செய்திகள் :

"அரசு வேலை வேணாம்"- மும்பையில் மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கும் உத்தரப்பிரதேச முடிதிருத்தும் தொழிலாளி

post image

இந்தியாவில் அரசு வேலை என்பது அனைவரின் கனவாக இருக்கிறது. இதற்காக சிலர் பல ஆண்டுகள் பயிற்சி எடுத்துக்கொள்வது வழக்கம். ஆனால் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் மும்பையில் முடிதிருத்துபவராக வேலை செய்து செய்து வருகிறார்.

உத்தரப்பிரதேச மாநிலம் அசம்கரைச் சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளியான அவர் மாதம் 1 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார். வாரத்தில் ஆறு நாட்களும் காலை முதல் இரவு வரை வேலை செய்கிறார். அந்த நபரிடம் முடி திருத்தம் செய்து கொண்ட நிதி மேலாளர் ஹர்ஷ் குப்தா மதுசூதன் தனது எக்ஸ் தள பக்கத்தில் முடி திருத்தும் தொழிலாளியுடன் உரையாடிய விபரங்களைப் பகிர்ந்துள்ளார்.

அவர் தனது பதிவில், "இன்று காலை முடி வெட்டிக்கொண்டேன். எனக்கு முடிதிருத்தம் செய்த தொழிலாளியுடன் பேசியபோது அந்தத் தொழிலாளி மும்பையில் சில காலமாக இருக்கிறார், ஆனால் அசம்கரில் இருந்து வருகிறார்.

வாரத்தில் ஆறு நாட்கள் காலை முதல் இரவு வரை வேலை செய்கிறார், அவருடைய அடிப்படை செலவுக்குப் பிறகு மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார். இந்தியக் குடும்பங்களால் நிலையான மற்றும் விரும்பத்தக்க விருப்பமாகப் பார்க்கப்படும் அரசாங்க வேலை பற்றிய யோசனை குறித்தும் உரையாடப்பட்டது.

இருப்பினும், முடிதிருத்தும் நபர் அரசு வேலை விவகாரத்தில் வேறுபட்ட கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தார். கடினமாக உழைக்க விரும்பும் மக்களுக்குப் போதுமான வாய்ப்புகள் இருப்பதாக முடிதிருத்தும் நபர் நம்பினார். அவரது வேலை மற்றும் சுயாட்சியை அவர் விரும்புவதால், ஓர் அரசாங்க வேலை வழங்கப்பட்டாலும் அதை எடுக்க மாட்டேன் என்று கூறினார்.

உத்தரப்பிரதேசம் குறித்தும் அவரிடம் கேட்டேன். அவர் முன்பு தனது கிராமத்தில் இருந்து லக்னோ செல்ல 7-8 மணி நேரம் ஆகும் என்று கூறினார். ஆனால் இப்போது மதிய உணவு மற்றும் தேநீருக்காக நிறுத்தும் நேரத்தில் நீங்கள் லக்னோ சென்று வந்துவிட முடியும்.

உங்கள் கிளாஸ் தேநீரை நெடுஞ்சாலைகளில் கொட்ட வாய்ப்பில்லை. அவை மிகவும் நன்றாக உள்ளன. நாடு முழுவதும் தான் கண்ட வளர்ச்சிப் பணிகள் குறித்தும் முடிதிருத்தும் நபர் மகிழ்ச்சி தெரிவித்தார். அவர் நாட்டின் வளர்ச்சிப் பணிகளால் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

கிராமத்தில் தனது குடும்பத்திற்குச் சில திட்டப் பலன்கள் கிடைத்ததாகவும் ஆனால் நகரத்தில் இல்லை" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனைப் பார்த்ததும் நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர்.

ஒரு பயனர் வெளியிட்டுள்ள பதிவில், "சென்னையில் உள்ள பெரும்பாலான முடிதிருத்தும் தொழிலாளர்கள் அசம்கர், மீரட் மற்றும் கான்பூர் வகையைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு மாதம் ரூ. 25,000–30,000 சம்பளம் மற்றும் தங்குமிடம் கிடைக்கிறது. உ.பி.யில், அவர்களின் வருமானம் ரூ. 7,000–8,000 ஐத் தாண்ட முடியாது, சிறந்த 10 நகரங்களில் கூட அவர்கள் ரூ. 1 லட்சம் சம்பாதிக்க முடியும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

தாராபுரம் தொகுதியில் வெற்றி: பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடிய த.வெ.க- வினர்

தாராபுரம் இடைத்தேர்தல் தொகுதி வெற்றியை கொண்டாட்டம்தாராபுரம் இடைத்தேர்தல் தொகுதி வெற்றியை கொண்டாட்டம்தாராபுரம் இடைத்தேர்தல் தொகுதி வெற்றியை கொண்டாட்டம்தாராபுரம் இடைத்தேர்தல் தொகுதி வெற்றியை கொண்டாட்டம்... மேலும் பார்க்க

21 மனைவிகள்… பெயர்களே நினைவில் இல்லை! - பங்களாதேஷ் யாசகரின் வித்தியாசமான வாழ்க்கை

ஒரு திருமணத்தையே சமாளிப்பது பெரிய விஷயம் என பலரும் நினைக்கும் நிலையில், பங்களாதேஷைச் சேர்ந்த 35 வயது நபர் ஒருவர் தனக்கு 21 மனைவிகள் இருப்பதாக கூறியிருப்பது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.“அவங்களே வந்து ... மேலும் பார்க்க

'மேடம் பாஸ்வேர்டு அனுப்புங்க' - ஐபோனை திருடிச்சென்ற திருடன் வைத்த நூதன கோரிக்கை

ரயில்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிக அளவில் மொபைல் போன்கள் திருடப்படுவது வழக்கமாக நடக்கும் ஒன்றாக இருக்கிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டெஹ்ராடூனில் இது போன... மேலும் பார்க்க

மும்பை உணவகத்தில் தோசையில் செத்த எலி; ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டிய பெண் கைது; பின்னணி என்ன?

கடந்த மாதம் 24ம் தேதி மும்பை போரிவலியில் உள்ள ராதாகிருஷ்ணா ஹோட்டலுக்கு மான்சி ஆச்சார்யா என்ற பெண் இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு குழந்தையுடன் சாப்பிட வந்திருந்தார். அவர்கள் மைசூர் மசாலா தோசை ஆர்டர் செய்தனர... மேலும் பார்க்க

flydubai தாக்குதலில் இந்திய விமானி ஸ்மித் மச்சாரின் மண்டை ஓட்டில் முறிவு; சவுதியில் அறுவை சிகிச்சை!

டெல் அவிவ் சென்ற ஃப்ளை துபாய் விமானத்தை விபத்துக்குள்ளாக்கும் சக விமானியின் முயற்சியை இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சார் முறியடித்தார். இந்த முறியடிக்கும் முயற்சியில் விமானத்தின் பைலட் அறைக்குள் அவர... மேலும் பார்க்க

`இந்தியாவின் ராக்ஸ்டார்; அவரைக் கண்டால் அஞ்சுகிறார்கள்'- துகாராம் முண்டேயை புகழும் நியூயார்க் டைம்ஸ்

மகாராஷ்டிராவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையராக இருப்பவர் துகாராம் முண்டே. இப்பதவிக்கு வந்த நாளில் இருந்து அவர் எடுத்து வரும் நடவடிக்கைகளால் மாநிலம் முழுவதும் உள்ள உணவகங்களின் உரிமையாளர்கள்... மேலும் பார்க்க