செய்திகள் :

`` `அறிவாலயத்தின் அடி செங்கல் வரை உருவுவேன்' என்றார்; போய் வேலையை...’ - செந்தில் பாலாஜி

post image

கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட கோட்டைமேடு பகுதி, பெரிய கடைவீதி பகுதிகளில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி நேற்று மாலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, ‘’திமுகவின் உதயசூரியன் சின்னம் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும். வார்டு வாரியாக மக்களை நடந்து சென்று சந்தித்து வருகிறோம். மீண்டும் மக்களை வீடுகளுக்கு நேரில் சென்று சந்திப்போம். மக்கள் சிரித்த முகத்துடன் எங்களை வரவேற்கிறார்கள். முதலமைச்சர் தமிழ்நாட்டிற்கு கொடுத்த ஏராளமான திட்டங்கள் மக்களை மகிழ்ச்சியில் வைத்துள்ளது.

எங்கள் முதலமைச்சர், துணை முதலமைச்சர், எங்கள் கட்சி பற்றி மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கவலைப்பட  என்ன இருக்கிறது? மூன்று முறை ஆட்சிக்கு வந்த பாஜக தமிழ்நாட்டிற்கு செல்லும்படி என்ன திட்டத்தை செய்தார்கள்? திமுக மற்றும் துணை முதலமைச்சர் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

திமுக பரப்புரை
திமுக பரப்புரை

தமிழ்நாட்டிற்கு தேவையான நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை. ஆனாலும் பொருளாதார முன்னேற்றத்தில் இந்தியாவில் முதல் மாநிலமாக நாம் இருக்கிறோம் என மத்திய அரசுதான் கூறியது. அப்படி இருக்கும் போது தமிழ்நாட்டில் வளர்ச்சி இல்லை என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் டபுள் இன்ஜின் சர்க்கார் என்றார்களே அப்படி என்ன வளர்ச்சி திட்டங்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தார்கள்?. மாநில பொறுப்பில் இருந்த போது அறிவாலயத்தின் அடி செங்கல் வரை உருவுவேன் என்ற சொல்லிய நபருக்கு, செங்கல் உருவிக்கிடக்கிறது. போய் அவரை டவுசரை போட்டுக்கொண்டு வேலையை பார்க்கச் சொல்லுங்கள். அவர் செங்கல்லை கட்ட சொல்லுங்கள்” என்றார்.

தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

வருகிற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை மாற்றி வருகிறது இந்திய தேர்தல் ஆணையம்.அதன் ஒரு பகுதியாக, இப்போது தமிழ்நாடு உள்துறை செயலாளர் மாற்றப்பட்டுள... மேலும் பார்க்க

"பா.ஜ.க-வுக்கு பன்முகம் கிடையாது, கோர முகம் தான் இருக்கிறது"- செல்வபெருந்தகை கடும் தாக்கு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கிள்ளியூர் வேட்பாளர் ராஜேஷ்குமார், குளச்சல் வேட்பாளர் தாரகை கத்பர்ட், விளவங்கோடு வேட்பாளர் டி.டி.பிரவீன் ஆகியோரை ஆதரித்து தமிழக காங்கிரஸ் தலைவ... மேலும் பார்க்க

முழுமையாக திறக்கப்படாத ஹார்முஸ் ஜலசந்தி - ஈரான் 'இதை' மறந்ததே காரணம்!

மூன்று நாள்களாக ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டுள்ளது.இருந்தும் ஈரான் அனுமதித்த கப்பல்கள் மட்டும் ஹார்முஸைக் கடந்து வருகிறது‌.ஆனால், அந்தக் கப்பல்களையும் வழக்கமான பாதையில் அல்லாமல், ஹார்முஸிலேயே வேறு பா... மேலும் பார்க்க

TVK Vijay: "அனைவரும் களத்தில் இறங்கி பணியாற்றுங்கள்.!"- தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டியிட இருக்கிறார். இந்நிலையில் தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்க... மேலும் பார்க்க

விருதுநகரில் வெற்றி வாகை சூடுவாரா விஜய பிரபாகரன்? - எப்படி இருக்கிறது களம்?

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், விருதுநகர் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியில், தே.மு.தி.க-வின் மாநில இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்... மேலும் பார்க்க

'திமுக தோற்றால் கனிமொழி தனி கட்சி ஆரம்பிப்பார்!' - அண்ணாமலை ஆரூடம்

கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து, ரத்தினபுரி பகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, “20... மேலும் பார்க்க