செய்திகள் :

'சீட் கேட்ட பிரபல சினிமா இயக்குநர்; உடனே மறுத்த முதல்வர் விஜய்!' - அமைச்சர் ஆனந்த் பகிரும் ரகசியம்

post image

சட்டமன்றத்தில் இன்று நீர்வளத்துறையின் மானியக் கோரிக்கையின் மீதான விவாதம் நடந்தது. மானியக் கோரிக்கையில் பதிலளித்து பேசிய அமைச்சர் ஆனந்த், தேர்தலின் போது திரைமறைவில் நடந்த சில விஷயங்களையும் பேசியிருந்தார்.

Anand
Anand

அவர் பேசியதாவது, ``28 வருடமாக முதல்வருடன் நெருங்கி பழகியிருக்கிறேன். அவர் சினிமாவில் மட்டும்தான் நடிப்பார். வெளியில் நடிக்கமாட்டார். அவரை 'Cult' என்பார்கள். ஆனால், அப்படி ஸ்டாராக இருக்கிறோம் என்ற எண்ணம் அவருக்கு கிடையவே கிடையாது. தலைவரிடம் பேசும்போது இரண்டு வார்த்தை புகழ்ந்து பேசினாலே சேரை திருப்பிக் கொள்வார். அவருக்கு புகழ்ச்சி பிடிக்காது. பெரிய புரொடுயூசர் வந்தாலும் 10 நிமிடம்தான் பேசுவார்.

ஆனால், எளிய நிர்வாகிகளை அழைத்து சென்றால் அவர்களை நலம் விசாரித்து 2 மணி நேரம் பேசுவார்.

Anand
Anand

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தலைவர் படத்தை இயக்கிய பிரபல இயக்குநர் ஒருவர் ஒரு தொகுதியை குறிப்பிட்டு போட்டியிட வாய்ப்பு கேட்டார். ஆனால், 'அங்கே என் மாவட்டச் செயலாளர் நீண்ட காலம் உழைத்திருக்கிறார். மன்னிக்கவும்' என தலைவர் கூறிவிட்டர்." என்றார்.

'தலைவர் ஏண்டா அரசியலுக்கு வந்தார் என நினைத்தேன்...' - அமைச்சர் ஆனந்த் ஓபன் டாக்!

சட்டமன்றத்தில் இன்று நீர்வளத்துறைக்கான மானியக் கோரிக்கை விவாதம் நடந்திருந்தது. இதில் பதிலளித்து பேசிய அமைச்சர் ஆனந்த், 'முதல்வர் ஏண்டா அரசியலுக்கு வந்தார் என நினைத்தேன்?' என்று சுவாரஸ்யமாக பேசியிருக்க... மேலும் பார்க்க

நள்ளிரவு டெல்லி ஃபோன்கால்... கேன்சலாகிறதா அமித் ஷா - எடப்பாடி சந்திப்பு?

தென்னிந்திய முதல்வர்கள் மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக, இன்றிரவு சென்னை வருகிறார் அமித் ஷா. கோவளத்திலுள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் தங்குபவர், பின்னிரவில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனி... மேலும் பார்க்க

"100 நாள் ஆட்சியில், 6 காவல் நிலைய மரணங்கள்; அரசின் ஈடு இணையற்ற சாதனை"- சீமான் கண்டனம்

"100 நாள் ஆட்சியில், 6 காவல் நிலைய மரணங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளதுதான் தவெக கொடுங்கோன்மை அரசின் ஈடு இணையற்ற சாதனை" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அ... மேலும் பார்க்க

மாணவர்கள் போராட்டம் குறித்த சுற்றறிக்கை: "பாசிச அரசியலைத் தொடங்க ஆழம் பார்த்ததா தவெக அரசு?"- கனிமொழி

காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் இடதுசாரி போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து சில நிமிடங்களிலேயே இந்த ... மேலும் பார்க்க

`ஆளுங்கட்சி ஆகிவிட்டோம்' தவெக கூட்டணியை உறுதி செய்த திருமா; பாமக-வுக்கு வைத்த செக்! - பின்னணி என்ன?

தவெக அமைச்சரவையில் அமைச்சர் வன்னி அரசு இடம்பெற்றிருந்தாலும் எந்தக் கூட்டணியில் விசிக இருக்கிறது என்பதை தெளிவாக கூறாமல் திருமாவளவன் குழப்பி வந்தார். 'திமுகவுடன் எங்களது நட்பு தொடர்கிறது' என்று திமுகவிற... மேலும் பார்க்க

மேகமலை: `துணை ராணுவப் படையை அனுப்ப நேரிடும்; முழுமையாக இடித்து அகற்றுங்கள்'- உச்ச நீதிமன்றம் அதிரடி

மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் மாஞ்சோலையைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், இலவம் பஞ்சு தோட்டங்களையும் முழுமையாக அப்புறப்படுத்த உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையான உத்... மேலும் பார்க்க