செய்திகள் :

அரசு நிகழ்ச்சி மேடையில் நயினார் நாகேந்திரன்: "மோசமான முன்னுதாரணம்"- நிர்மல் குமார் காட்டம்

post image

நேற்று சென்னை ஐ.ஐ.டி. மெட்ராஸில் இந்திய பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியின் மேடையில் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் அமர்ந்திருந்தார்.

மாணிக்கம் தாகூர் கேள்வி

இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், “மத்திய அரசின் நிகழ்ச்சியில் பிரதமருடன் மேடையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எந்த புரோட்டோகால் மூலம் அமரவைக்கப்பட்டார்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்

நிர்மல் குமார் பதில்

மாணிக்கம் தாகூரின் கேள்விக்குப் பதில் அளிக்கும் வகையில் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார், “ஒன்றிய அரசு நடத்திய நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ. அல்லது எம்.பி. போன்ற எந்தவொரு மக்கள் பிரதிநிதித்துவப் பொறுப்பிலும் இல்லாத கட்சிச் சார்ந்த நபர் எந்தப் புரோட்டோகாலின் அடிப்படையில் மேடையில் அமர வைக்கப்பட்டார் என்று தெரியவில்லை.

இது ஒரு தவறான மற்றும் மோசமான முன்னுதாரணம்.

நிலைமை எவ்வாறு இருக்கும்?

கட்சிச் சார்ந்த நபர்களை விளம்பரப்படுத்துவதற்கோ அல்லது ஊக்குவிப்பதற்கோ (promote) அரசு நிகழ்ச்சிகளைப் பயன்படுத்தக் கூடாது. இத்தகைய நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எதிர்காலத்தில் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

புரோட்டோகால் இல்லாமல் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை அனுமதிக்கும் இத்தகைய தவறான முன்னுதாரணத்தை இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு மாநில அரசுகள் பின்பற்றத் தொடங்கினால் நிலைமை எவ்வாறு இருக்கும்?

எங்களது கட்சியின் நிர்வாகிகள் அரசுப் பள்ளிகளுக்குக்கூடச் செல்லக் கூடாது என்று பொதுச்செயலாளர் அறிவித்துள்ள நிலையில்,

ஒரு மிகப்பெரிய அரசு நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. அல்லது எம்.பி. இல்லாத ஒருவரை அமர வைத்தது மிகப்பெரிய தவறு” என்று பேசியுள்ளார்.

`எந்த விஜய்யை வைத்து நீங்கள் இழிவுபடுத்த நினைக்கிறீர்களோ, அதே விஜய்யே...' - திருமாவளவன்

திண்டிவனத்தில் விசிக மாநாடு நேற்று (அக். 11) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திருமாவளவன், "எந்தச் சூழலிலும் தமிழ்நாட்டு அரசியலில் திருமாவிற்கு ஒரு முக்கியத்துவம் கிடைத்துவிடக் கூடாது என்று நினைக்... மேலும் பார்க்க

#ChaloDilli: உச்ச நீதிமன்றத்தை நோக்கி பேரணி சொல்லும் ராகுல் காந்தி; என்னென்ன கோரிக்கைகளை வைக்கிறார்?

இன்று (அக்டோபர் 12) மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்தியா கூட்டணி தலைவர்கள் மற்றும் இளைஞர்களுடன் டெல்லியில் உச்ச நீதிமன்றத்தை நோக்கிப் பேரணி செல்ல உள்ளார்.இந்தப் பேரணி குறித்து ராகுல் கா... மேலும் பார்க்க

ரூ.1.80 லட்சம் கோடிக்கு கூட்டுறவுக் கடன்கள்: சிறப்பு முகாம்கள் நடக்குது! உங்களுக்கும் கடன் வேண்டுமா?

கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்படும் கடனை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக சிறப்புக் கடன் முகாம்கள் மற்றும் கடன் மேளாக்களை நடத்த திட்டமிட்டுள்ளது தமிழக அரசு.கடன் முகாம்கள் மற்றும் கடன் மேளாக்கள்..? தமிழ... மேலும் பார்க்க

அரசு தேர்வு வினாத்தாள் கசிவு: விசாரணை யை கையில் எடுத்த துகாராம் - போராட்டத்தை கை விட்ட மாணவர்கள்

மகாராஷ்டிராவில் கடந்த ஜூன் மாதம் வெளியான அரசு வேலைக்கான தேர்வு முடிவுகள் வெளியான போது அத்தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக செய்தி வெளியானது. இதையடுத்து அத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ... மேலும் பார்க்க

கைக்குழந்தையுடன் எம்.எல்.ஏ பல்லவி: "இது அரசியல் விளம்பரமாக தோன்றுகிறது" - கார்த்தி சிதம்பரம் சாடல்

சென்னை திரு.வி.க. நகர் தொகுதியின் எம்.எல்.ஏ. பல்லவி. இவர் பெரும்பாலும் தான் போகும் இடமெல்லாம் தன்னுடைய கைக்குழந்தையை எடுத்துச் செல்வார். இது பல முறை செய்திகளில் இடம்பெற்றிருக்கிறது.“கைக்குழந்தையைச் செ... மேலும் பார்க்க