செய்திகள் :

"அதிமுக உடைய நாங்கள் காரணமாக இருக்கமாட்டோம்" - எஸ்.பி.வேலுமணி சொல்கிறார்!

post image

அதிமுகவில் தற்போது பழனிசாமி அணி vs சி.வி.சண்முகம் அணி என்கிற பிரிவு உண்டாகியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியைத் தாண்டி, சி.வி.சண்முகம் அணி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்வு செய்து நேற்று கடிதம் கொடுத்தபோதுதான் இந்தப் புகைச்சல் வெட்ட வெளிச்சமானது.

ஆனால், அதிமுக உடையவில்லை என்று எஸ்.பி.வேலுமணி கூறுகிறார். இன்று சென்னையில் சி.வி.சண்முகம் இல்லத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது...

எஸ்.பி.வேலுமணி
எஸ்.பி.வேலுமணி

"நாங்கள் அதிமுகவை இரண்டாக உடைக்கிறோம் என்றெல்லாம் எங்கள் மீது தயவுசெய்து அவதூறு பரப்பாதீர்கள். இது சிலரால் பரப்பப்படுவது. அது எங்களுக்கு நோக்கம் இல்லை.

தொடர் தோல்வி காரணமாக சில கேள்விகளை எழுப்பினோம். அதிமுக எப்போதும் உடையாது. அதற்கு காரணமாக நாங்கள் இருக்கமாட்டோம். ஆரோக்கியமாக பொதுச்செயலாளர் பொதுக்குழு கூட்டி கட்சி கட்டுக்கோப்பாகச் செல்ல வழிவகை செய்ய வேண்டும். அதற்கு அவரும் இறங்கி வந்து செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.

'ஆளும்கட்சி உறுப்பினர்களை விட மற்ற கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கைதான் அதிகம், அதனால்.!'- ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகராகத் தேர்வாகி இருக்கும் ஜே.சி.டி.பிரபாகருக்கு தமிழக முன்னாள் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக... மேலும் பார்க்க

"நானும் முதல்வரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள்தாம்; ஆனால்" - உதயநிதி பேச்சைக் கேட்டு சிரித்த விஜய்

தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகராகப் போட்டியின்றி இன்று ஜே.சி.டி.பிரபாகர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். புதிய சபாநாயகருக்கு எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டசபையில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வக... மேலும் பார்க்க

'சபாநாயகரை ஏன் அவை முன்னவரும், எதிர்க்கட்சி தலைவர் அமர வைக்கிறார்கள்?' - விஜய் சொன்ன குட்டி வரலாறு

தமிழ்நாடு சட்டமன்றம் இன்று கூடியுள்ளது. சபாநாயகராக தவெக சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகர் தேர்ந்தெடுக்கப்பட்டு, சபாநாயகர் இருக்கையில் அமர வைக்கப்பட்டார். அதன் பின், ஒவ்வொரு கட்சிக்கும் பேச வாய்ப்ப... மேலும் பார்க்க

"இன்றும் இந்தியர்கள் 'கூலி' என இகழப்படுகிறோம்; அதே கூலியின் வாரிசு தான் நான்' - ட்ரினிடாட் பிரதமர்

பீகாரின் ஒரு குக்கிராமத்தில் வறுமையின் பிடியில் சிக்கி, பிழைப்புக்காகக் கப்பல் ஏறிய ஓர் ஏழைத் தொழிலாளியின் வாரிசுதான் பின்னாளில் ஒரு நாட்டின் பிரதமராக உயர்வார் என்று அன்று எவரும் கற்பனை செய்துகூடப் பா... மேலும் பார்க்க

சட்டசபை: "அரசு சிறப்பாகச் செயல்பட, எதிர்க்கட்சிகளுக்குப் பேச வாய்ப்பு தாருங்கள்" - இபிஎஸ்

தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகராகப் போட்டியின்றி இன்று ஜே.சி.டி.பிரபாகர் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். புதிய சபாநாயகருக்கு எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டசபையில் வாழ்த்துகளைத்... மேலும் பார்க்க