செய்திகள் :

"அந்தப் பாடல் இல்லாத சித்திரைத் திருவிழாவை நினைத்துப் பார்க்க முடியாது" - தேவாவிற்கு ஸ்டாலின் அஞ்சலி

post image

இசையமைப்பாளர் தேவாவின் மறைவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

"தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன்.

பொறாமை, வஞ்சகம், சூது வாது ஏதுமறியாத வெள்ளை மனம் கொண்டவர் தேவா. கானா வகைமைப் பாடல்களை திரையிசையில் பெரிய அளவில் புகுத்தி, கானா என்றாலே தேவாதான் என அறியப்பட்டவர்.

எளிமையான கிராமத்துப் பின்னணியில் இருந்து சென்னைக்கு வந்து, தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்து எத்தனையோ பேருக்கு ஆதர்சமாகத் திகழ்ந்தவர்.

உச்ச நட்சத்திரங்கள் அனைவரது திரைப்படங்களுக்கும் இசையமைத்து, அவற்றின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்.

திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின்

ரஜினி, கமல்...

குறிப்பாக, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் தேவா அவர்கள் இணைந்து பணியாற்றிய அண்ணாமலை, பாட்ஷா, அருணாசலம் ஆகிய திரைப்படங்களின் பாடல்கள் பெருவெற்றியை ஈட்டின.

இன்றளவும், தேவா அவர்களின் இசையோடுதான் ரஜினிகாந்த் அவர்களின் பெயர் திரையில் தோன்றுகிறது என்பதில் இருந்தே அதன் வீச்சை உணர்ந்துகொள்ளலாம்.

நான் ஆட்டோக்காரன் ஒலிக்காத ஆட்டோ ஸ்டாண்டுகளே தமிழ்நாட்டில் இருக்காது. கலைஞானி கமலஹாசன் அவர்களது அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம் போன்ற நகைச்சுவைப் படங்களிலும் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.

ரஜினி, கமல் மட்டுமல்லாமல், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும் பாசமுள்ள பாண்டியரே உள்ளிட்ட பல வெற்றிப்பாடல்களை தேவா அளித்திருக்கிறார்.

குறிப்பாக, வாராரு அழகர் வாராரு என்ற தேவாவின் பாடல் இல்லாத சித்திரைத் திருவிழாவை மதுரைக்காரர்களால் நினைத்துப் பார்க்கவே முடியாது.

நாயகர்களுக்கான mass பாடல்கள் மட்டுமின்றி, மனதை வருடும் மெல்லிசைப் பாடல்களிலும் தேவாவுக்கு நிகர் தேவாதான். ஆசை, காதல் கோட்டை, கண்ணெதிரே தோன்றினாள், காலமெல்லாம் காதல் வாழ்க, ஆஹா என நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் மெல்லிசையை தேவா தந்துள்ளார். தலைவர் கலைஞர் அவர்கள்தான், தேவா அவர்களின் இசையின் இனிமையை மெச்சி 'தேனிசைத் தென்றல்' என்ற பட்டத்தை அவருக்கு வழங்கினார்.

எண்பதுகளில் தனது திரையிசைப் பயணத்தைத் தொடங்கிய அவர் இன்றைய இளைஞர்களான அனிருத் உள்ளிட்டோரின் இசையிலும் எந்தத் தலைக்கனமும் இல்லாமல் நட்புணர்வோடு பாடியுள்ளார்.

தேனிசைத் தென்றல் வீசுவது நிற்காது!

அண்மைக்காலமாக, அவரது இசைக் கச்சேரிகளும் எல்லா ஊர்களிலும் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன.

தமிழ் வெகுசன இசை வரலாற்றை தேவா அவர்களை விடுத்துவிட்டு எவராலும் எழுத முடியாது. பல அத்தியாயங்களை அவருக்கென ஒதுக்கியாக வேண்டும்.

ஒருபுறம் இசைஞானி இளையராஜா அவர்களும், மறுபுறம் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் அவர்களும் கோலோச்சிய காலத்திலும் தேவா தனக்கெனத் தனிப்பாதை அமைத்து வெற்றி கண்டார்.

இசையில் வல்லவர் என்பதைத் தாண்டி, மிகவும் நல்லவர் என்ற பெயரையும் பழகிய அனைவரிடமும் பெற்றவர்தான் தேவா.

தேவா அவர்கள் மண்ணை விட்டு மறைந்தாலும் அவரது தேனிசைத் தென்றல் வீசுவது நிற்காது.

தேவா அவர்களை இழந்து வாடும் அவரது மகன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சகோதரர் முரளி உள்ளிட்ட குடும்பத்தினருக்கும்,

திரையுலக நண்பர்களுக்கும், தேவா அவர்களின் இரசிக நெஞ்சங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்".

சூப்பர் ஸ்டார் Title Card முதல் சிங்கப்பூர் கௌரவம் வரை: தேனிசை தென்றல் தேவா 'Not an Easy Job'!

வொயிட் அன்ட் வொயிட் ஜிப்பா - பேண்ட் இவருடைய நிரந்தர உடை. கானா, குத்து, மெல்லிசை எனத் திரையிசையில் ஆல்-ரவுண்டர் இவர். கரகரக் கட்டைக் குரல் இவருடைய ப்ளஸ். எப்போதுமே மெல்லிய புன்னகையை இவரது முகத்தில் காண... மேலும் பார்க்க

'ஃப்ளோர் அசிஸ்டண்ட் டூ தேனிசைத் தென்றல்' - தேவாவின் தூர்தர்ஷன் நாள்களை நினைவுகூரும் எம்.எஸ்.பெருமாள்

சினிமாவுக்கு வரும் முன் சுமார் எட்டு ஆண்டுகள் தூர்தர்ஷனில் ஃப்ளோர் அசிஸ்டண்டாக வேலை செய்தவர் மறைந்த இசையமைப்பாளர் தேவா.தேவா தூர்தர்ஷன் வந்த காலத்தை நினைவு கூர்கிறார் தூர்தர்ஷனின் முன்னாள் இயக்குநர் எம... மேலும் பார்க்க

Deva: "'கவலைப்படாதே சகோதரா' என்று பாடியவனே! இன்று நான் கவலைப்படாமல் என்ன செய்ய?" - வைரமுத்து இரங்கல்

இன்று (அக்டோபர் 17) உடல்நலக் குறைவால் இசையமைப்பாளர் தேவா காலமாகியுள்ளார். இவரது மறைவிற்கு பாடலாசிரியர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். "சாவாப் பாடல்கள் தந்த தேவா மறை... மேலும் பார்க்க

'தேனிசைத் தென்றல்' தேவா: தலைமுறைகள் கடந்தும் மனதில் ஒலிக்கும் மெட்டுகள்!

சாதாரணப் பின்னணியில் தொடங்கி, தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவாவின் இசைப் பயணம் திரையுலகில் இன்றியமையாத ஒன்று!தமிழ் சினிமாவில் அவரின் சில பாடல்கள் ஒலிக்கும்போதே,... மேலும் பார்க்க

"தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பாகும்" - முதல்வர் விஜய் | இசையமைப்பாளர் தேவாவிற்கு இரங்கல் | Live Blog

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தமிழ்த் திரையுலகின் தனித்துவமான இசையமைப்பாளரும், கானா பாடல்களால் எளிய மக்களின் மனங்களைக் கவர்ந்தவருமான 'தேனிசைத் தென்றல்' திரு.தேவா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதி... மேலும் பார்க்க

Deva: 'தேனிசை தென்றல்' தேவா காலமானார்... திரையுலகினர் அதிர்ச்சி

தமிழ் திரைப்படத் துறையில் 1990-களில் தங்களின் இசையால் முத்திரை பதித்த முன்னணி இசையமைப்பாளர்களில் "தேனிசைத் தென்றல்" தேவா மிக முக்கியமானவர் ஆவார். முணுமுணுக்கும் வகையிலான மெல்லிசைப் பாடல்கள், கானா பாடல... மேலும் பார்க்க