O.M: "அதற்கும் நான்தான் திட்டு வாங்கினேன்" - வைரல் Reels-க்கு விளக்கமளித்த தனுஷ்
"அப்படித்தான் படங்களை புரொமோட் செய்கிறார்கள்; ஆனால் அவையெல்லாம் ஹிட் ஆகிறதா?" - நாகர்ஜுனா
மகேஷ் உப்பாலா இயக்கத்தில், அறிமுக நடிகர் அனீஷ், நடிகை அனஸ்வர ராஜன் நடித்துள்ள 'இட்லு அர்ஜுனா' திரைப்படம் கடந்த நவம்பர் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அனீஷ், டோலிவுட் தயாரிப்பாளர் மகேஷ் ரெட்டியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை நடிகர் நாகார்ஜுனா வெளியிட்டார். இந்தப் படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்ட நாகார்ஜுனா திரைப்படம் தொடர்பாகப் பேசியிருக்கிறார்.
இப்படத்தைத் தான் வெளியிட்டதற்கான காரணம் குறித்துப் பேசிய நாகார்ஜுனா, "படக்குழுவினர் முதலில் படத்தின் கதையை என்னிடம் காட்டினார்கள்.
என் நண்பரின் மகன் நடிக்கிறார் என்பதற்காக மட்டும் நான் இப்படத்தை வெளியிடவில்லை. அப்படி வெளியிடுவதால் மட்டும் படம் வெற்றி பெற்றுவிடாது. பலரும் அப்படித்தான் படங்களை புரொமோட் செய்கிறார்கள், ஆனால் அவையெல்லாம் ஹிட் ஆகிறதா என்ன?

யார் படத்தை வழங்குகிறார்கள் என்பதை விட, படத்தில் நல்ல கன்டென்ட் இருந்தால் மட்டுமே அது வெற்றி பெறும்" என்றவர், தெலுங்கு சினிமாவில் சமீபகாலமாக கிராபிக்ஸ் காட்சிகள் குறித்து எழும் விமர்சனங்கள் பற்றிப் பேசுகையில், "திரைப்படங்களை ரிலீஸ் தேதிக்குக் குறைந்தது இரண்டு மாதங்களுக்கு முன்பே முடித்துவிட வேண்டும்.
அப்போதுதான் 75 சதவீதத்தில் இருக்கும் ஒரு படத்தை 150 சதவீதத்திற்கு மெருகேற்ற முடியும். பணத்தை எப்போது வேண்டுமானாலும் செலவு செய்யலாம். ஆனால் தொழில்நுட்பப் பணிகளை நேர்த்தியாகச் செய்யப் போதிய கால அவகாசம் ஒதுக்குவது மிக அவசியம்" எனப் பகிர்ந்துகொண்டார்.
இதனைத் தொடர்ந்து, நாகார்ஜுனாவின் 100-வது திரைப்படமான 'கிங் 100' கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் என்ற அப்டேட்டையும் பகிர்ந்துகொண்டார்.


















