செய்திகள் :

அதிபர் தேர்தல் அரசியலா?: `பிரான்ஸ் எரிகிறது; கடுமையான நடவடிக்கை உண்டு' - இம்மானுவேல் மக்ரோன்!

post image

விலைவாசி உயர்வு, மோசமான கல்விச் சூழல் போன்றவற்றைக் கண்டித்து பிரான்ஸ் நாடு முழுவதும் மக்கள் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தின் போது ஆங்காங்கே கலவரமும், கடைகளில் சூறையாடலும் நிகழ்ந்துள்ள நிலையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார். நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரையில், ``நாடு முழுவதும் நடந்த வன்முறைச் சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் கோபத்தையும், அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுவரை வன்முறையில் ஈடுபட்ட 1,800-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இம்மானுவேல் மக்ரோன்
இம்மானுவேல் மக்ரோன்

பொதுச் சொத்துக்களைச் சூறையாடியவர்கள் அதற்கான இழப்பீட்டை வழங்கியே ஆக வேண்டும். நாட்டின் அமைதியைச் சீர்குலைக்க முயன்றவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். தீவிர இடதுசாரி அமைப்புகளின் தூண்டுதலாலும், அவர்களுடன் கைக்கோத்த குற்றவாளிகளாலுமே இந்த வன்முறைகள் வெடித்துள்ளது. வரும் வாரங்களில் பொதுக் கட்டடங்கள் மற்றும் வணிக நிறுவனங்களைப் பாதுகாக்க மேயர்களுடன் இணைந்து செயல்படவும், தேவைப்பட்டால் போராட்டங்களுக்குத் தடை விதிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தப் போராட்டத்தின் போது, மத்திய பிரான்ஸில் உள்ள லிமோஜஸ் (Limoges) நகரில் அமைந்துள்ள 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற நகர மன்றக் கட்டடம் (City Hall) போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டது. இதில் அதன் கூரை இடிந்து விழுந்து, கட்டடம் பலத்த சேதமடைந்தது. பாரிஸ், மார்சேய், லியோன் மற்றும் போர்டோ போன்ற முக்கிய நகரங்களில் நூற்றுக்கணக்கான கடைகள் சூறையாடப்பட்டுள்ளன. அரசின் கணக்குப்படி சுமார் 5.5 லட்சம் மக்களும், அமைப்பாளர்களின் கூற்றுப்படி 8 லட்சம் மக்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

பிரான்ஸ் போராட்டம்
பிரான்ஸ் போராட்டம்

தலைநகர் பாரிஸில் உள்ள 'பிளேஸ் டி லா ரெபப்ளிக்' பகுதியில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மீண்டும் திரண்டதால் பெரும் பதற்றம் நிலவியது. கூட்டத்தைக் கலைக்கக் காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.
பாரிஸின் உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனேஸ், ``போராட்டம் நடத்துவது என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை. ஆனால், வன்முறை மூலம் திட்டமிட்டு அமைதியைச் சீர்குலைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது" என தெரிவித்துள்ளார்.
பாரிஸின் பிரதான வீதிகளில் கடைகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, கற்கள் சிதறிப்போய்க் கிடக்கின்றன.

பாரிஸ் பிராந்தியத்தில் மட்டும் 855 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரான்ஸ் நாட்டின் தேசியச் சின்னமான 'மரியான்' (Marianne) சிலையின் அடிப்பகுதியும் போராட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
நகரின் இந்த மோசமான நிலையைப் பார்த்துப் பல மூத்த குடிமக்கள் கண்ணீர் விட்டு வேதனை தெரிவித்துள்ளனர். வன்முறையாளர்கள் உள்ளே புகுந்ததால், முறையான கோரிக்கைகளுக்காகத் தொடங்கப்பட்ட ஒரு அமைதியான போராட்டம் தற்போது அதன் நோக்கத்தை இழந்துவிட்டதாகப் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ் போராட்டம்
பிரான்ஸ் போராட்டம்

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை முன்னிட்டு, இச்சம்பவம் பிரான்ஸ் அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. மக்ரோனின் மத்தியவாத அரசு முற்றிலும் செயலிழந்துவிட்டது என்றும், நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் வேடிக்கை பார்ப்பதாகவும் தீவிர வலதுசாரித் தலைவரான மரின் லீ பென் விமர்சித்துள்ளார். அதேவேளையில், தீவிர இடதுசாரித் தலைவரான ஜீன்-லூக் மெலன்சோன், பிரதமரின் தவறான அணுகுமுறையே இளைஞர்களையும் தொழிற்சங்கங்களையும் ஒன்றாகத் திரட்டியுள்ளது என்றும், இருப்பினும் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கும் தங்கள் போராட்டத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில், "பிரான்ஸ் எரிகிறது! எல்லைகளை மூடி உடனடியாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வாருங்கள்" எனப் பதிவிட்டுள்ளார். ஆனால், பிரான்ஸ் அதிகாரிகளும் காவல்துறையினரும் இந்த வன்முறைக்கு இடதுசாரி அமைப்புகளும் வன்முறையாளர்களுமே காரணம் என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

ஆயுத பூஜை: ``உழைப்பின் உயர்வையும், தொழிலின் மேன்மையையும் போற்றும்" - முதல்வர் விஜய் வாழ்த்து

நவ​ராத்​திரி நிறை​வாக கொண்​டாடப்​படும் சரஸ்​வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி பண்​டிகைகளை முன்​னிட்டு தமிழக மக்​களுக்கு தலை​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர். முதல்வர் விஜய் தன் அதிகாரப்பூர்வ பக்கத்தில... மேலும் பார்க்க

பினராயி விஜயனை கைதுசெய்ய தீவிரம் காட்டும் அமலாக்கத்துறை - கொந்தளிக்கும் சி.பி.எம்!

கொச்சி சி.எம்.ஆர்.எல் என்ற தனியார் தாதுமணல் கம்பெனியிடம் இருந்து மகள் வீணாவின் எக்ஸாலாஜிக் நிறுவனம் மூலம் ​முதல்வராக இருந்த சமயத்தில் பினராயி விஜயன் ரூ.3.28 கோடி லஞ்சம் பெற்றதாகவும், அதை ஹவாலா பணமாக ம... மேலும் பார்க்க

``தொடரும் கொலைகள்: நான் அப்போதே சொன்னேன்" - ஸ்டாலின் சொல்வது என்ன?

தமிழ்நாட்டில் காவல்துறை தள்ளாடுவதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``அலட்சியத்தால் தொடர... மேலும் பார்க்க

`இடைத்தேர்தலில் அது நடக்காமல் போயிருந்தால் திமுக டெபாசிட்கூட வாங்கியிருக்காது!' - துரை வைகோ

திருச்சி, மன்னார்புரம் பகுதியில் புதிய பேருந்து நிறுத்தத்தை திருச்சி எம்.பி துரை வைகோ திறந்து வைத்தார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அவர்,"திருச்சி மெயின் கார்டு கேட் அருகே ரயில்வே மேம்பால பணிகள் ... மேலும் பார்க்க

கேரளம்: பேக்கரியில் ஹார்ட்டி ஒயின் விற்பனை சர்ச்சை; கிளம்பிய எதிர்ப்பு... மாற்றப்பட்ட கலால் அதிகாரி!

கேரள மாநிலம் சாலக்குடியில் உள்ள எம்.ஆர்.சி என்ற பிரபல பேக்கரியில் 15 சதவீதம் வரை ஆல்கஹால் அடங்கிய வீரியமிக்க ஹார்ட்டி ஒயின் விற்பனை தொடங்கப்பட்டது. இது குறித்த செய்திகள் நேற்று வெளியானதும் சமூக ஆர்வலர... மேலும் பார்க்க