செய்திகள் :

அசாம்: குத்தகைக்கு விட்ட ஹோட்டலைத் திரும்பக் கொடுக்க மறுப்பு; உரிமையாளர் உட்பட 5 பேர் சுட்டுக்கொலை

post image

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பிலாஸ் இன் என்ற ஹோட்டலை கனகாந்த கோகோய் என்பவர் ஹெலனா பராலி என்பவரிடம் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். ஹோட்டல் குத்தகையை நீட்டிப்பது தொடர்பாக ஹெலனாவிற்கும், குத்தகைக்கு எடுத்த கோகாயிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது.

இது தொடர்பாக பேசுவதற்காக நேற்று இரவு ஹெலனா தனது குடும்பத்தினருடன் ஹோட்டலுக்கு வந்திருந்தார். ஹோட்டலில் அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது அவர்களுக்குள் மோதல் வெடித்தது.

இதனால் கோகாய் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து சரமாறியாகச் சுட ஆரம்பித்தார். இதில் ஹோட்டல் பிலாஸ் இன் உரிமையாளர் ஹெலனா பராலி, அவரது சகோதரர் புதேவ் பராலி, மகன் தேவர்ஷி காஷ்யப், மருமகள் ரினிகி காஷ்யப், அவர்களது கார் ஓட்டுநர் நாராயண் தாஸ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்கள்.

அந்த ஹோட்டலின் பராமரிப்பாளரான சத்யேந்திர பதக் இத்துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தார்.

இது குறித்து கேள்விப்பட்டதும் போலீஸார் விரைந்து வந்தனர். அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய கோகாயைக் கைது செய்து துப்பாக்கியைப் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து கவுகாத்தி போலீஸ் கமிஷனர் டாக்டர் பார்த்த சாரதி மஹந்தா கூறுகையில், ''இரவு 9 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்தது. இதில் ஆறு பேர் துப்பாக்கிக் குண்டுகளால் காயமடைந்தனர். அவர்களில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

காயமடைந்து உயிர் பிழைத்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஹோட்டல் குத்தகை தொடர்பான பிரச்னையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்து இருப்பது ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது'' என்றார்.

உயிரிழந்தவர்களில் 4 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஒருவர் அவர்களது கிராமத்தைச் சேர்ந்தவர்.

கோவை: சாதிய வன்கொடுமையால் மாணவர் அகிலன் தற்கொலை விவகாரம்; முடிவுக்கு வந்த பெற்றோர் போராட்டம்

கோவை பீளமேடு பகுதியில் உள்ள கே.கே.நாயுடு என்ற அரசு உதவி பெறும் பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வந்த அகிலன் என்ற பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாணவன் கடந்த 21ம் தேதியன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை ச... மேலும் பார்க்க

தேனி சிறை கைதிகள் தப்பிய விவகாரம்: "காவலரின் தங்க செயின் பறிப்பு" - சம்பவத்தை விளக்கும் காவல்துறை

தேனி மாவட்ட சிறையில் இருந்து தப்பி ஓடிய விவகாரத்தில், நேற்று (அக்டோபர் 26 ஆம் தேதி) இரவு பணியில் இருந்த சிறை காவலர்களை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் உத்தரவிட்டிருக்கிறார்.தேன... மேலும் பார்க்க

மும்பை: முற்றிய கணவன் மனைவி சண்டை; 9 மாத குழந்தை நடைமேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசிப்பட்ட கொடூரம்

மும்பை காட்கோபர் சர்வோதயா நகரில் வசித்து வந்தவர் ஆர்த்தி. விட்டில் கணவருடன் சண்டை போட்டுக்கொண்டு தனது 9 மாத ஆண் குழந்தையை எடுத்துக்கொண்டு காட்கோபர் ரயில் நிலையத்திற்கு வந்தார். அவர் பயணிகள் நடந்து செல... மேலும் பார்க்க

`கழுத்தில் கயிறு தழும்பு, வாயில் ரத்தம்’ - மேலூரில் 7 வயது சிறுவன் கொலை என உறவினர்கள் குற்றச்சாட்டு!

மதுரை மாவட்டம், மேலூர் அருகே தனியாமங்கலத்தைச் சேர்ந்தவர்கள் பெரியகருப்பன் - சந்தியா தம்பதியினர். இவர்களுக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் 7 வயதில் முத்துவேலன் என்ற ஆண் குழந்தை உள்ளது. ப... மேலும் பார்க்க

இளம்பெண்ணை வெட்டிக் கொன்றுவிட்டு, லாரியில் பாய்ந்து உயிரை மாய்த்த இளைஞர் - கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

காதலியை வெட்டிக் கொன்றுவிட்டு, லாரி முன் விழுந்து காதலனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பாகலுரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கிருஷ்ணகிரிதிருப்பத்தூர் மாவட்டம், ஜோல... மேலும் பார்க்க

சேலம்: பட்டப்பகலில் விரட்டிக் கொல்லப்பட்ட இளைஞர்... முன்விரோதம் காரணமா? - போலீஸ் விசாரணை!

சேலம் மாவட்டம், சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரௌடி டேவிட் பட்டப்பகலில் 5 பேர் கொண்ட மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவத்தின்... மேலும் பார்க்க