செய்திகள் :

"அம்மா, உங்களையும் அப்பாவையும் ஒன்றாக பார்த்து 35 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.!"- ராகுல் உருக்கம்

post image

இந்திய தேசிய காங்கிரஸின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் வாழ்க்கைப் பயணத்தை விவரித்து உருவாகியுள்ள சுயசரிதைப் புத்தகம் 'Belonging: A Journey of Love'.

இந்தப் புத்தகம் நவம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப் புத்தகம் தொடர்பாகவும், தனது தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டும் ராகுல் காந்தி உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார்.

ராகுல் காந்தி குடும்பம்
ராகுல் காந்தி குடும்பம்

அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், " அம்மா, உங்களையும் அப்பாவையும் ஒன்றாக நான் கடைசியாகப் பார்த்து 35 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.

அப்பா விட்டுச் சென்ற நாளிலிருந்து, அத்தனை சவால்களையும் நீங்கள் ஒருபோதும் தளராத துணிச்சலுடனும் கண்ணியத்துடனும் எதிர்கொண்டதை நான் பார்த்திருக்கிறேன்.

நீங்கள் என்னென்ன துயரங்களைச் சந்தித்தீர்கள் என்பதையும், அப்பாவுக்குப் பிறகு உங்கள் வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தது என்பதையும் உண்மையாக அறிந்தவர்கள் பிரியங்காவும் நானும் மட்டுமே.

'Belonging: A Journey of Love உங்கள் சுயசரிதை, உங்களை நேசிக்கும் கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட உள்ளது என்பதில் நான் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இன்று, அப்பாவின் பிறந்தநாள், அவர் புன்னகையுடன் தனது அழகான சோனியாவைப் பெருமிதத்துடன் பார்த்துக்கொண்டிருப்பதை என்னால் உணர முடிகிறது" என்று உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார்.

`பேச்சுவார்த்தைக்கு விருப்பமில்லை!’ - அடிதடி வழக்கில் அமைச்சர் மரியவில்சனின் சமரச முயற்சி தோல்வி

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற்ற மரியவில்சன், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சராக இருக்கிறார். இவரது உடன்பிறந்த தம்பியான ... மேலும் பார்க்க

Economic D-Day: பில்லியன் டாலர் ஆயுதங்களால் முடியாததை தடைகளால் செய்ய முடியுமா? ட்ரம்பின் திட்டம்!

பொருளாதார D-Day - ஈரானுக்கு எதிராக அமெரிக்க அதிபர் எடுத்திருக்கும் புதிய அஸ்திரம் இது. கடைசி அஸ்திரமாகக் கூட இருக்கலாம்.நேற்று (அமெரிக்க நேரப்படி) ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில், “ஈரானிய ... மேலும் பார்க்க

சபாநாயகர் விவகாரத்தில் பாஜகவுடன் உரசல்? - தென் மண்டல முதல்வர்கள் மாநாட்டை புறக்கணித்த ரங்கசாமி!

மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தென்மண்டல முதல்வர்கள் மாநாடு நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 2022-ம் ஆண்டுக்குப் பிறகு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த மாநாடு, இந்த ஆண்டு நடத்தப்படுகிறது.... மேலும் பார்க்க

`காவிரி, தொகுதி மறுவரையறை, நீட்.!' - அமித் ஷா முன் முதல்வர் விஜய் பேசியது என்ன? | முழு விவரம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் 31-வது 'தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு' சென்னை, கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று (ஆகஸ்ட் 20) நடைபெற்று வருகிறது. மத்திய அமைச்சர் அமித் ஷா ... மேலும் பார்க்க

"தீயசக்தி, தூயசக்தி எம்எல்ஏக்களுக்கு கடன் வாங்கி இலவச Car எதற்கு?" - முதல்வர் விஜய்யைச் சாடிய சீமான்

110 விதியின் கீழ் அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் (கார்) வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் நேற்று (ஆகஸ்ட்.19) சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிண... மேலும் பார்க்க

"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வருந்துகிறார்கள்" - முன்னாள் அமைச்சர் பொன்முடி

தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர் பொன்முடியின் 76-வது பிறந்த நாளை முன்னிட்டு, தொண்டர்கள் விழுப்புரம் அறிவாலயத்தில் அவரைச் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ... மேலும் பார்க்க