செய்திகள் :

சென்னை: `முதலில் தங்கை... அடுத்து மனைவி' - எலக்டரீசியனைக் கொலைசெய்த வியாபாரி; பகீர் பின்னணி!

post image

சென்னை செங்குன்றம், பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினவேல் பாண்டியன் (40). இவர் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு புழல், காவாங்கரையைச் சேர்ந்த சரவணன் என்பவரின் தங்கை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பூர்ணிமாவுக்கும் ரத்தினவேல் பாண்டியனுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். அதைத் தொடர்ந்து சரவணனின் மனைவி சரண்யாவுடன் ரத்தினவேல் பாண்டியனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்தத் தகவல் தெரிந்த சரவணன், மனைவி சரண்யாவையும் ரத்தினவேல் பாண்டியனையும் கண்டித்தார். ஆனால் இருவரும் தொடர்ந்து பழகிவந்தனர்.

கொலை
கொலை

இதனால் ஆத்திரமடைந்த சரவணன், தன்னுடைய உறவினரான எண்ணூரைச் சேர்ந்த பழனிசாமியிடம் ரத்தினவேல் பாண்டியனை தீர்த்துக் கட்டுவது தொடர்பாக ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து செங்குன்றம் அலமாதி சாலையில் ரத்தினவேல் பாண்டியன் இன்று (19.8.2026) பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, மர்ம கும்பலால் ரத்தினவேல் பாண்டியன் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் நடந்த இந்தக் கொலை குறித்து செங்குன்றம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், கொலை செய்யப்பட்ட ரத்தினவேல் பாண்டியனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

இது குறித்து செங்குன்றம் போலீஸார் கூறுகையில், ``கொலைசெய்யப்பட்ட ரத்தினவேல் பாண்டியனுக்கும் அவரின் உறவினரான சரவணனுக்கும் நீண்ட காலமாக முன்விரோதம் இருந்து வந்தது. இதையடுத்து ரத்தினவேல் பாண்டியன் எங்கு செல்கிறார் என்பதை சரவணன் ரகசியமாக கண்காணித்து வந்திருக்கிறார். இந்தச் சமயத்தில்தான் இன்று (19.8.2026) ரத்தினவேல் பாண்டியன் தனியாக பைக்கில் அலமாதி சாலையில் செல்லும் தகவல் சரவணனுக்கு கிடைத்திருக்கிறது. உடனடியாக சரவணன், தன்னுடைய சித்தப்பா பழனிசாமியை பைக்கில் அழைத்துக் கொண்டு ரத்தினவேல் பாண்டியனை பின்தொடர்ந்திருக்கிறார். அதன் பிறகுதான் இந்தக் கொலை நடந்திருக்கிறது.

கைது
கைது

இந்தக் கொலை வழக்கில் சரவணன், பழனிசாமி மற்றும் அவருக்கு உதவிய குற்றச்சாட்டில் சரவணனின் தம்பி தனசேகர் ஆகியோரைப் பிடித்து விசாரித்து வருகிறோம். விசாரணை வளையத்திலிருக்கும் சரவணன், பர்மாவிலிருந்து துணிகளை வாங்கி வந்து சென்னையில் விற்று வருகிறார். விசாரணையில் சரவணன், தன்னுடைய தங்கை, மனைவி ஆகியோருக்காக இந்தக் கொலையில் ஈடுபட்டதாக தகவல் கிடைத்திருக்கிறது. கொலைக்குப் பயன்படுத்திய கத்திகள், பைக் ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருக்கிறோம்'' என்றனர்.

`இங்கதான் இருப்பா' - சிறுமியை பாலியல் கொடுமை செய்து கொன்றுவிட்டு உறவினர்களுடன் சேர்ந்து தேடிய இளைஞர்

மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் 9 வயது சிறுமி நான்காம் வகுப்பு படித்து வந்தாள். அவளது பெற்றோர் விவசாய வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், உடல் நிலை சரியில்லாமல் சிறுமி பள்ளிக... மேலும் பார்க்க

தூத்துக்குடி: திருமணம் மீறிய உறவு; பெண்ணை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்றவர் கைது

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள சால்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மனைவி குருவலட்சுமி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். அதே பகுதி... மேலும் பார்க்க

'எனக்கு ​ஐபோன், உனக்கு பைக்' தாத்தாவை கொன்று நகையை திருட காதலனுக்கு கொட்டேஷன் கொடுத்த 13 வயது பேத்தி

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் கருவாற்றா பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் சிவன்குட்டி (65). அம்பலப்புழாவைச் சேர்ந்த சிவன்குட்டி, குடும்பத்துடன் கொல்லம் பரவூரில் வசித்து வந்தார். மகளின் கணவர் ப... மேலும் பார்க்க

மதுரை: பெட்ரோல் பங்க் ஊழியரிடம் கத்தியைக் காட்டி ரூ. 35 ஆயிரம் பறிப்பு; வைரல் வீடியோவின் பின்னணி

மதுரை - மேலக்கால் பிரதான சாலையில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கில், நேற்று இரவு மதுரை பெத்தானியாபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் இரவு நேரப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.அப்போது, இருசக்கர வாகனத்தி... மேலும் பார்க்க

திருச்சி: ரீல்ஸ் மோகம்; கோயில் சுவற்றின்மீது பெட்ரோல் பாட்டிலில் தீ வைத்து வீசிய இருவர் கைது!

திருச்சி, பாலக்கரை, காஜாபேட்டை மெயின் ரோட்டில் கிருஷ்ணன் கோயில் உள்ளது. அந்த கோயில் சுவற்றில் இரவு நேரத்தில் பெட்ரோல் பாட்டிலில் தீ வைத்து அதை கோயிலின் சுவரில் மர்ம நபர்கள் வீசி உள்ளனர். இதனால், அந்த ... மேலும் பார்க்க

ஸ்கூட்டரில் சென்ற பெண்; துரத்திச் சென்று செயின் பறிக்க முயன்ற தவெக நிர்வாகி? - போலீஸ் தீவிர விசாரணை

கரூர் - கோவை சாலையில் உள்ள என்.எஸ்.கே நகர் பகுதியைச் சேர்ந்த மகுடபதியின் மனைவி பிரியா. இவர், தனது பெற்றோரை சந்திப்பதற்காக எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஈரோடு மாவட்டம், கொடுமுடி நோக்கி சென்றுள்ளார். அப்போது, ... மேலும் பார்க்க