செய்திகள் :

கல்லூரி மாணவிகளின் செலவுக்கு மாதம் ரூ.2000; மேற்படிப்பை ஊக்கப்படுத்த மகாராஷ்டிரா அரசு புது திட்டம்

post image

மகாராஷ்டிரா அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளின் படிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு நிதியுதவி செய்ய முடிவு செய்துள்ளது.

மாணவிகள் படித்துக்கொண்டே சம்பாதிக்கும் திட்டத்தில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தொழில்துறை மற்றும் கல்வித் துறையின் கூட்டு முயற்சியின் மூலம் உயர்கல்வி படிக்கும் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000 "பாக்கெட் மணியாக" வழங்குவதற்கான முயற்சியைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்தார்.

இந்த முயற்சியானது மாணவிகளுக்கு நிதி உதவி வழங்குவதையும் அவர்களின் நம்பிக்கையை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களில் இதற்கு முன்னர் செயல்படுத்தப்பட்ட 'சம்பாதியுங்கள் கற்றுக்கொள்ளுங்கள்' என்ற திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட்டது போன்று இப்போது உதவி வழங்கப்படும் என்று துறையின் அதிகாரி ஒருவர் கூறினார்.

மாணவிகள்
மாணவிகள்

இத்திட்டத்திற்கான நிதியானது முதன்மையாக தொழில் நிறுவனங்கள், தனியார் அறக்கட்டளைகள் அல்லது கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) நிதியிலிருந்து வரும் என்று அதிகாரி தெளிவுபடுத்தினார்.

கல்லூரி நேரத்திற்குப் பிறகு பெண்களுக்கு ஏதேனும் ஒரு வேலையை வழங்கவும், அவர்களுக்கு CSR நிதியில் அதற்கு சம்பளமாகக் கொடுக்க கல்லூரிகள் தொழில் நிறுவனங்களுடன் ஒத்துழைக்கும் என்று அவர் கூறினார்.

உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்விப் படிப்புகளைத் தொடரும் மாணவிகளுக்கு இத்தகைய பண ஊக்குவிப்பு வகுப்பறைகளில் பாலின விகிதத்தை அதிகரிக்க உதவும்" என்று அந்த அதிகாரி கூறினார்.

இத்திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 12 லட்சம் மாணவிகள் பயனடைவர். டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டங்களைத் தொடர்ந்து, மாநில உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறை மாணவர்களை அணுகும் திட்டத்தை ஏற்கனவே தொடங்கியுள்ளது.

கடந்த வாரம், மாநிலத்தின் பல்கலைக்கழகங்களின் அதிகாரிகளுடனான சந்திப்பின்போது, ​​அனைத்து துணைவேந்தர்கள் மற்றும் சார்பு துணைவேந்தர்கள் குறைந்தபட்சம் 50 மாணவர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொள்ளுமாறு அமைச்சர் பாட்டீல் உத்தரவிட்டார்.

மேலும் பாட்டீல் சமீபத்தில் மாணவர்களைச் சந்தித்து, வினாத்தாள் கசிவைத் தடுக்க அரசு தேவையான நடவடிக்கை எடுக்கும் என்று அவர்களுக்கு உறுதியளித்தார். வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மனித தலையீட்டைக் குறைக்க இணைய பாதுகாப்பு நடவடிக்கைகள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் மாணவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டது.

மாணவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் கொடுக்கும் திட்டம் குறித்து மும்பை பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியரான மிருதுல் நைல் கூறுகையில், "இந்தத் திட்டம் பெண்களைத் திருப்திபடுத்தும் நோக்கத்தில் இருக்கலாம், ஆனால் இது அவர்களுக்குப் பெரிதும் உதவும்.

கல்வி கட்டணம் உயர்ந்து வருகிறது, மேலும் பணவீக்கமும் அதிகமாக உள்ளது. விலைவாசி உயர்வு மற்றும் அதிகரித்து வரும் கல்விச் செலவு ஆகியவற்றால், இத்தகைய வரவேற்க வரவேற்கத்தக்கது" என்று தெரிவித்தார்.

``முதல்வர் விஜய் கர்நாடக முதல்வரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டால்.!" - வைகோ நம்பிக்கை!

மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டுக்கு பிறகு இந்த மாநாடு நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில், மத்திய உள்துறை அம... மேலும் பார்க்க

4 மாதத்தில் 22 பேருக்கு மரண தண்டனை தீர்ப்பு; நீதிபதி திவாகரிடமிருந்து திரும்ப பெறப்பட்ட 97 வழக்குகள்

உத்தரப்பிரதேச மாநிலம் முஜாபர்நகரில் நீதிபதியாகப் பணியாற்றிய ரவிக்குமார் திவாகர் கடந்த 4 மாதத்தில் 22 பேருக்கு மரண தண்டனை வழங்கி உத்தரவிட்டது பெரிய அளவில் பேசப்பட்டது. அதுவும் 10 வழக்குகளில் 22 பேருக்க... மேலும் பார்க்க

TN Assembly: உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மானியக் கோரிக்கை; அமைச்சர் தாக்கல் | Live Updates

'சட்டமன்றம் இன்று...'கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகப்புத் துறையின் மானியக் கோரிக்கையை அமைச்சர் வெங்கட்ரமணன் இன்று அவையில் தாக்கல் செய்கிறார். மேலும் பார்க்க

``சர்கார் பேனரை கிழித்ததால் அதிமுக ஆட்சியை இழந்தது!'' - அமைச்சர் ஆனந்த் கடும் விமர்சனம்

சட்டமன்றத்தில் இன்று நீர்வளத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்திருந்தது. இதில் பதிலளித்து பேசிய அமைச்சர் ஆனந்த் சர்கார் பட சமயத்தில் நடந்த விவகாரத்தை குறிப்பிட்டு அதிமுகவை கடுமையாக விமர்சித்திர... மேலும் பார்க்க

'சீட் கேட்ட பிரபல சினிமா இயக்குநர்; உடனே மறுத்த முதல்வர் விஜய்!' - அமைச்சர் ஆனந்த் பகிரும் ரகசியம்

சட்டமன்றத்தில் இன்று நீர்வளத்துறையின் மானியக் கோரிக்கையின் மீதான விவாதம் நடந்தது. மானியக் கோரிக்கையில் பதிலளித்து பேசிய அமைச்சர் ஆனந்த், தேர்தலின் போது திரைமறைவில் நடந்த சில விஷயங்களையும் பேசியிருந்தா... மேலும் பார்க்க