செய்திகள் :

Deva: 'தேனிசை தென்றல்' தேவா காலமானார்... திரையுலகினர் அதிர்ச்சி

post image

தமிழ் திரைப்படத் துறையில் 1990-களில் தங்களின் இசையால் முத்திரை பதித்த முன்னணி இசையமைப்பாளர்களில் "தேனிசைத் தென்றல்" தேவா மிக முக்கியமானவர் ஆவார்.

முணுமுணுக்கும் வகையிலான மெல்லிசைப் பாடல்கள், கானா பாடல்கள் என 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து எல்லோரின் மனதிலும் இடம் பிடித்தவர். அவர் இன்று காலை திடீரென காலமானார். அவருக்கு வயது 75.

Deva Concert - Meesaya Murukku 2
Deva Concert - Meesaya Murukku 2

இசையமைப்பாளர் தேவா, ரஜினிகாந்த்,கமல் ஹாசன், விஜய், அஜித் எனத் தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலரின் படங்களுக்கு சூப்பர் ஹிட் பாடல்களையும், மாஸான பின்னணி இசையையும் வழங்கி ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

குறிப்பாக, ரஜினிகாந்தின் 'அண்ணாமலை', 'பாட்ஷா' மற்றும் அஜித்தின் 'ஆசை', 'காதல் கோட்டை' போன்ற திரைப்படங்களில் இவருடைய இசை இன்றளவும் கொண்டாடப்படுகிறது. நான்கு தசாப்தங்களுக்கும் மேலாகத் தனது அசாத்திய இசைப் பயணத்தால் தமிழ்த் திரையுலகை ஆளுகை செய்த பெருமை இவருக்குச் சேரும்.

இந்நிலையில் இன்று காலை அவரது தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டவர் திடீரென காலமாகியிருக்கிறார். அவரது மறைவு குறித்து திரையுலகினர் அதிர்ச்சியிலும் சோகத்திலும் மூழ்கியுள்ளனர். மறைவு குறித்த விபரம் பற்றிய மருத்துவமனை அறிக்கை விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

'தேனிசைத் தென்றல்' தேவா: தலைமுறைகள் கடந்தும் மனதில் ஒலிக்கும் மெட்டுகள்!

சாதாரணப் பின்னணியில் தொடங்கி, தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவாவின் இசைப் பயணம் திரையுலகில் இன்றியமையாத ஒன்று!தமிழ் சினிமாவில் அவரின் சில பாடல்கள் ஒலிக்கும்போதே,... மேலும் பார்க்க

"தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பாகும்" - முதல்வர் விஜய் | இசையமைப்பாளர் தேவாவிற்கு இரங்கல் | Live Blog

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தமிழ்த் திரையுலகின் தனித்துவமான இசையமைப்பாளரும், கானா பாடல்களால் எளிய மக்களின் மனங்களைக் கவர்ந்தவருமான 'தேனிசைத் தென்றல்' திரு.தேவா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதி... மேலும் பார்க்க

அனிருத் - காவியா மாறன் திருமண வரவேற்பு: சென்னையில் எங்கு? ஸ்டாலின் அறிவிப்பு

வருகிற நவம்பர் மாதம், சன்ரைசர்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காவியா மாறன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கு திருமணம் நடைபெற உள்ளது. இந்தத் திருமண வரவேற்பிற்கான அழைப்பை 'குடும்பத் தலைவர்'... மேலும் பார்க்க

Anirudh: 'ஆஹா கல்யாணம்...' - அனிருத் - காவ்யா மாறன் திருமணம்; எங்கே? எப்போது? வெளியான தகவல்

இசையமைப்பாளர் அனிருத்துக்கும், சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனுக்கும் திருமணம் நடைபெறவிருப்பதாகக் கடந்த சில மாதங்களாகவே பேசப்பட்டு வந்தது. தற்போது அத்தகவல் உறுதியாகி இருக்கிறது... மேலும் பார்க்க

Jailer 2: "ரஜினி சாருக்குக் கொடுக்கும் மரியாதைக்காக..." - 'ஓம்' ரிலீஸ் குறித்து இயக்குநர் ராஜ்குமார்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ், மம்மூட்டி நடிப்பில் உருவாகி ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது 'ஓம்'. சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படம் அடுத்த மாதம் 20-ம் தேதி திரைக்கு வருகிறது. முதலில் இப்படம்... மேலும் பார்க்க

Jailer 2: வடமாநில மல்டிப்ளக்ஸ்களில் ரிலீஸாகாத ஜெயிலர் 2; ரசிகர்கள் கவலை; காரணம் என்ன?

நடிகர் ரஜினிகாந்த்தின் 'ஜெயிலர் 2' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஆனால், வட இந்தியாவிலுள்ள ரஜினிகாந்த் ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். JAILER Stillsவட இந்தி... மேலும் பார்க்க