செய்திகள் :

அரசு வேலை என்று போலி நியமன ஆணை; 4 பேரிடம் ரூ.16 லட்சம் மோசடி - மருத்துவர் உட்பட இருவர் மீது வழக்கு!

post image

நாமக்கல் மாவட்டம், முத்துகாட்டுப்பட்டியில் 28 வயது பெண் வசித்து வருகிறார். இந்தப் பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால், அவர் தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில், இவர் தனக்கு அரசு வேலை வாங்கித் தரும்படி திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள செந்தில்குமார் (வயது: 45) என்பவரை அணுகியுள்ளார். அவர், திருச்சியில் உள்ள மருத்துவர் பழனிபாரதி என்பவரை அணுகும்படி கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, திருச்சி அரசு மருத்துவமனை அருகில் மருத்துவர் பழனிபாரதியை அந்த பெண் சந்தித்துள்ளார். அப்போது அவர், புரோகிராமிங் மேனேஜர் வேலை வாங்கித் தருவதாகக் கூறியதைத் தொடர்ந்து, அந்தப் பெண் ரூ.5 லட்சத்தை மருத்துவரிடம் கொடுத்துள்ளார். மேலும், தங்கள் பகுதியில் உள்ள ஒரு பெண் உட்பட 3 பேருக்கு அரசு வேலை வாங்கி கொடுக்கக் கூறி ரூ.11,59,000-த்தை மருத்துவரிடம் கொடுத்துள்ளார்.

trichy

இதைத் தொடர்ந்து, அந்த இளம்பெண்ணுக்கு ஒரு பணி நியமன ஆணையை மருத்துவர் கொடுத்துள்ளார். அதைப் பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட அரசு அலுவலகத்துக்குச் சென்று கேட்டபோது, அது போலியானது என்பது தெரியவந்துள்ளது. இதனால், தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண், இது பற்றி திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில், மருத்துவர் பழனிபாரதி, அவருக்கு உடந்தையாக இருந்த செந்தில்குமார் ஆகியோர் மீது திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். மேலும், செந்தில்குமாரைக் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கல்லூரி மாணவிக்கு லிஃப்ட் கொடுத்து பாலியல் தொல்லை அளித்த வழக்கு; த.வெ.க நிர்வாகி சிறையிலடைப்பு!

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரிமாணவி ஒருவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில்எம்.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவருடன் பக்கத்து ஊரான மூலச்சல்பகுதியைச் சேர்ந்த... மேலும் பார்க்க

வெள்ளை உடும்பு, 16 மலைப்பாம்பு; பாங்காக் டு திருச்சி; ஏர்போர்ட்டில் சிக்கிய 45 அறிய வகை உயிரினங்கள்!

வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையம் வழியாக சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு அரிய வகை வனவிலங்குகள் மற்றும் ஊர்வன உயிரினங்கள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்க... மேலும் பார்க்க

பெரம்பலூர்: வயதான பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு; 15 கி.மீ தூரம் துரத்திச் சென்று பிடித்த பொதுமக்கள்!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள புது வேட்டக்குடி பகுதியைச் சேர்ந்தவர் பாப்பாத்தி. வயதான இவர், ஆடு, மாடுகளை வளர்த்து அதில் கிடைக்கும் வருவாயில் வாழ்க்கையை நகர்த்தி வருகிறார். இந்நிலையில், புது ... மேலும் பார்க்க

திருச்சி: 'ரூம் வாடகையோடு, மாதம் ரூ. 30,000 சம்பளம்' - டிஜிட்டல் அரெஸ்ட் செய்ய உதவிய இன்ஜினீயர் கைது

சென்னை தொலைத்தொடர்பு துறையிலிருந்து திருச்சியில் குறிப்பிட்ட பகுதியிலிருந்து பிராட்பேண்ட் பயன்பாடு அதீத அளவில் இருக்கிறது என்பதைக் கண்டறிந்தனர். தினமும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான டேட்டா திருடப்படுவது ... மேலும் பார்க்க

"உன் மனைவியை என்னால் மறக்க முடியல" - காதலியின் கணவருக்கு மெசேஜ் அனுப்பியவருக்கு அரிவாள் வெட்டு

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெங்கம்புதூர் அருகேயுள்ள தெற்கு புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர் விவேக் (27). இவர் கட்டடம் கட்டும் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். கடந்த 7... மேலும் பார்க்க

காதல் விவகாரத்தில் வீடு புகுந்து சிறுமியின் தாய் கொலை; சிகிச்சையிலிருந்த தந்தையும் உயிரிழந்த சோகம்

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள முதலூரைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன். இவரது மனைவி மேரி விஜிலா. இவர்களுக்கு 15 மற்றும் 14 வயதில் இரண்டு மகள்களும், 8 வயதில் ஒரு மகனும் உள்ளனர். முத்துக... மேலும் பார்க்க