செய்திகள் :

`அமைச்சர் நிழ்ச்சியில் மின்தடை; அதற்கு திமுக தொழிற்சங்க அதிகாரிமீது நடவடிக்கையா?' - தங்கம் தென்னரசு

post image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் ஜெகதீஷ்வரி பங்கேற்ற நிழ்ச்சியின் போது மின்தடை ஏற்பட்டதால், அதை காரணம் காட்டி இளமின் பொறியாளர் அண்ணாதுரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது எனவும் பணி நீக்க ஆணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில்,

மின்தடை ஏற்பட்டதற்காக மின்வாரிய அதிகாரியை பழிவாங்கும் தவெக அரசின் அதிகார அத்துமீறல்! அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு அரசு ஊழியர்களை பலிகடா ஆக்குவதா ?

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் ஜெகதீஸ்வரி அவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியின்போது மின்தடை ஏற்பட்டதைக் காரணம் காட்டி, இளமின் பொறியாளர் திரு. அ. அண்ணாதுரை அவர்களை பணியிடை நீக்கம் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

 மின்வெட்டு
மின்வெட்டு

ஒரு அரசு நிகழ்ச்சியின்போது மின்தடை ஏற்படுவது என்பது விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய நிர்வாகப் பிரச்சினையாக இருக்கலாம். மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன, அதற்குப் பொறுப்பானவர்கள் யார், தொழில்நுட்பக் கோளாறா, பணியாளர்களின் அலட்சியமா அல்லது அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்திருக்கும் 'மின்வெட்டா' என்பதையெல்லாம் முறையாக விசாரித்து, உரிய நடவடிக்கை எடுப்பதுதான் ஒரு பொறுப்பான அரசின் அணுகுமுறையாக இருக்க வேண்டும். ஆனால், நிகழ்வின் உண்மையான காரணத்தைக் கண்டறிவதற்குப் பதிலாக, குறிப்பிட்ட ஒருவரை இலக்காகத் தேர்ந்தெடுத்து அவரைப் பணியிடை நீக்கம் செய்திருப்பது நியாயமற்றது.

குறிப்பாக, திரு. அண்ணாதுரை அவர்கள் தி.மு.கழகத்தின் தொழிற்சங்கமான தொமுசவைச் சேர்ந்தவர் என்பதற்காகவே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஒரு அரசு ஊழியரின் பணித்திறன் மற்றும் பொறுப்பின் அடிப்படையில்தான் நடவடிக்கை இருக்க வேண்டுமே தவிர, அவர் எந்தத் தொழிற்சங்கத்தைச் சார்ந்தவர் என்பதை வைத்து அவரது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பது ஜனநாயக மாண்புகளுக்கு எதிரானது.

அமைச்சர் ஜெகதீஸ்வரி
அமைச்சர் ஜெகதீஸ்வரி

தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு தொடர்பாகப் பொதுமக்கள் பல்வேறு புகார்களைத் தெரிவித்து வரும் நிலையில், மின்சார விநியோகத்தைச் சீராகப் பராமரிப்பதற்கான நிர்வாக நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டிய தவெக அரசு, இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஏற்றுக் கொள்ள முடியாது. மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாமல், அவற்றைத் திசைதிருப்புவதற்காக இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது மக்களிடம் ஒருபோதும் எடுபடாது.

எனவே, இளமின் பொறியாளர் திரு. அ. அண்ணாதுரை அவர்களைப் பணியிடை நீக்கம் செய்த ஆணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மின்தடை ஏற்பட்டதற்கான உண்மையான காரணத்தை வெளிப்படையான விசாரணையின் மூலம் கண்டறிய வேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போக்கை உடனடியாகக் கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

விளையாடும்போது மாயமான மூன்று சிறுவர்கள்; ஏரியில் சடலங்களாக மீட்பு - கள்ளக்குறிச்சி அதிர்ச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் வசித்து வரும் தங்கமணி என்பவரின் மகன்களான 11 வயது இமானுவேல் மற்றும் ஒன்பது வயது ஷாம் ஆபிரகாம் இருவரும், தோட்டப்பாடி பகுதியிலுள்ள விளையாட்டு மைதானத்திற்கு நே... மேலும் பார்க்க

முதுமலையில் புலியை விரட்டிச் சென்ற சர்ச்சையும், அமைச்சர் வன்னிஅரசின் விளக்கமும்! என்ன நடந்தது?

சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு அண்மையில் நீலகிரி மாவட்டத்திற்கு சென்றிருக்கிறார். மசினகுடி, பொக்காபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்... மேலும் பார்க்க

காவல் நிலையத்தில் `மிரட்டல்' தொனியில் ரீல்ஸ்; கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் வீடியோ சர்ச்சை!

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சரும் த.வெ.க-வின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளருமான வ.காந்திராஜ் தனது அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட தக்கோலம் காவல் நிலையத்தில் ஆய்வு என்ற பெயரில் நள்ளிரவில் உள்ளே சென... மேலும் பார்க்க

திருச்செந்தூர்: "ரீல்ஸ்க்காகவே கொண்டாடப்பட்ட ஒரு சூரசம்ஹார நிகழ்ச்சி" - சேகர்பாபு விமர்சனம்

திருச்செந்தூரில் நேற்று நடைபெற்ற சூரசம்ஹார விழாவில் ஆகம விதிகள் அதிகப்படியாக மீறப்பட்டிருப்பதாக முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்... மேலும் பார்க்க

ஐ.நா: `மரண தண்டனைக்குத் தடை விதிக்கும் தீர்மானம்' - எதிராக வாக்களித்த இந்தியா

உலக நாடுகளில் மரண தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கொண்டு வரப்பட்ட வரைவுத் தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்துள்ளது. 193 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில்... மேலும் பார்க்க

'கள்ள மௌனத்தை கலையுங்கள் முதல்வர் விஜய்!'

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மாவட்ட கலெக்டரை தொல்லை செய்யும் வகையில் குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படும் விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாகிக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் அந்த எம்.எல்.ஏவ... மேலும் பார்க்க