செய்திகள் :

நாகை: வீட்டுக்கு தெரியாமல் தோழிக்கு நகை கொடுத்து உதவி; மன உளைச்சலில் விபரீத முடிவெடுத்த பள்ளி மாணவி!

post image

நாகை மாவட்டத்தில் வீட்டுக்கு தெரியாமல் நகை கொடுத்து உதவ முயன்று சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் அந்தணப்பேட்டை புடவை கடை தெருவைச் சேர்ந்தவரின் மகள் சத்யா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) வயது (16) இவர் நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார்.

இந்நிலையில் பள்ளியில் படிக்கும் சத்யாவின் தோழி ஒருவர் சத்யாவிடம், தனது உறவினர் கடன் பிரச்சினையில் இருப்பதாகவும், அவர்களுக்கு பணம் அல்லது நகை கொடுத்து உதவுமாறு கடந்த சில நாட்களுக்கு முன்பு உதவி கேட்டார்.

இதனை நம்பி சத்யா தனது பெற்றோருக்கு தெரியாமல் வீட்டில் இருந்த 3 பவுன் நகையை எடுத்து தனது தோழிக்கு கொடுத்து இருக்கிறார்.

நகை கொடுத்த விவகாரம் சத்யாவின் பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில் தனது மகள் கொடுத்த நகையை மீட்டு தரும்படி சத்யாவின் பெற்றோர் நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.

போலீசார் சம்பந்தப்பட்ட சத்யாவின் தோழியிடம் இருந்து நகையை மீட்டு சத்யாவின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இருப்பினும், இது தொடர்பாக சத்யாவின் பெற்றோருக்கு இடையே சண்டை ஏற்பட்டு உள்ளது. பெற்றோர் இருவரும் சண்டையிட்டுக் கொண்டு உள்ளனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சத்யா நேற்று முன்தினம் வீட்டின் அறையில் இருந்த மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற நாகை போலீசார் சத்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக நாகப்பட்டினம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உதவிக்காக வீட்டுக்கு தெரியாமல் நகை கொடுத்த விவகாரத்தில் சிறுமி ஒருவர தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.77 லட்சம் தருகிறேன்: தமிழக முதல்வர் விஜய்யின் ஏ.ஐ வீடியோவை பயன்படுத்தி பெண்ணிடம் 12 லட்சம் மோசடி

ஏழைகளுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் விஜய் பேசவது போன்ற ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது. அந்த வீடியோவை மும்பை வசாய் பகுதியை சேர்ந்த வத்சலா(66) என்ற பெண் பார்த்து விஜ... மேலும் பார்க்க

`நீ எனக்குக் கிடைக்கலைனா, உன் புருஷனைக் கொன்னுடுவேன்’- குடியாத்தம் மோசடிப் பேர்வழியின் கைது பின்னணி!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள பெரும்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏ.டி.கே தினேஷ் என்கிற தினேஷ்குமார். பத்திரிகை ஒன்றில் அந்தப் பகுதி நிருபராக சுற்றிவந்த தினேஷ்குமார் மீது ஏற்கெனவே மிரட்டல், பண... மேலும் பார்க்க

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கிய நீதிமன்றம்

தூத்துக்குடியில் இயங்கி வந்த வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 22.05.2018 அன்று நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியதை அடுத்து, போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பெண்கள் உட்பட... மேலும் பார்க்க

ஆபரேஷன் தண்டர்: ஓணத்துக்கு டிரஸ் எடுக்க போனோம்! - தாயும் உடந்தை; குடும்பத்துடன் போதைபொருள் கடத்தல்!

கேரளாவில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க 'ஆபரேஷன் தண்டர்' என்ற பெயரில் கலால் அமலாக்கம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு சிறப்புப் படையினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், பெங்களூருவிலிருந... மேலும் பார்க்க

ஊட்டி: கன்னத்தில் மாறி மாறி அறைந்து கொண்ட போலீஸ் - ஹெட்மாஸ்டர்! நடந்தது என்ன?

நீலகிரி மாவட்டம் ஊட்டி மணிக்கூண்டு பகுதியில் நேற்று மாலை வந்த ஒரு காரை காவல்துறையினர் தடுத்தி நிறுத்தி சோதனை செய்துள்ளனர். வாகனத்தை ஓட்டி வந்த கடநாடு அரசுப்பள்ளி தலைமையாசிரியர் சீனிவாசன் என்பவர் மது ப... மேலும் பார்க்க

``20% கமிஷன் வேணும்… இல்லைன்னா பில் போடமாட்டேன்” - ரூ.1 லட்சம் லஞ்சம்; சிக்கிய வனச்சரக அலுவலர்!

தென்காசி மாவட்டம், புளியங்குடி சின்னமலை மற்றும் சிவகிரி வனப்பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் யானைகள் ஊருக்குள் புகுவதைத் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் யானை தடுப்பு அகழி பணியில், ஒப்பந்ததாரரிடம் பில்... மேலும் பார்க்க