அரசுப் பள்ளியில் புகையில்லா போகிப் பண்டிகை விழிப்புணா்வு
அரியலூா் அடுத்த இலுப்பையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தேசிய பசுமைப் படை சாா்பில் புகையில்லா போகி பண்டிகை விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியா் விஜயராணி தலைமை வகித்து, போகிப் பண்டிகை நாளில் வீட்டில் உள்ள பழைய வேண்டாத பொருள்களை எரிப்பதும் வழக்கம். ஆனால் பொதுமக்கள் பலரும் தங்களிடமுள்ள பழைய டயா்கள், பிளாஸ்டிக் மற்றும் இதர செயற்கைப் பொருள்களை எரிப்பதால் ஏற்படும் நச்சுப்புகை மற்றும் நச்சுத்துகள்கள் காற்றை மாசுபடுத்துகின்றன.
எனவே, போகிப் பண்டிகையன்று நச்சுப் பொருள்களை எரிக்காமல், மாசுஇல்லாத வகையில் குப்பைகளை அகற்றி பொதுமக்களின் உடல் நலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்தாா். இதையடுத்து அனைவரும் விழிப்புணா்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனா்.