செய்திகள் :

`கழுத்தில் கயிறு தழும்பு, வாயில் ரத்தம்’ - மேலூரில் 7 வயது சிறுவன் கொலை என உறவினர்கள் குற்றச்சாட்டு!

post image

மதுரை மாவட்டம், மேலூர் அருகே தனியாமங்கலத்தைச் சேர்ந்தவர்கள் பெரியகருப்பன் - சந்தியா தம்பதியினர். இவர்களுக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் 7 வயதில் முத்துவேலன் என்ற ஆண் குழந்தை உள்ளது. பெரியகருப்பன் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், தனியாமங்கலத்தில் உள்ள சொந்த வீட்டில் தாய் சந்தியா தன் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.

சிறுவன் முத்துவேலன் தனியாமங்கலம் அருகே வெள்ளலூரில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துவந்த நிலையில், நேற்று விடுமுறை தினம் என்பதால் வீட்டின் அருகே 11:00 மணியளவில் விளையாடச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

மாலை வரை சிறுவன் வீடு திரும்பாததால், சிறுவனின் உறவினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் தேடிவிட்டு, காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். அதையடுத்து காவல்துறையினரும் மக்களுடன் சேர்ந்து சிறுவனைத் தேடினர்.

இன்றும் 20-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு, அப்பகுதி முழுவதும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுவன் முத்துவேலன்

இது குறித்து, சிறுவன் முத்துவேலனின் உறவினர்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது, ``சிறுவனின் கழுத்தில் கயிறு தழும்பு இருந்தது. வாயில் ரத்தம், கண்ணிற்குக் கீழ் கருமை நிறத்தில் காயம் இருப்பதால்... சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளான் என்பது தெரிகிறது. காவல்துறையினர் புகாரளித்த உடனே இன்றுபோல் தீவிரமாகத் தேடியிருந்தால் சிறுவனை மீட்டிருக்க வாய்ப்பிருந்திருக்கும். ஆனால் காவல்துறையினர் எங்களை தேடச் சொன்னார்கள். முத்துவேலனின் இறப்பிற்கு காரணமானவர்களைக் கைதுசெய்ய வேண்டும், அதுவரை அவனுடைய உடலை வாங்க மாட்டோம்” எனத் தெரிவித்தனர்.

இளம்பெண்ணை வெட்டிக் கொன்றுவிட்டு, லாரியில் பாய்ந்து உயிரை மாய்த்த இளைஞர் - கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

காதலியை வெட்டிக் கொன்றுவிட்டு, லாரி முன் விழுந்து காதலனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பாகலுரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கிருஷ்ணகிரிதிருப்பத்தூர் மாவட்டம், ஜோல... மேலும் பார்க்க

சேலம்: பட்டப்பகலில் விரட்டிக் கொல்லப்பட்ட இளைஞர்... முன்விரோதம் காரணமா? - போலீஸ் விசாரணை!

சேலம் மாவட்டம், சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரௌடி டேவிட் பட்டப்பகலில் 5 பேர் கொண்ட மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவத்தின்... மேலும் பார்க்க

கோவை: பள்ளி மாணவன் அகிலன் தற்கொலை வழக்கு – சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட விசாரணை!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள கே.கே.நாயுடு என்ற அரசு உதவி பெறும் பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வந்த அகிலன் என்ற பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாணவன் கடந்த 21ம் தேதியன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை ச... மேலும் பார்க்க

இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்; ஓய்வுபெற 2 ஆண்டுகள் உள்ள நிலையில் அதிரடி!

கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டக் குற்றப் பதிவேடுகள் பிரிவு (DCRB) காவல் ஆய்வாளராக இருந்தவர் டி.கே.வினோத் கிருஷ்ணா. இவர் முன்பு இலவும்திட்டா காவல் ஆய்வாளராகப் பணியாற்றியபோது, பத்தனம்திட்டாவைச் சேர்... மேலும் பார்க்க

கேரளம்: நீதிபதியின் 17 வயது மகன் ஓட்டிச் சென்ற பென்ஸ் கார் மோதி வியாபாரி பலி; கதறும் உறவினர்கள்!

கேரள மாநிலம், கொச்சி தெற்கு சித்தூர் நெல்லுவேலில் புத்தன்பறம்பில் வீட்டைச் சேர்ந்தவர் ஜெயபாலகிருஷ்ணன் (55). இவர் சித்தூர் கோயில் அருகே தள்ளுவண்டி உணவகம் (தட்டுக்கடை) நடத்தி வந்தார். ஜெயபாலகிருஷ்ணன் நே... மேலும் பார்க்க

கணவனின் கழுத்தை இறுக்கி கொலை செய்த தவெக பெண் நிர்வாகி கைது - பிரபல ரவுடி மரணத்தில் மர்மம் விலகியது!

கன்னியாகுமரி மாவட்டம் ​பூதப்பாண்டி அருகே உள்ள இறச்சகுளம் பூங்கா நகரைச் சேர்ந்தவர் புதூர் மணிகண்டன் என்ற சுரேஷ் (43). காவல்துறையின் பிரபல ரவுடிகள் பட்டியலில் இவரின் பெயர் இடம்பிடித்திருந்தது. கடந்த 201... மேலும் பார்க்க