன்றம் தொடங்கிய காலகட்டத்தில் அது எஸ்.ஏ.சந்திரசேகரின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதன்பிறகு வந்த தேர்தல்களில் எஸ்.ஏ.சந்திரசேகர் கைகாட்டுபவருக்கே விஜய் மக்கள் மன்றத்தினர் வேலை செய்து வந்தனர்.

அதன்படி கடலூர் மாவட்டத் தேர்தல்களில் எம்.சி.சம்பத்துக்கு ஆதரவாக வேலை செய்து வந்தனர் விஜய் ரசிகர்கள். ஆனால் விஜய் த.வெ.க-வை அறிவித்தவுடன் மாற்றுக் கட்சியினருக்கு வேலை செய்வதை நிறுத்திய ரசிகர்கள், தொண்டர்களாக மாறினார்கள். அவர்களை அப்படியே தக்க வைத்துக் கொண்ட ராஜ்குமார், கட்சியை பலப்படுத்தும் வேலைகளில் இறங்கினார். அதுதான் அவருக்கு இந்த வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது.

Stalin: "விஜய் ஆட்சி அமைக்கட்டும்; திமுக தொந்தரவு செய்யாது" - சர்ச்சைகளுக்கு ஸ்டாலின் முற்றுப்புள்ளி

திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைக்கப் போகிறது... அதிமுக ஆளும் கட்சியாகச் செயல்பட, திமுக எதிர்க்கட்சியாகச் செயல்படும்... முதலமைச்சர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான்... தவெக தலைவர் விஜய்க்... மேலும் பார்க்க

ரெசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள்; விஜய்யின் பாதுகாப்பு விலக்கு! - அமைகிறதா திமுக - அதிமுக கூட்டணி? | Live

'திமுக எதிர்க்கட்சிதான்!'திமுக - அதிமுக கூட்டணி என பரவி வரும் நிலையில் திமுக எம்.பி கலாநிதி வீராசாமி 'திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும்' என ட்வீட் செய்திருக்கிறார்.திமுக முன்னாள் எம்.பியின் ட்வீட்!தி... மேலும் பார்க்க

'விலக்கப்பட்ட விஜய்யின் கான்வாய் பாதுகாப்பு?; கூட்டு சேரும் திமுக - அதிமுக?' - நிலவரம் என்ன?

சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்திருந்த நிலையில், ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமைக் கோரி விஜய் கடிதம் கொடுத்திருந்தார். இந்நிலையில், விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த கான்வாய் பாதுகாப்பு... மேலும் பார்க்க

விஜய்க்கு எதிராக திமுக - அதிமுக கூட்டு? திரை மறைவில் நகர்த்தப்படும் காய்கள்! - பின்னணி என்ன?

ஆளுநரை சந்தித்து தவெக தலைவர் விஜய் நாளை ஆட்சியமைக்க உரிமைக் கோரிய நிலையில், ஆளுநர் இன்னமும் எந்த முடிவையும் சொல்லவில்லை. தவெகவிடம் பெரும்பான்மைக்கான 118 எம்.எல்.ஏக்கள் யாரென ஆளுநர் பட்டியல் கேட்டதாகவு... மேலும் பார்க்க

PM SHRI திட்டம்: `புதிய கல்விக் கொள்கையில் தமிழ்நாடு அரசின் முடிவென்ன?' - கடிதம் எழுதிய மத்திய அரசு!

மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ (PM SHRI) திட்டத்தில் இணையுமாறு தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சகம் மீண்டும் கடிதம் எழுதியுள்ளது. தேசியக் கல்விக் கொள்கையின் (NEP 2020) ஒரு பகுதி... மேலும் பார்க்க