செய்திகள் :

'அப்படி பேசியிருக்கக் கூடாது..!'- மதிமுக குறித்து பேசிய செங்கோட்டையன்; துரை வைகோ ரியாக்ஷன் என்ன?

post image

மதிமுக குறித்த தவெக அமைச்சர் செங்கோட்டையனின் பேச்சு குறித்து அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ பேசியிருக்கிறார்.

கோபிசெட்டிப் பாளையத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "இன்னும் சில நாள்களில் மதிமுகவைப் போல அதிமுக ஆகிவிடும். மதிமுகவில் தலைவர்கள் மட்டும்தான் உள்ளனர். அதேபோல அதிமுக நிலைமையும் விரைவில் அப்படியாகி விடும்" என்று பேசியிருக்கிறார்.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

செங்கோட்டையனின் இந்தப் பேச்சு மதிமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களிடம் நேற்று (ஆகஸ்ட் 25) பேசிய துரை வைகோ, “செங்கோட்டையனைத் தவெகவின் அமைச்சராக மட்டும் பார்க்கவில்லை. தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராகப் பார்க்கிறேன். வைகோ மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார். நானும் அவரை பல முறை சந்தித்திருக்கிறேன்.

முதல்வர் விஜய் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார். அதனால்தான் மதிமுக, தவெக கூட்டணியை ஆதரிக்கிறது. இதற்காக எங்களுடைய 2 எம்.எல்.ஏக்களை இழந்திருக்கிறோம். இந்நிலையில் செங்கோட்டையன் அப்படி பேசியிருக்கக் கூடாது. அவரது பேச்சு மதிமுகவினரை புண்படுத்திவிட்டது.

துரை வைகோ
துரை வைகோ

செங்கோட்டையன் நா தவறி கூட பேசியிருக்கலாம். அவர் வேண்டும் என்றே இப்படி பேசியிருக்க வாய்ப்பு இல்லை. வரும் காலங்களில் இது போன்ற பேச்சுகளைத் தவிர்த்துகொள்ள வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு; ஆளுநரைச் சந்தித்த JCD பிரபாகர் - என்ன பேசினார்கள்?

தமிழ்நாட்டில் தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருக்கு அரசியல் கட்சியினர் மற்றும் மக்களிடையே பாராட்டுகள் கிடைத்தன. இன்று சென்ன... மேலும் பார்க்க

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தனித்துக் களமிறங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள்! - யார் எங்கே?

வருகிற அக்டோபர் 6-ம் தேதி, தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில், இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக வென்றிருந்தது. மதுராந்தகத்தில் மரகதம... மேலும் பார்க்க

BRICS: "இன்று உலகளவில் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன" - மோடி பேச்சு

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டின் நிறைவு நாள் இன்று. மாநாட்டில் இன்று இந்தியப் பிரதமர் மோடி காலநிலை மாற்றம் குறித்து, “இந்திய நாகரிகத்தில், இயற்கை அன்னையாகப் போற்றப்படுகிறது. பல நூற்றாண்டுகளாகவே... மேலும் பார்க்க

"தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!” - நிர்மல் குமார்

மிசா சட்டத்தின் கீழ் கைதான திமுக தலைவர் ஸ்டாலினை அவதூறாக பேசியதாக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரை எதிர்த்துத் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போ... மேலும் பார்க்க

"நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்" - தவெகவிற்கு ஆ.ராசா எச்சரிக்கை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திமுகத் தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறித்துச் சர்ச்சையாகப் பேசியிருந்தார். விஜய்யின் இந்தப் பேச்சிற்கு எதிர்ப்புத் தெ... மேலும் பார்க்க

"பாஜக-வை எதிர்க்க பயப்படும் தவெக; பாராட்டியாவது கருத்து சொல்லலாம்!" - தோழர் பாலபாரதி கிண்டல்!

சட்டமன்றக் கூட்டத்தொடரில், காவல்துறை மானியக் கோரிக்கையின்போது முதல்வர் அளித்த ஆவேச உரை, அரசியல் அரங்கில் பலத்த சர்ச்சையையும் விமர்சனத்தையும் உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில், த.வெ.க அரசுக்கு ஆதரவு ... மேலும் பார்க்க