செய்திகள் :

ஊட்டி: கன்னத்தில் மாறி மாறி அறைந்து கொண்ட போலீஸ் - ஹெட்மாஸ்டர்! நடந்தது என்ன?

post image

நீலகிரி மாவட்டம் ஊட்டி மணிக்கூண்டு பகுதியில் நேற்று மாலை வந்த ஒரு காரை காவல்துறையினர் தடுத்தி நிறுத்தி சோதனை செய்துள்ளனர். வாகனத்தை ஓட்டி வந்த கடநாடு அரசுப்பள்ளி தலைமையாசிரியர் சீனிவாசன் என்பவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மதுபோதையில் வாகனம் இயக்கயது தொடர்பாக வழக்கு பதிவு செய்கிறோம் என காவல்துறையினர், நடுரோட்டில் அவரின் சட்டையைப் பிடித்து இழுத்துச் சென்றதாக சொல்லப்படுகிறது.

இதனால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தலைமையாசிரியர் மற்றும் காவலர் ஒருவரும் சாலை வைத்தே ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி கன்னத்தில் அறைந்து கொண்டுள்ளனர். தொடர்ந்து, காவல்துறையினர் கூட்டாகச்‌ சேர்ந்து தலைமையாசிரியரை காவல்நிலையத்திற்கு இழுத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

காவல்துறையினர்

இது குறித்து காவல்துறையினர், " மதுபோதையில் வந்த இந்த நபர் காரில் இருந்து இறங்கி தப்பிச்செல்ல முயற்சி செய்ததால் போலீஸார் அவரை மடக்கிப் பிடித்தனர். ஆத்திரமடைந்த அவர் சீருடையில் இருந்த போலீஸ்காரரை பளார் என்று கன்னத்தில் அறைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்து போலீஸ்காரரும் அவரை மீண்டும் தாக்கி, மற்ற போலீஸார் உதவியுடன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணையில் போலீஸ்காரரை தாக்கியது, கடநாடு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் சீனிவாசன் (வயது 57) என்பதும், மது போதையில் வாகனம் ஓட்டி விபத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது" என்றனர்.

``20% கமிஷன் வேணும்… இல்லைன்னா பில் போடமாட்டேன்” - ரூ.1 லட்சம் லஞ்சம்; சிக்கிய வனச்சரக அலுவலர்!

தென்காசி மாவட்டம், புளியங்குடி சின்னமலை மற்றும் சிவகிரி வனப்பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் யானைகள் ஊருக்குள் புகுவதைத் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் யானை தடுப்பு அகழி பணியில், ஒப்பந்ததாரரிடம் பில்... மேலும் பார்க்க

சென்னை: `முதலில் தங்கை... அடுத்து மனைவி' - எலக்டரீசியனைக் கொலைசெய்த வியாபாரி; பகீர் பின்னணி!

சென்னை செங்குன்றம், பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினவேல் பாண்டியன் (40). இவர் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு புழல், காவாங்கரையைச் சேர்ந்த சரவணன் என்பவரின் தங... மேலும் பார்க்க

`இங்கதான் இருப்பா' - சிறுமியை பாலியல் கொடுமை செய்து கொன்றுவிட்டு உறவினர்களுடன் சேர்ந்து தேடிய இளைஞர்

மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் 9 வயது சிறுமி நான்காம் வகுப்பு படித்து வந்தாள். அவளது பெற்றோர் விவசாய வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், உடல் நிலை சரியில்லாமல் சிறுமி பள்ளிக... மேலும் பார்க்க

தூத்துக்குடி: திருமணம் மீறிய உறவு; பெண்ணை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்றவர் கைது

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள சால்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மனைவி குருவலட்சுமி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். அதே பகுதி... மேலும் பார்க்க

'எனக்கு ​ஐபோன், உனக்கு பைக்' தாத்தாவை கொன்று நகையை திருட காதலனுக்கு கொட்டேஷன் கொடுத்த 13 வயது பேத்தி

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் கருவாற்றா பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் சிவன்குட்டி (65). அம்பலப்புழாவைச் சேர்ந்த சிவன்குட்டி, குடும்பத்துடன் கொல்லம் பரவூரில் வசித்து வந்தார். மகளின் கணவர் ப... மேலும் பார்க்க

மதுரை: பெட்ரோல் பங்க் ஊழியரிடம் கத்தியைக் காட்டி ரூ. 35 ஆயிரம் பறிப்பு; வைரல் வீடியோவின் பின்னணி

மதுரை - மேலக்கால் பிரதான சாலையில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கில், நேற்று இரவு மதுரை பெத்தானியாபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் இரவு நேரப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.அப்போது, இருசக்கர வாகனத்தி... மேலும் பார்க்க