செய்திகள் :

அன்பில் மகேஸ் வீடுகளில் சோதனை; கைப்பற்றப்பட்டவை என்னென்ன? - அறிக்கை வெளியீடு

post image

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் இன்று காலை முதல் மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற இந்தச் சோதனை நிறைவடைந்த நிலையில், சோதனையில் கைப்பற்றப்பட்ட பொருள்கள் குறித்து செய்தி அறிக்கை வெளியிடபப்ட்டிருக்கிறது.

அந்த அறிக்கையில், ``தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் அரசு அனுமதி பெற்று தருவதாகக் கூறி, பல கோடி மோசடி செய்த வழக்கில், சென்னை மற்றும் திருச்சியில் நடைபெற்ற சோதனையில் சொத்து ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

 அன்பில் மகேஸ் பொய்யாமொழி
அன்பில் மகேஸ் பொய்யாமொழி

தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் நிரந்தர அங்கீகாரம், பள்ளி தர உயர்வு, DTCP அனுமதி மற்றும் இதர அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பல கோடி பணம் வசூலித்து மோசடி செய்ததாக அளித்த புகாரின்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து, இவ்வழக்கில் தொடர்புடைய B.T.அரசகுமார், சுரேஷ் மற்றும் ராஜா ஆகிய 3 எதிரிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கின் விசாரணையின் தொடர்ச்சியாக சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு காவல் குழுவினர், பல்வேறு நபர்களிடம் விசாரணை செய்து, ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்களின் அடிப்படையில், அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி என்பவர் மீது ஊழல் தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மத்திய குற்றப்பிரிவு போலீசார்
மத்திய குற்றப்பிரிவு போலீசார்

இன்று (16.09.2026) அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்குச் சொந்தமான சென்னையில் 2 இடங்கள் மற்றும் திருச்சியில் 2 இடங்கள், இவரது உதவியாளர்களான வாலாடி கார்த்திக், அருண் பிரகாஷ் மற்றும் பிரகாஷ் ஆகியோருக்குச் சொந்தமான இடங்கள் என மொத்தம் 9 இடங்களில் சென்னை, மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தச் சோதனையில் சொத்து ஆவணங்கள், வங்கி விவரங்கள், காசோலைகள் ஆகியவற்றுடன் சேர்த்து வழக்கு சம்பந்தமாக 118 ஆவணங்கள், செல்போன்கள்–18, Laptop–3, Pendrive–8, Desktop (inbuild Hard Disk)–2, Tablet–1, Apple I pad –1 கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் இவ்வழக்கில் சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து, விசாரணை செய்து வருகின்றனர்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

புகழ்பெற்ற கன்னட நடிகர் அனந்த் நாக்-க்கு தாதாசாகேப் பால்கே விருது; பிரதமர் மோடி வாழ்த்து!

இந்தியத் திரைத்துறைக்கு ஆற்றிய மிகச்சிறந்த பங்களிப்பிற்காக, மூத்த நடிகர் அனந்த் நாக் அவர்களுக்கு 2024-ம் ஆண்டிற்கான புகழ்பெற்ற ‘தாதாசாகேப் பால்கே விருது’ வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது... மேலும் பார்க்க

"தவெக தனிப்பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணிக்கு எந்தப் பங்கமும் வராது" - விஜய் வசந்த் எம்பி நம்பிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் சமூக ஊடகத்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் விகடனுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறுகையில், "சமூக ஊடகங்களின் முக்கியத்துவம் நீண்ட கா... மேலும் பார்க்க

``நான் யாரா? சுயமரியாதையுடைய இம்மண்ணின் மைந்தன்" - பிரவீன் சக்கரவர்த்திக்கு செல்வப்பெருந்தகை பதில்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர் சந்திப்பின்போது, ``ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளாராக ஏற்காதவர்களுடன் எப்படி கூட்டணி வைக்க முடியும்?" என்கிற ரீதியில் கேள்வி எழுப்பியி... மேலும் பார்க்க

தாம்பரம் மாநகராட்சி முறைகேடு: ``செயல்முறை குறைபாடா? அப்பட்டமான முறைகேடா?" - அறப்போர் இயக்கம் கேள்வி

தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் நடைமுறைகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் கூறி அறப்போர் இயக்கம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடு... மேலும் பார்க்க

போனில் வந்த ஆதவ்; தினமும் முதல்வருக்கு அப்டேட்; எப்படி இருக்கிறார் கொளத்தூர் MLA வி.எஸ்.பாபு?

கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்டு, அவரை தேர்தலில் தோற்கடித்தவர் த.வெ.க-வின் வி.எஸ்.பாபு. வெற்றிப் பெற்றவுடன், 'its over' என்பதுபோல அவர் ... மேலும் பார்க்க

"அமைச்சர் பதவி கிடைத்ததால்தானே நீங்கள் கூட்டணி மாறினீர்கள்" - திருமாவளவனுக்கு பிரேமலதா பதிலடி

விசிக தலைவரும், எம்பியுமான திருமாவளவன் சமீபத்தில் கலந்துகொண்ட திருமண நிகழ்ச்சியில் பேசியபோது, "நீண்டகாலம் திமுகவோடு பயணித்த கட்சிகளுக்கான தொகுதிகளைக் குறைத்து, திடுமெனக் கூட்டணியில் இணைந்த கட்சிக்கு ய... மேலும் பார்க்க