செய்திகள் :

அமெரிக்க வரியால் வணிகங்களுக்கு பாதிப்பு; இதனால், அவற்றுக்கு $7.5 பில்லியன் கனட அரசு உதவி!

post image

கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி முதல், கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி ஆகும் சில பொருள்களுக்கு 50 சதவிகித வரியை விதித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

மேலும், “2027-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல், கனடாவில் இருந்து இறக்குமதி ஆகும் அனைத்துக் கார்கள், டிரக்குகள், வாகன உதிரிபாகங்கள் மற்றும் எஃகு மீதான வரிகள் 50% ஆக உயர்த்தப்படும்” என்றும் அறிவித்திருக்கிறார் ட்ரம்ப்.

கனடாவிற்கு அமெரிக்காதான் ‘டாப் ஏற்றுமதி நாடு’ என்பதால், இந்த அறிவிப்பு கனடாவிற்கு நல்ல அடி.

ட்ரம்ப்
ட்ரம்ப்
இதனால், அமெரிக்காவிற்குப் பதிலடி தருவதற்குக் கனடா சில முடிவுகளை எடுத்துள்ளது. அவற்றைச் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது கனடா அரசு. அவை...

என்ன பிரச்னை?

“அமெரிக்கா - கனடா பேச்சுவார்த்தையின் போது, கனடாவிடமிருந்து அமெரிக்கா அதிகமாக எதிர்பார்த்தது.

இதனால், கனடாவின் தொழிலாளர்கள், வணிகங்கள், முக்கியத் துறைகள் மற்றும் தேசிய நலனைப் பாதிக்கும் ஒரு மோசமான ஒப்பந்தத்தை ஏற்பதை விட, பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்தம் செய்யக் கனடா முடிவெடுத்தது.

கனடாவின் பதிலடி

இந்த வர்த்தக மோதலைக் கனடா விரும்பவில்லை. ஆனால், கனடா வணிகங்களுக்கும் சம வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதால் அமெரிக்காவின் வரிக்கு நாம் பதிலடி கொடுத்தாக வேண்டும்.

கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி முதல், $27.6 பில்லியன் மதிப்புள்ள கனடியப் பொருள்கள் மீது 50 சதவிகித வரியை அமெரிக்கா விதித்துள்ளது. இதை எதிர்த்துக் கனடாவுக்கு ‘டாலருக்கு டாலர்’ என்கிற வகையில் அமெரிக்கப் பொருள்களுக்குக் கனடா புதிய வரிகளை விதிக்கும்.

கனடா
கனடா

வருகிற செப்டம்பர் 8-ம் தேதி முதல், அமெரிக்காவின் பிரிவு 338 மற்றும் பிரிவு 232 வரிகளின் கீழ், குறிப்பிட்டுள்ள பொருள்களுக்கு இணையான அமெரிக்கப் பொருள்கள் மீது கனடா 15 சதவிகிதம், 25 சதவிகிதம், 50 சதவிகிதம் என வரிகளை விதிக்கும்.

இது அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் $27.6 பில்லியன் மதிப்புள்ள பொருள்களைப் பாதிக்கும்.

கனட அரசின் உதவி

மேலும், அமெரிக்க வரிகளால் பாதிக்கப்பட்ட கனடியத் தொழிலாளர்கள் மற்றும் வணிகங்களை ஆதரிப்பதற்காக, அரசு $7.5 பில்லியன் மதிப்பிலான புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட உதவித் திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது கனடா அரசு.”

தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு; ஆளுநரைச் சந்தித்த JCD பிரபாகர் - என்ன பேசினார்கள்?

தமிழ்நாட்டில் தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருக்கு அரசியல் கட்சியினர் மற்றும் மக்களிடையே பாராட்டுகள் கிடைத்தன. இன்று சென்ன... மேலும் பார்க்க

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தனித்துக் களமிறங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள்! - யார் எங்கே?

வருகிற அக்டோபர் 6-ம் தேதி, தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில், இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக வென்றிருந்தது. மதுராந்தகத்தில் மரகதம... மேலும் பார்க்க

BRICS: "இன்று உலகளவில் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன" - மோடி பேச்சு

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டின் நிறைவு நாள் இன்று. மாநாட்டில் இன்று இந்தியப் பிரதமர் மோடி காலநிலை மாற்றம் குறித்து, “இந்திய நாகரிகத்தில், இயற்கை அன்னையாகப் போற்றப்படுகிறது. பல நூற்றாண்டுகளாகவே... மேலும் பார்க்க

"தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!” - நிர்மல் குமார்

மிசா சட்டத்தின் கீழ் கைதான திமுக தலைவர் ஸ்டாலினை அவதூறாக பேசியதாக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரை எதிர்த்துத் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போ... மேலும் பார்க்க

"நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்" - தவெகவிற்கு ஆ.ராசா எச்சரிக்கை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திமுகத் தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறித்துச் சர்ச்சையாகப் பேசியிருந்தார். விஜய்யின் இந்தப் பேச்சிற்கு எதிர்ப்புத் தெ... மேலும் பார்க்க

"பாஜக-வை எதிர்க்க பயப்படும் தவெக; பாராட்டியாவது கருத்து சொல்லலாம்!" - தோழர் பாலபாரதி கிண்டல்!

சட்டமன்றக் கூட்டத்தொடரில், காவல்துறை மானியக் கோரிக்கையின்போது முதல்வர் அளித்த ஆவேச உரை, அரசியல் அரங்கில் பலத்த சர்ச்சையையும் விமர்சனத்தையும் உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில், த.வெ.க அரசுக்கு ஆதரவு ... மேலும் பார்க்க