செய்திகள் :

"அந்த அவமானம் என் வாழ்நாள் முழுவதும் இருக்கும்!" - 'பெத்தி' பட சர்ச்சை குறித்து ஜான்வி கபூர்

post image

ராம் சரண் நடிப்பில் வெளியான 'பெத்தி' திரைப்படத்திற்காகத் தான் சந்தித்த விமர்சனங்கள் குறித்து நடிகை ஜான்வி கபூர் பேசியிருக்கிறார்.

ஜான்வி கபூர்
ஜான்வி கபூர்

கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் 'காஃபி வித் கரண்' நிகழ்ச்சியில் வருண் தவானுடன் கலந்துகொண்ட ஜான்வி கபூர், தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் மற்றும் படப்பிடிப்புத் தளத்தில் தான் உணர்ந்த அசௌகரியங்கள் குறித்துப் பேசியிருக்கிறார்.

அவர் பேசுகையில், "இந்த விஷயத்தைப் பற்றிப் பேசவே எனக்கு மிகவும் பயமாக இருந்தது. ஏனென்றால், அந்தப் படத்தில் பலர் கடினமாக உழைத்திருக்கிறார்கள்.

ஆனால், இந்த விவகாரத்தில் என் தரப்பில் உள்ள தவறை நான் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். ஏனெனில், இது போன்ற ஒரு தவறான சித்திரிப்பு நம் சமூகத்தில், குறிப்பாகப் பெண்களுக்கு ஏற்படுத்தும் தாக்கம் என் மனசாட்சியை மிகவும் உறுத்துகிறது.

அந்த அவமானத்தை என் வாழ்நாள் முழுவதும் நான் சுமப்பேன். 'நான் இன்னும் எச்சரிக்கையாக இருந்திருக்கலாமோ?' என்று கேட்டால், நூறு சதவிகிதம் ஆம் என்று சொல்வேன்.

ஜான்வி கபூர்
ஜான்வி கபூர்

பெண்களைப் புறப்பொருளாக்கும் செயலாக இருந்ததா? என்றால், நிச்சயமாக ஆம் என்றே சொல்வேன். தென்னிந்திய சினிமாவில் முழுமையான திரைக்கதை வடிவம் கொடுக்கப்படுவதில்லை. அத்தோடு கேமரா கோணங்கள் எங்கே வைக்கப்படும் என்ற விவரங்கள் முன்பே வழங்கப்படுவது மிகக் குறைவு.

இருப்பினும், எனக்குக் கிடைத்த தகவல்களை வைத்து அந்த விவகாரத்தைப் பிரச்னை இல்லாமல் எப்படிக் கையாள்வது என்றுதான் யோசித்தேன். இனிமேல் இது போன்ற சம்பவங்கள் என் வாழ்க்கையில் நடக்காமல் பார்த்துக்கொள்வது மட்டுமே என்னால் செய்ய முடிந்தது" எனப் பேசியிருக்கிறார்.

நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்! - திரையுலகினர் இரங்கல்!

தமிழ் சினிமாவில் ரிதம், வின்னர், சதி லீலாவதி என ஏகப்பட்ட படங்கள் மற்றும் சித்தி உள்ளிட்ட சீரியல்களில் நடிதிருந்த பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 93.சிறு வயத... மேலும் பார்க்க

பரியேறும் பெருமாள் : பேரவலம்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 37

`சினி'ஸ்கோப் 37பரியேறும் பெருமாள் : பேரவலம்!குழந்தைகளுக்குள் எந்த வன்மமும் இல்லை, எந்த ஏற்றத்தாழ்வுகளும் இல்லை.வேட்டை நாய்களை வைத்துக்கொண்டு, சக நண்பர்களோடு முயல் பிடிப்பதற்காக வனாந்தரங்களில் அலைந்து ... மேலும் பார்க்க

"இராவணன் அவ்வளவு கெட்டவர் கிடையாது" - சாய் பல்லவியின் பேச்சுக்கு இணையத்தில் கிளம்பிய எதிர்ப்பு

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ராமாயணா’. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் - ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோர் இசையமைத்திருக்கின்றனர். இப்... மேலும் பார்க்க

Exclusive: மீண்டும் போலீஸாக சிலம்பரசன்; இயக்குநர் கீர்த்தீஸ்வரன்- சாய் இணையும் படத்தின் பரபர அப்டேட்

'அரசன்' படத்தை அடுத்து சிலம்பரசன் `டியூட்' கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிப்பார் என தகவல்கள் இருந்த நிலையில், இப்போது கோலிவுட் வட்டாரத்தில் புதிதாக ஒரு தகவல் பரபரத்துக் கொண்டிருக்கிறது. ஜேசன் சஞ்சய் ஹீ... மேலும் பார்க்க

'மனம் வலிக்கிறது; விமர்சனங்கள் செய்தால் பரவாயில்லை ஆனால்..!'- சுந்தர்.சி வருத்தம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 'மூக்குத்தி அம்மன்- 2' படம் வெளியாக இருக்கிறது. சுந்தர்.சி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, ரெஜினா கசாண்ட்ரா, அபிநயா, ஊர்வசி, யோகிபாபு, மைனா நந்தினி, சிங்கம்புலி... மேலும் பார்க்க

அனிருத் - காவ்யா திருமணம்: `பிரதமர் மோடி முதல் தனுஷ் வரை...' - யாருக்கெல்லாம் அழைப்பு?!

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் திருமணம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அனிருத் மற்றும் காவ்யா தம்பதி நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் ... மேலும் பார்க்க