செய்திகள் :

மும்பை: முற்றிய கணவன் மனைவி சண்டை; 9 மாத குழந்தை நடைமேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசிப்பட்ட கொடூரம்

post image

மும்பை காட்கோபர் சர்வோதயா நகரில் வசித்து வந்தவர் ஆர்த்தி. விட்டில் கணவருடன் சண்டை போட்டுக்கொண்டு தனது 9 மாத ஆண் குழந்தையை எடுத்துக்கொண்டு காட்கோபர் ரயில் நிலையத்திற்கு வந்தார்.

அவர் பயணிகள் நடந்து செல்வதற்காகக் கட்டப்பட்டுள்ள நடைமேம்பாலத்தில் தனது 9 மாத மகனுடன் நின்று கொண்டிருந்தார். அங்கு ஆர்த்தியின் கணவர் ஜாபர் ஷேக்(23) வந்தார். அதனைத் தொடர்ந்து தம்பதியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதத்தின் போது, ​​ஜாபர் குழந்தையை மனைவியிடமிருந்து பிடுங்க முயன்றார்.

இதற்கு ஆர்த்தி கடும் எதிர்ப்பு தெரிவித்து குழந்தையைக் கொடுக்க மறுத்தார். இதனால் ஜாபர் குழந்தையை ஆர்த்தியிடம் இருந்து பிடுங்கி கோபத்தில் நடைமேம்பாலத்தில் இருந்து கீழே வீசியதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் குழந்தைக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆர்த்தி தனது காயமடைந்த மகனை உடனடியாக மருத்துவச் சிகிச்சைக்காக ராஜாவாடி மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றார். அங்கு குழந்தையின் உடல்நிலை மோசமடைந்ததால், மருத்துவர்கள் குழந்தையை மேல் சிகிச்சைக்காக சயான் மாநகராட்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஒன்பது மாதக் குழந்தையான அவன், தற்போது அந்த மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான். ஜாபர் துணிகளை விற்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆர்த்தியைத் திருமணம் செய்துகொண்டார்.

மேலும், ஜாபருக்கு போதைப்பொருள் பழக்கம் இருந்ததாகவும், இதனால் தம்பதியினரிடையே அடிக்கடி வாக்குவாதங்களும் மோதல்களும் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஜாபரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் இரவு 10 மணிக்கு நடந்ததால் ரயில்வே நடைபாலத்தில் அதிக அளவில் பயணிகள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது.

`கழுத்தில் கயிறு தழும்பு, வாயில் ரத்தம்’ - மேலூரில் 7 வயது சிறுவன் கொலை என உறவினர்கள் குற்றச்சாட்டு!

மதுரை மாவட்டம், மேலூர் அருகே தனியாமங்கலத்தைச் சேர்ந்தவர்கள் பெரியகருப்பன் - சந்தியா தம்பதியினர். இவர்களுக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் 7 வயதில் முத்துவேலன் என்ற ஆண் குழந்தை உள்ளது. ப... மேலும் பார்க்க

இளம்பெண்ணை வெட்டிக் கொன்றுவிட்டு, லாரியில் பாய்ந்து உயிரை மாய்த்த இளைஞர் - கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

காதலியை வெட்டிக் கொன்றுவிட்டு, லாரி முன் விழுந்து காதலனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பாகலுரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கிருஷ்ணகிரிதிருப்பத்தூர் மாவட்டம், ஜோல... மேலும் பார்க்க

சேலம்: பட்டப்பகலில் விரட்டிக் கொல்லப்பட்ட இளைஞர்... முன்விரோதம் காரணமா? - போலீஸ் விசாரணை!

சேலம் மாவட்டம், சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரௌடி டேவிட் பட்டப்பகலில் 5 பேர் கொண்ட மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவத்தின்... மேலும் பார்க்க

கோவை: பள்ளி மாணவன் அகிலன் தற்கொலை வழக்கு – சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட விசாரணை!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள கே.கே.நாயுடு என்ற அரசு உதவி பெறும் பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வந்த அகிலன் என்ற பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாணவன் கடந்த 21ம் தேதியன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை ச... மேலும் பார்க்க

இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்; ஓய்வுபெற 2 ஆண்டுகள் உள்ள நிலையில் அதிரடி!

கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டக் குற்றப் பதிவேடுகள் பிரிவு (DCRB) காவல் ஆய்வாளராக இருந்தவர் டி.கே.வினோத் கிருஷ்ணா. இவர் முன்பு இலவும்திட்டா காவல் ஆய்வாளராகப் பணியாற்றியபோது, பத்தனம்திட்டாவைச் சேர்... மேலும் பார்க்க

கேரளம்: நீதிபதியின் 17 வயது மகன் ஓட்டிச் சென்ற பென்ஸ் கார் மோதி வியாபாரி பலி; கதறும் உறவினர்கள்!

கேரள மாநிலம், கொச்சி தெற்கு சித்தூர் நெல்லுவேலில் புத்தன்பறம்பில் வீட்டைச் சேர்ந்தவர் ஜெயபாலகிருஷ்ணன் (55). இவர் சித்தூர் கோயில் அருகே தள்ளுவண்டி உணவகம் (தட்டுக்கடை) நடத்தி வந்தார். ஜெயபாலகிருஷ்ணன் நே... மேலும் பார்க்க